Posts

Showing posts with the label அடிப்படைகள்

பங்குச்சந்தை நகை அகராதி- 2

பங்குச்சந்தை நகை அகராதி- 2 Funny stock market dictionary- 2 (நகைச்சுவைக்காக மட்டும். யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை) 52 Week high stocks 52 வார உயர்வு என்று முதலீடு செய்யப்படாத பங்குகள்; தொடர்ந்து 52 வார உயர்வில் வர்த்தகமாகும் பங்குகள். 52 Week low stocks 52 வார குறைவு என்று முதலீடு செய்யப்படும் பங்குகள்; தொடர்ந்து 52 வார குறைவில் வர்த்தகமாகும் பங்குகள். Analyst பங்குகளை வாங்க (விற்க)  உற்சாகப்படுத்துபவர்கள். Average down பணம் இருக்கும் வரை அல்லது பங்கு இருக்கும் வரை மேற்கொள்ளப்படும் முதலீடு. Banker காற்றிலிருந்து பணத்தை வரவழைப்பவர். Capitalism பொருளாதாரம் நன்கு செயல்படும் போது பாராட்டப்படுவது. Conservative விளிம்புக் கணக்கு (Margin Account) இல்லாதவர். Credit Rating companies நிறுவனங்கள் திவாலான பின்னர் தரவரிசையைத் தடாலடியாகக் குறைக்கும் நிறுவனங்கள். Currency Market 24 மணிநேர சூதாட்ட நிலையம். Depression பொருளாதார நிபுணர் வேலை இழந்தால் அதற்காக அவர் சொல்லும் காரணம். Index Funds இயலாமை என்பதன் உண்மையான வெளிப்பாடு. Inflation பணக்காரர் ஆவதற்கான சுலபமான வழிமுறை. IPO லாட்டரிச் சீட்டு...

பங்கு முதலீடுகளுக்குப் பணம் திரட்டுவது எப்படி?

பங்கு முதலீடுகளுக்குப் பணம் திரட்டுவது எப்படி? பங்குச்சந்தையில் தொடர்ந்தவாக்கிலான முதலீடுகளுக்குச் சிறு முதலீட்டாளர்களிடம் போதுமான பணம் இருக்கப்பெறாது என்பது உண்மை தான். அதுவும் buy and hold முதலீட்டு உத்திகளைத் தவம் போல் கடைப்பிடிப்பவர்களுக்கு இது இன்னும் கடினமான ஒன்றாக இருக்கும். மேலும், பங்குச்சந்தை முதலீடுகளுக்கு பூஜ்ய அல்லது குறை சதவீத வட்டியில் float money கிடைக்கப்பெற நாம் ஒன்றும் வாரன் பஃபெட் இல்லை. எனில், தொடர்ந்தவாக்கிலான பங்கு முதலீடுகளுக்கான பணத்தைத் திரட்டுவது எப்படி? வாருங்கள், பார்க்கலாம். Ford நிறுவனத்திற்கு ஒருமுறை பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கிகள் Ford நிறுவனத்திற்குக் கடன் வழங்கத் தயாராக இருந்தன. ஆனால், Henry Ford க்குக் கடன் என்ற வார்த்தையே பிடிக்காது. Henry Ford, அவரது நிறுவனத்தைத் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்தார்.  தொழிற்சாலையில் வேண்டாத பொருட்களைக் கழிக்கும் வேலை மும்முரமாக நடைபெற்றது. அதன் மூலமாக நிறுவனத்திற்குத் தேவைக்கு அதிகமாகவே பணம் கிடைக்கப்பெற்றது. அதே மாதிரி நீங்கள் உங்கள் பங்குத்தொகுப்பையும் அவ்வப்போது பழுது பாருங்கள். அதன் மூலமாகவே உங்களுக்க...

இலவசப் பங்களிப்புகளை இனங்காண்பது எப்படி?

இலவசப் பங்களிப்புகளை இனங்காண்பது எப்படி? நாட்கள் என்னும் பூக்கள் கொண்டு தான் ஆண்டுகள் என்னும் மாலைகள் கட்டப்படுகின்றன. ஆனால் நாட்கள் பார்க்காததையெல்லாம் ஆண்டுகள் பார்க்கின்றன. ஒரு மலையை அதன் அருகிலிருந்து பார்க்க முடியாது. காலம் என்பது தூரத்தின் மறு வடிவம்.                *                *                * எந்தெந்த நிறுவனங்கள் இலவசப்பங்குகளை வெளியிடும் என்று ஊகிக்க ஒரு வழி இருக்கிறது. பொதுவாக நிறுவனங்கள் தத்தமது வெள்ளி விழா ஆண்டு (25) பொன் விழா ஆண்டு (50) வைர விழா ஆண்டு (60) மற்றும் நூற்றாண்டில் இலவசப்பங்குகளை வெளியிடும். 2026 ல் எந்தெந்த நிறுவனங்கள் இத்தகைய ஆண்டுகளைக் கடக்கின்றன என்ற பட்டியலைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவற்றை அடிப்படைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அவை மதிப்பு முதலீடாக வர்த்தகமாகிறதா என்று சரி பார்க்கவும். பின்னர் இத்தகைய பங்குகளைக் காலப் பன்மயமாக்கம் என்ற வகையில் வாங்கலாம். இதன் இன்னொரு அனுகூலம் என்னவென்றால் இந்த நி...

அளவைகள் பலவிதம்

அளவைகள் பலவிதம் உங்களிடம் உள்ள சொத்துக்களை உங்களால் துல்லியமாகக் கணக்கிட முடிந்தால் நீங்கள் செல்வந்தர் அல்ல என்று ஒரு உலகச் செல்வந்தர் கூறியிருக்கிறார். செல்வந்தர்கள் மட்டுமல்ல, சாதாரணர்களின் செல்வத்தைக் கணக்கீடு செய்வதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. இந்த செல்வக் கணக்கீடு குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம்.  முதலில் bouncing capital என்பதாக அழைக்கப்படும் பங்குகளை எடுத்துக் கொள்ளலாம். பங்கு வர்த்தகம் நடைபெறும் காலங்களில் முதலீட்டாளர் செயலி(Investor App)யைத் திறந்தால் உங்கள் முதலீடு துள்ளிக் குதிப்பதைக் கண்கூடாகக் காணலாம். பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றதும் அன்றைய உங்கள் சொத்தின் மதிப்பு எவ்வளவு என்பதைச் செயலி காட்டும். செயலி தெரிவிப்பது பங்கின் விலைகளை மட்டுமே. மதிப்பை அல்ல. பங்கின் விலை வேறு அவற்றின் மதிப்பு வேறு என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எந்தச் செயலியும் பங்குகளின் மதிப்பைத் தெரிவிக்காது. அவைகளால் தெரிவிக்கவும் முடியாது. மேலும், இந்தப் பங்குகளின் மதிப்பு என்பது ஆளாளுக்கு மாறுபடும். பங்குகளின் மதிப்பு பார்க்கிறவர்களின் பார்வையில் இருக்கிறது. சில சமயங்களில் இந்த வேறுபாடு வெளிப்படையாகத...

கட்டற்ற தோட்டம்

  கட்டற்ற தோட்டம் " நூற்றுக்கணக்கான நிறுவனப்பங்குகளை வாங்கி வைத்திருப்பதான உத்தி சிறந்த ஒன்று தானா? முதலில் இத்தனை பங்குகளையும் அடித்தொடர (tracking) வேண்டும். ஒவ்வொரு பங்கும் பங்குத்தொகுப்பில் சிறிய இடத்தை வகித்தால் மொத்த வருமானத்தில் அதன் தாக்கம் குறைவாக மட்டும் தானே இருக்கும்? மேலும், ஒரு பங்கு, பங்குத்தொகுப்பின் மொத்த மதிப்பில் 5 சதவீதத்திற்கும் அதிகமானால் அத்தகைய பங்குகளை விற்று அதனை மீண்டும் 5 சதவீதம் என்ற அளவிற்குக் கொண்டு வர வேண்டாமா? " இந்தக் கேள்விக்குப் பதிலாக உங்களுக்கு இரண்டு கதைகள் சொல்ல விரும்புகிறேன்.  ஒரு ஊரில் ஒரு கணவன் மனைவி இருந்தனர். மனைவி, முதலீட்டு ஆலோசகர் ஒருவரின் வழிகாட்டுதலில் முதலீட்டை மேற்கொண்டார். ஆலோசகர் அவ்வப்போது இந்தப் பங்குகளை வாங்குங்கள் என்றால் மனைவியின் கணக்கில் கணவர் அந்தப் பங்குகளை வாங்குவார். இந்தப் பங்குகளை விற்று விடுங்கள் என்று ஆலோசகர் சொன்னால் அந்தப் பங்குகளை விற்று விடுவார். இவ்வாறு காலச்சக்கரம் உருண்டோடியது. ஒரு நாள் துரதிருஷ்டவசமாகக் கணவர் இறந்து விடுகிறார். இறந்து போன கணவர் தனிப்பட்ட முறையில் பங்குகளில் முதலீடு செய்து வந்தது மனைவ...

விலை வருவாய் விகிதம்- ஒரு விளக்கம்

விலை வருவாய் விகிதம்- ஒரு விளக்கம் All about PE Price Earning multiple என்பதாக அழைக்கப்படும் விலை வருவாய் விகிதம் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வில் (Fundamental Analysis) ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. நிறுவனத்தின் ஒரு பங்கு, 15 ரூபாய் வருவாய் (Earnings Per Share - EPS) ஈட்டுவதாகக் கொள்ளலாம். சந்தையில் நிறுவனப் பங்கின் விலை 300 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது என்றால் அதன் விலை வருவாய் விகிதம் (Price Earning multiple - PE) 300 ÷ 15 அதாவது 20. இதற்கான சமன்பாடு PE = Share price ÷ EPS  ஒவ்வொரு துறைக்கும் இது மாதிரி ஒவ்வொரு PE இருக்கிறது. இது போக ஒரு துறை சார்ந்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு PE இருக்கிறது. அப்புறம் காளைச்சந்தை PE. கரடிச்சந்தை PE. Forward PE என்று சொல்லப்படும் முன்னோக்கு PE. பின்னோக்கு PE. வரலாற்று PE (Historic PE) முதலீட்டாளர்களின் தலை சுழன்றடிக்க இந்த PE விகிதம் மட்டுமே போதுமானது. எனில் எந்த PE ல் கவனம் கொள்வது? வாருங்கள், பார்க்கலாம். ஒரு பங்கு 100 ரூபாய்க்கு வர்த்தகமாகலாம். அல்லது 10000 ரூபாய்க்கு வர்த்தகமாகலாம். 100 ரூபாய் மலிவு என்றோ 10000 ரூபாய் உயர்வு என்றோ நாம...