பங்குச்சந்தையில் வெற்றி பெறுவது எப்படி ?
பங்குச்சந்தையில் வெற்றி பெறுவது எப்படி ? பங்குச்சந்தையில் மட்டுமல்ல , பொதுவாக நீங்கள் ஈடுபடும் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதற்கான நான்கு நிலைகள் ... 1. அறியாதவை எவை என்று அறியாத நிலை கணவர் கார் ஓட்டும் போது அருகில் அமர்ந்து எப்படிக் கார் ஓட்ட வேண்டும் என்று கணவருக்கு அறிவுரைகளை அள்ளி வீசும் மனைவியைப் பார்த்திருப்பீர்கள் . இத்தனைக்கும் மனைவிக்குக் கார் ஓட்டத் தெரியாது . இத்தகைய போக்கை பங்குச்சந்தை உட்பட எல்லாத் துறைகளிலும் காணலாம் . இது தான் அறியாதவை எவை என்று அறியாத நிலை . உலகின் 95 சதவீத மக்கள் இந்த முதல் நிலையிலேயே வாழ்கின்றனர் . ஒரு சமயம் என் நண்பர் ஒருவர் ஹுரோ ஹோண்டா நிறுவனம் 8000 சதவீதம் பங்காதாயம் வழங்கவிருப்பதாகவும் அந்த நிறுவனப் பங்கை வாங்குமாறும் அறிவுரை வழங்கினார் . வங்கி நிரந்தர வைப்பு வட்டி அப்போது 10 சதவீதம் என்பதாக இருந்தது . இந்த 10 சதவீதத்தையும் ஹீரோ ஹோண்டாவின் 8000 சதவீதத்தையும் ஒப்பிட்டவராக , அந்த நிறுவனப் பங்கை வாங்க மாட்டேன் என்று சொன்ன என்னை ஙே என்று பார்த்தார். இவர் பரவாயில்லை . நான் என் நண்பர் ஒருவருக்கு ஒரு நிறுவனப் பங்கை நான் ஆயிரங்களில் வைத்திருப்பதாகவும்...