Posts

Showing posts with the label பங்குச் சலிப்பான்

அறம்

அறம் Ethics  பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்: 1. மிகை முதல் நீர்க்காமை 2. மிகை கடன் இல்லாமை 3. நிறுவனர் பங்கு 4. தரமான வளர்ச்சி 5. அகழி 6. அறம் இவற்றில் அறம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அறம் என்பது சலிப்பானின் பிற அளவுருக்கள் மாதிரி இருக்கப் பெறாது. மிகை முதல் நீர்க்காமை என்ற கணக்கில் அதனைக் குறைவாகக் கூட நீர்க்க முடியாது. அதனை அடமானம் வைத்துக் கடன் வாங்க முடியாது. SEBI விதிகளின் படி அதனை 75 சதவீதம் மட்டும் வைத்துக் கொள்ள முடியாது. தரமான வளர்ச்சிக்கு அறம் 100 சதவீதம் அவசியம். நீண்ட கால அடிப்படையில் 20 சதவீத அறப் பெருக்கத்தில் நிறுவனம் வளர்ந்து வருகிறது என்று கூற முடியாது. அறமே அகழியாகவும் செயல்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அறம் என்பது ஒரு வாழ்க்கை முறை. நாளும் தரமாக உயர்ந்து வரும் நிறுவனம் ஒன்றின் ஒரு பங்குச் சம்பாத்தியம் (EPS) இந்த ஒரு பங்குச் சம்பாத்தியத்தைப் பின்தொடரும் அதன் விலை-வருவாய் விகிதம் (PE) இவற்றின் பெருக்கமே பங்குச்சந்தை. ஆதாரமாக அது அறத்தின் மேல் நிலை கொண்டுள்ளது. அறம் போனால் அனைத்தும் போனதாக அர்த்தம். Satyam Computers ன் கற்பனைக் கணக்கு விவக...

அகழி

அகழி  Moat  பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்: 1. மிகை முதல் நீர்க்காமை 2. மிகை கடன் இல்லாமை 3. நிறுவனர் பங்கு 4. தரமான வளர்ச்சி 5. அகழி 6. அறம் இவற்றில் அகழி குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். முதலாளித்துவத்தின் (capitalism) பெரும் பிரச்னை என்னவென்றால் ஒரு நிறுவனம் வெற்றி பெற்றால் அதனை நகலெடுக்க ஓராயிரம் நிறுவனங்கள் புற்றீசல் மாதிரி கிளம்பி விடும். இந்த மாதிரி நகலெடுக்க விடாமல், புதிய நிறுவனங்கள் போட்டிக்கு வராமல் தடுக்கும் அரணாக அகழி செயல்படுகிறது. அகழி முதலீட்டின் சில முக்கிய வகைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 1. வலைப்பின்னல் விளைவு (Network Effect): CAR TRADE TECHNOLOGIES, INDIAMART INTERMESH, INFO EDGE, MSTC  ஒரு தயாரிப்பு அல்லது சேவையை மிகையான மக்கள் பயன்படுத்தும் போது அதன் மதிப்பு மீமிகைப் பெருக்கத்தில் அதிகரிப்பது வலைப்பின்னல் விளைவு (Network Effect) என்று அழைக்கப்படுகிறது.   ஒரு நாட்டில் ஒரேயொரு நபரிடம் மட்டும் தொலைபேசி இருந்தால் அதனால் என்ன பயன் கிடைக்கப்பெறும்? அவர் யாருடனும் பேச முடியாது. அவரிடமும் யாரும் பேச முடியாது. ஆனால் நூறு பேரிடம் தொலைபேசி இருந...

தரமான வளர்ச்சி

தரமான வளர்ச்சி Quality Growth  பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்: 1. மிகை முதல் நீர்க்காமை 2. மிகை கடன் இல்லாமை 3. நிறுவனர் பங்கு 4. தரமான வளர்ச்சி 5. அகழி 6. அறம் இவற்றில் தரமான வளர்ச்சி குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். நிறுவனங்கள், நீண்ட கால அளவில், தத்தமது நிகர இலாபத்தை, குறைந்த பட்சமாக 20 சதவீத கூட்டுப்பெருக்கம் என்ற அளவில் வளர்த்துச் செல்ல வேண்டும். 100 ரூபாய் நிகர இலாபம் ஈட்டும் நிறுவனம், அடுத்த ஆண்டு 120 ரூபாய் ஈட்ட வேண்டும். அதற்கடுத்த ஆண்டில் 144 ரூபாய் ... என்றவாறு அதனை எடுத்துச் செல்ல வேண்டும். இங்கு நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இலாபத்தின் மேல் இலாபம் ஈட்டுவதற்கான தளத்தை அது கொண்டிருக்க வேண்டும். பொதுவாக நிறுவனங்கள் சிறிய அளவில் தொடங்கி வளர்ந்து வருகையில் இது எட்டப்படக்கூடிய ஒரு உயரமாக இருக்கும். ஒரு கட்டத்தில் நிறுவன இலாபம் இலட்சங்களில் கோடிகளில் செல்கையில் சராசரியை நோக்கிய பின்னடைவு (Reversion to the mean) செயல்படத் தொடங்கும். மேலும், முடிவுறு உலகில் முடிவுறாத வளர்ச்சி என்பதாக ஏதுமில்லை. எனில், இந்தத் தரமான வளர்ச்சியை, அதாவது இலாபத்தின் மேலான இலாபத்தை ஈட்ட...

நிறுவனர் பங்கு

நிறுவனர் பங்கு Skin in the game பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்: 1. மிகை முதல் நீர்க்காமை 2. மிகை கடன் இல்லாமை 3. நிறுவனர் பங்கு 4. தரமான வளர்ச்சி 5. அகழி 6. அறம் இவற்றில் நிறுவனர் பங்கு குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். வாரன் பஃபெட்டின் Berkshire Hathaway முதலீட்டு நிறுவனத்தில் அவருடைய தனிப்பட்ட பங்கு 38 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மேலும், வாரனின் 99 சதவீத சொத்து Berkshire Hathaway நிறுவனப் பங்குகளாக உள்ளது.  Tata குழுமத்தின் தாய் நிறுவனமான Tata Sons ல் அதன் நிறுவனர் பங்கு 78.8 என்ற அளவில் உள்ளது. பட்டியலிடப்பட்ட Tata குழும நிறுவனப்பங்குகளில் Tata Investment Corporation ல் நிறுவனர் பங்கு 73.38 சதவீதமாகவும் Tata Consultancy Services ல் நிறுவனர் பங்கு 71.77 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு நிறுவனர் பங்கு அதிக அளவில் இருப்பது இத்தகைய நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருக்கிறது.  நிறுவனத்தில் நிறுவனர் பங்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அன்றாடம் விற்பனையாகும் அதன் பங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். இது பங்குகளின் மதிப்பைத் தக்க வைக்கும் மறைமுகமான ஒரு க...

மிகை கடன் இல்லாமை

மி கை கடன் இல்லாமை Minimum Debt  பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்: 1. மிகை முதல் நீர்க்காமை 2. மிகை கடன் இல்லாமை 3. நிறுவனர் பங்கு 4. தரமான வளர்ச்சி 5. அகழி 6. அறம் இவற்றில் மிகை கடன் இல்லாமை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். கடன் வாங்கி காணாமல் போன நிறுவனங்களின் நீண்ட பட்டியல் ஒன்று உள்ளது. எனவே இந்த அளவுருவில் கவனம் கொள்வது அவசியமாகிறது. சில நிறுவனங்கள் முதல் செறிவாக (capital intensive) இருக்கும். விமானத்துறை, இரும்பு மற்றும் எஃகு, மின் உற்பத்தி, தொலைத் தொடர்பு, சுரங்கம் மற்றும் நில முதலீட்டு நிறுவனங்களைக் குறிப்பாகச் சொல்லலாம். இவை மிகை கடனைக் கொண்டிருப்பது இயல்பான ஒன்று. இவற்றில் முதலீடு செய்யாமல் இருப்பது சாலச் சிறந்தது. நிதி சார் நிறுவனங்களுக்குக் கடன் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவற்றுக்கான மூலப்பொருளே கடன் தான். உதாரணமாக வங்கிகள், சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு மூலமாகக் குறை வட்டியிலும் பூஜ்ய வட்டியிலும் பணத்தைப் பெறுகின்றன. இவை போக நிரந்தர வைப்புக் கணக்கு மற்றும் தொடர் வைப்புக் கணக்குகள் மூலமாகவும் ஓரளவு குறைந்த வட்டியில் அவை பணத்தைத் திரட்டிக் கொள்கின்றன...

மிகை முதல் நீர்க்காமை

மிகை முதல் நீர்க்காமை  Minimum Equity Dilution பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்: 1. மிகை முதல் நீர்க்காமை 2. மிகை கடன் இல்லாமை 3. நிறுவனர் பங்கு 4. தரமான வளர்ச்சி 5. அகழி 6. அறம் இவற்றில் மிகை முதல் நீர்க்காமை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். உலகெங்கிலும் உள்ள நாணயங்கள், நாளும் தத்தமது மதிப்பை இழந்து வருவதற்கான அடிப்படையான காரணம், அரசாங்கங்கள் அவற்றை அச்சடித்துப் புழக்கத்தில் விடுவது தான்.  1971 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒரு நாடு எவ்வளவு தங்கத்தை இருப்பில் வைத்திருக்க முடியுமோ அவ்வளவு பணத்தை மட்டுமே வெளியிட முடியும் என்பதான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. 1971 ஆம் ஆண்டு இந்த அளவுகோல் கைவிடப்பட்டு விட்டது. பண நீர்த்தல் என்பது வாடிக்கையாகி விட்டது.  Bitcoin போன்ற எண்ணிம நாணயங்கள் (crypto currencies) அவற்றின் மதிப்பைத் தக்க வைத்திருப்பதற்கான அடிப்படையான காரணம் அவற்றை அதிக எண்ணிக்கையில் உருவாக்கம் செய்ய முடியாதது மட்டுமே.  Bitcoin உருவாக்கத்திற்கான உச்சபட்ச அளவு 21 மில்லியன் என்பதாக உள்ளது. தற்போது வரை கிட்டத்தட்ட 20 மில்லியன் Bitcoin கள் அகழ்வு (mining) செய்யப்பட...

பங்குச் சலிப்பான்- ஒரு புதிய பார்வை

பங்குச் சலிப்பான்- ஒரு புதிய பார்வை Stock Screen- A New Perspective  நிறுவனப்பங்குகளை சில குறிப்பிட்ட அளவுருக்களில் (parameters) தேர்ந்தெடுத்துக் கொடுப்பவை பங்குச் சலிப்பான்கள் (stock screens) என்று அழைக்கப்படுகின்றன.  சலிப்பான்களில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, பங்குகளை எண் சார் காரணிகளைக் கொண்டு எடுத்துக் கொடுக்கும் Quantitative Screen. மற்றொன்று அவற்றைப் பண்பு சார் காரணிகளைக் கொண்டு எடுத்துக் கொடுக்கும் Qualitative Screen.  பங்குச் சலிப்பான்களை மிகவும் இறுக்கமாக (rigid) கட்டமைக்கக் கூடாது. அவற்றை நெகிழ்வாகவும் (loose) அமைக்கக் கூடாது. ரொம்பவும் இறுக்கமாகச் சலிப்பான்களை வைத்திருந்தால் எந்தப் பங்கும் அதில் தேறி வராது. ரொம்பவும் நெகிழ்வாக வைத்திருந்தால் எல்லாப் பங்கும் ஏறி வந்து விடும்.  பங்குச்சந்தை ஒரு சிக்கலான அமைப்பு. அதில் பங்குகளை தின அளவில் வாங்கி விற்கும் வணிகர்கள் ஒருபுறம் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். மறுபுறம் நீண்ட கால முதலீட்டாளர்கள். இவர்களுக்கிடையே குறுகிய கால முதலீட்டாளர்கள். ஒரு பக்கம் தொழில் நுட்பப் பகுப்பாளர்கள். இது போக பங்குகளை விற்று வாங்க...

அது நகர்கிறது . அது நகர்வதில்லை .

அது நகர்கிறது . அது நகர்வதில்லை . அது நகர்கிறது . அது நகர்வதில்லை . அது தூரத்தில் இருக்கிறது . அது அருகில் இருக்கிறது . அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது . அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது - உபநிஷதம் பங்குகளை முதலீடு செய்வதற்கான ஒரு வழிமுறையாக 6 அளவுருக்களைக் கொண்ட  பங்குச் சலிப்பான் ( stock screen ) குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம் . அவை 1 . முதல் நீர்க்காமை Nil equity dilution / Minimum equity dilution 2. கடன் இல்லாமை Nil debt / Low debt 3. தரமான வளர்ச்சி Quality growth 4. அகழி Moat 5. நிறுவனர் பங்கு Skin in the game 6. அறம் Corporate governance ஆனால் இந்த 6 அளவுருக்களையும் ஒரு மதம் மாதிரி பின்பற்ற வேண்டும் என்கிற மாதிரி எதுவும் கிடையாது . இன்னும் சொல்லப்போனால் முதலீட்டு உத்திகளில் நெகிழ்வான தன்மையுடன் (flexibility) இருப்பது இன்னும் உறுதித் தன்மைக்கு இட்டுச் செல்வதாக இருக்கும் . எந்தெந்த சந்தர்ப்பங்களில் இந்த அளவுருக்களை விட்டு விலகலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் . 1. முதல் நீர்க்காமை . முதல் நீர்க்காமை என்பது ஒரு முக்கியமான அளவுரு . அத...