Posts

Showing posts from December, 2021

அபாய மொழிகள்

அபாய மொழிகள் Risk Quotes 1. If you risk nothing then you risk everything - Geena Davis நீங்கள் எதனையும் அபாயங்களுக்கு உட்படுத்தவில்லையென்றால் அனைத்தையும் அபாயங்களுக்கு உட்படுத்தியிருப்பதாக அர்த்தம் . 2. Risk and Opportunity are two sides of the same coin - Yuan Byeajee அபாயமும் வாய்ப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் . 3. You'll always miss 100 % of the shots you don't take - Wayne Gretzky எடுக்காத வாய்ப்புகளின் 100 சதவீதத்தையும் நாம் இழக்கிறோம் . 4. Take risks in your life . If you win , you can lead . If you lose , you can guide - Swamy Vivekananda வாழ்க்கையில் அபாயங்களை எதிர் கொள்ளுங்கள் . அதில் வெற்றியடைந்தால் நீங்கள் தலைமையேற்கலாம் . அதில் தோல்வியடைந்தால் நீங்கள் வழி காட்டலாம் . 5. Great things never came from comfort zones . சௌகரியமான நிலையிலிருந்து பெரும் செயல்களைச் செய்ய முடியாது . 6. If you're not scared a lot you're not doing very much . ஒரு செயலைச் செய்ய நீங்கள் பயம் கொள்ளாவிட்டால் நீங்கள் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பதாக அர்த்தம் . 7.A per...

வாழ்க்கை மொழிகள் - 1

வாழ்க்கை மொழிகள் - 1 1. This too shall pass . இதுவும் கடந்து போகும் . 2. The only thing we have to fear is fear itself . - Franklin Roosevelt நாம் பயத்தைப் பற்றி மட்டுமே பயம் கொள்ள வேண்டும் . 3. Keep calm and carry on . அமைதி காக்கவும் மற்றும் தொடர்ந்து செல்லவும் . 4. A life lived in fear is a life half lived - Baz Cuhrmann பயத்தில் வாழ்வது பாதி வாழ்க்கை மட்டுமே . 5. Worry is like a rocking chair; It gives you something to do but never gets you anywhere - Erma Bombeck கவலை என்பது ஆடும் நாற்காலி போன்றது. அது உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது . 6. Nothing in life is to be feared, it is only to be understood - Marie Curie வாழ்க்கையில் எதற்கும் பயம் கொள்ள வேண்டியதில்லை, புரிந்து கொள்ள மட்டுமே வேண்டும் . 7. Often when you think you are at the end of something, you are at the beginning of something else - Fred Rogers ஒன்றின் முடிவில் நீங்கள் இருப்பதாகக் கொண்டாலும், அது மற்றொன்றின் தொடக்கமே . 8. If you are going through hell, keep going - Winston Churchill நீங்கள் நரகத்தின் வழியாகச் சென்றா...

பிட் காயின் கேள்வி பதில்

பிட் காயின் கேள்வி பதில் 1 . பிட் காயின் என்றால் என்ன ? பிட் காயின் என்பது மென் நாணயம் . ரூபாய் என்பது வன் நாணயம் . 2 . பிட் காயின் என்பதன் அடிப்படை என்ன ? தெரியாத ஒன்றைத் தெரிந்த ஒன்றைக் கொண்டு புரிந்து கொள்ளலாம் . அந்த வகையில் நாணயத்தின் அடிப்படையைக் கொஞ்சம் பார்க்கலாம் . ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு நாணயம் இருக்கிறது . அமெரிக்க டாலர் , ஜப்பானிய யென் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் . இந்திய நாணயம் ரூபாய் . இந்த மாதிரி நாணயங்கள் பரிமாற்ற இடைப்பொருள் (medium of exchange) என்ற அளவீட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இத்தகைய நாணயங்களை அச்சடித்துத் தள்ளிய வண்ணம் இருக்கின்றன . அதனால் இந்த நாணயங்களின் மதிப்பு நாளும் குறைந்த வண்ணம் இருக்கிறது . விளைவாகப் பணவீக்கம் அதிகரிக்கிறது . மென் நாணயங்களை சுட்டியின் ஒரு சொடுக்கில் உருவாக்க முடியாது . கணிதப் புதிர்களை விடுவித்தால் மட்டுமே இந்த மென் நாணயங்களை உருவாக்க முடியும் . முதலில் எளிமையாக இருக்கும் இந்தப் புதிர்கள் புதிய மென் நாணயங்களை உருவாக்க உருவாக்க மென்மேலும் கடினமாகும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் . எளிமையாக மென...

தீராக் காதல் மொழிகள்

தீராக் காதல் மொழிகள் Passion Quotes Passion - தீராக் காதல்/ வேட்கை/ பேரார்வம் 1. The only way to do great work is to love what you do - Steve Jobs மிகப்பெரும் வேலைகளைச் செய்து முடிக்க வேண்டுமென்றால் அந்த வேலைகளில் காதல் கொள்ளுங்கள் . 2. Skills are cheap . Passion is priceless . திறமைகள் மலிவானவை. வேட்கை விலை மதிப்பற்றது . 3. Allow your passion to become your purpose and it will one day become your profession . உங்கள் தீரா வேட்கையை உங்கள் வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்ளுங்கள். ஒருநாள் அது உங்கள் வாழ்க்கைக்கான தொழிலாகி விடும் . 4. People are prettiest when they talk about something they really love with passion in their eyes . ஒருவர் எப்போது அழகாக இருக்கிறாரென்றால் அவர் எதனைக் காதலிக்கிறாரோ அதனைக் குறித்து கண்களில் பேரவாவுடன் பேசும் போது ... 5. Develop a passion for learning. If you do, you will never cease to grow - Anthony J.D. Angelo படிப்பதில் தீராக் காதல் கொள்ளுங்கள் . பின்னர் உங்கள் வளர்ச்சிக்கு எல்லை என்பதே இருக்காது . 6. I have no special talents . I am only passionately curious - ...

நிரந்தர இயக்கம்

நிரந்தர இயக்கம் Perpetual Motion நிரந்தர இயக்கம் என்பது அறிவியல்பூர்வமாக சாத்தியமில்லாத ஒன்று . வெப்ப இயக்கவியலின் (Thermodynamics) முதலிரண்டு விதிகளை மீறுவதால் நடைமுறைக்கு இது ஒத்து வராது . வெப்ப இயக்கவியலின் முதல் விதி ஆற்றல் அழியாமை விதி என்று அழைக்கப்படுகிறது . அதாவது ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது . அதனை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றலாம் . ஆனால் மொத்த ஆற்றல் அளவு மாறாதது . வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதி : போதுமான நேரம் கொடுக்கப்பட்டால் எல்லா அமைப்புகளும் இறுதியில் சமநிலையற்றதாகவே இருக்கும் . முதலீட்டு உலகத்திற்கு வருவோம் . எந்தப் புறவிசையுமின்றி  தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்த ஒரு முதலீட்டு இயந்திரத்தை  சமநிலையுடன் உருவாக்கம் செய்ய முடியுமா ? நிச்சயமாக முடியும் . மேலும் இந்த இயந்திரம் வெப்ப இயக்கவியல் விதிகளைப் புறந்தள்ளி எந்தப் புறவிசையுமின்றி நீண்ட கால அளவில் வேகமாகவும் அதே சமயம் இவ்விதம் வேகமாகச் சுற்றுவதால் ஏற்படும் தேய்மானத்தைப் புறக்கணித்ததாகவும் சமநிலையுடனும் இருக்கும் . முதலில் நீங்கள் பங்குகளின் ஒரு தொகுப்பைக் கட்டவேண்டும்...