Posts

Showing posts with the label நிதி மோசடிகள்

சைக்கிள் திருடர்கள் ஜாக்கிரதை

சைக்கிள் திருடர்கள் ஜாக்கிரதை . புரட்சி நடைபெறுவதற்கு முந்தைய ரஷ்யாவில் சைக்கிள் போன்ற வாகனங்களை விரைவாக விற்பதற்கு மோசடியான சில வழிமுறைகளை விற்பனையாளர்கள் கையாண்டனர் . உதாரணமாக நாளிதழ்களில் பின்வருமாறு விளம்பரம் கொடுப்பார்கள் .  ஒரு சைக்கிள் வெறும் 10 ரூபிள் (ரஷ்ய நாணயம்) மட்டுமே . 50 ரூபிள் மதிப்புள்ள சைக்கிள் 10 ரூபிளுக்கு . முந்துங்கள் . இச்சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே . இலவச விவரங்களுக்கு எங்களை அணுகவும் . விவரம் என்னவென்றால் , நிறுவனம் நான்கு சீட்டுக்களை (coupon) உங்களுக்குக் கொடுக்கும் . அந்த சீட்டுக்களை நீங்கள் நான்கு நபர்களிடம் தலா பத்து ரூபிளுக்கு விற்க வேண்டும் . பின்னர் உங்களுக்கான பத்து ரூபிளையும் சேர்த்து மொத்தம் ஐம்பது ரூபிள்களை நிறுவனத்திடம் கொடுத்து சைக்கிளைப் பெற்றுக் கொள்ளலாம் . பத்து ரூபிளுக்கு உங்களுக்கு சைக்கிள் கிடைப்பதென்னவோ உண்மை தான் . ஆனால் ... முதன்முதலில் இந்தத் திட்டத்தில் சேருபவருக்கு சீட்டுக்களை விற்பதில் பெரிய பிரச்னை எதுவும் இருக்காது . இந்தத் திட்டத்தில் ஆர்வமுடைய நான்கு பேரை மட்டும் அவர் இனங்கண்டால் போதுமானது . அந்த நால்வர் ஒவ்வொருவரும் ...

வேகம் விவேகம் அல்ல .

வேகம் விவேகம் அல்ல . ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் எங்கள் வியாபாரத்தில் பங்குதாரர் ஆகலாம் . நிலம் , பல்பொருள் அங்காடி , காப்பீடு , தங்கம் , உணவகம் ... என்று 18 வகையான தொழில்களில் முதலீடு செய்கிறோம் என்று வகையாக முதலீட்டாளர்களை (?) ஏமாற்றியிருக்கிறது ஒரு நிறுவனம் . ஒரு இலட்சம் ரூபாய்க்கு எங்கள் நிறுவனப்பங்குகளை வாங்கினால் மாதம் 10000 ரூபாய் இலாபப் பங்கீடு தருகிறோம் , இரண்டு ஆண்டுகளில் உங்கள் ஒரு இலட்சம் ரூபாயைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லி 161 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறது . முதலில் இந்த மாதிரி தனிப்பட்ட எவரும் இவ்வளவு எண்ணிக்கையில் பங்குகளை வெளியிட முடியாது . பங்கு வெளியீட்டுக்கென்று ஏகப்பட்ட சட்ட திட்டங்கள் இருக்கின்றன . இம்மாதிரி வருமானம் தரக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் (ஒருவேளை) இருந்தால் அதனை யாரும் யாருடனும்  பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள் . இன்னொன்று 18 வகையான வியாபாரங்களில் ஈடுபடுவதற்கான அவர்களின் தகுதி என்ன என்பதைப் பார்க்க வேண்டும் . எனக்கென்னவோ அவர்கள் ஒரேயொரு வியாபாரத்தை மட்டும் செவ்வனே செய்வதாகத் தோன்றுகிறது . அது முதலீடு செய்பவர்களை ...