Posts

Showing posts from March, 2026

போர்த்தொழில் போக்கு

போர்த்தொழில் போக்கு 1. Peace is not an absence of war, it is a virtue, a state of mind, a disposition for benevolence, confidence, justice- Baruch Spinoza  அமைதி என்பது போர் இல்லாமை மட்டுமல்ல; அது ஒரு நற்பண்பு, ஒரு மனோநிலை, ஒரு நன்னெறி, நம்பிக்கை மற்றும் நீதிக்கான ஒரு மனப்பாங்கு. 2. There never was a good war or a bad peace- Benjamin Franklin நல்ல போர் என்றோ, கெட்ட அமைதி என்றோ எதுவுமே இருந்ததில்லை. 3. How can you have a war on terrorism when war itself is terrorism? - Howard Zinn பயங்கரவாதமே ஒரு போர் எனும் போது, பயங்கரவாதத்திற்கு எதிராக நீங்கள் எப்படி ஒரு போரை நடத்த முடியும்? 4. War is what happens when language fails- Margaret Atwood மொழி தோற்றுப்போகும் புள்ளியில் தான் போர் தொடங்குகிறது. 5. War does not determine who is right- only who is left- Bertrand Russell யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதைப் போர் தீர்மானிப்பதில்லை—யார் எஞ்சியிருக்கிறார்கள் என்பதை மட்டுமே அது தீர்மானிக்கிறது. 6. The more you sweat in peace, the less you bleed in war- George S Patton அமைதிக்காக நீங்கள் எவ்வ...

பங்கு முதலீடுகளுக்குப் பணம் திரட்டுவது எப்படி?

பங்கு முதலீடுகளுக்குப் பணம் திரட்டுவது எப்படி? பங்குச்சந்தையில் தொடர்ந்தவாக்கிலான முதலீடுகளுக்குச் சிறு முதலீட்டாளர்களிடம் போதுமான பணம் இருக்கப்பெறாது என்பது உண்மை தான். அதுவும் buy and hold முதலீட்டு உத்திகளைத் தவம் போல் கடைப்பிடிப்பவர்களுக்கு இது இன்னும் கடினமான ஒன்றாக இருக்கும். மேலும், பங்குச்சந்தை முதலீடுகளுக்கு பூஜ்ய அல்லது குறை சதவீத வட்டியில் float money கிடைக்கப்பெற நாம் ஒன்றும் வாரன் பஃபெட் இல்லை. எனில், தொடர்ந்தவாக்கிலான பங்கு முதலீடுகளுக்கான பணத்தைத் திரட்டுவது எப்படி? வாருங்கள், பார்க்கலாம். Ford நிறுவனத்திற்கு ஒருமுறை பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கிகள் Ford நிறுவனத்திற்குக் கடன் வழங்கத் தயாராக இருந்தன. ஆனால், Henry Ford க்குக் கடன் என்ற வார்த்தையே பிடிக்காது. Henry Ford, அவரது நிறுவனத்தைத் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்தார்.  தொழிற்சாலையில் வேண்டாத பொருட்களைக் கழிக்கும் வேலை மும்முரமாக நடைபெற்றது. அதன் மூலமாக நிறுவனத்திற்குத் தேவைக்கு அதிகமாகவே பணம் கிடைக்கப்பெற்றது. அதே மாதிரி நீங்கள் உங்கள் பங்குத்தொகுப்பையும் அவ்வப்போது பழுது பாருங்கள். அதன் மூலமாகவே உங்களுக்க...

எழுதுவது எப்படி?

எழுதுவது எப்படி? Writing is thinking in paper என்று William Zinsser சொன்னதுடன் எனக்கு முழு சம்மதம். எழுதுவது என்பது காகிதத்தில் சிந்திப்பது. அல்லது Google Notes ல் சிந்திப்பது. கூறியது கூறல் கூடாது. தேவையில்லாத வாசகங்கள் தேவையில்லாத இடங்களில் இடம் பெறக்கூடாது. ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செக்காவ் கூறியது மாதிரி, திரைப்படத்தில், துப்பாக்கி ஒன்றை சுவரில் மாட்டியிருப்பதாகக் காண்பித்தால் படம் முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்தே ஆக வேண்டும். வாசகங்களை அமைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 'கண்டேன் சீதையை' என்பதற்கும் 'சீதையைக் கண்டேன்' என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இராமன் சீதையைக் காணாமல் கண்ணீர் விட்டுக் கவலையே வடிவாய் இருக்கிறான். சீதையைத் தேடிச் சென்ற அனுமன் அசோகவனத்தில் சீதை இராவணனால் சிறை பிடிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதனை இராமனிடம் தெரிவிக்க வருகிறான். அனுமன், சீதையைக் கண்டேன் என்று சொல்லியிருக்கலாம். சீதையை முன்னிறுத்திச் சொல்லும் போது அனுமன் சீதையைக் கண்டானா இல்லையா என்பது தொக்கி நிற்கிறது. அந்தத் தொக்கம் ஒரு வினாடி தான் என்றாலும் இராமனுக்கு அந்தக் கஷ்ட...