இலாபத்தை இடைவெட்டல்
இலாபத்தை இடைவெட்டல் Run Cutting ஒரு கணவன்-மனைவிக்குப் பிதுரார்ஜித வடிவில் ஒரு இலட்சம் ரூபாய் கிடைக்கப்பெறுகிறது. அதனை அவர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அது பாதி ஆவியாகி 50000 ரூபாய் என்ற அளவிற்கு வந்த புள்ளியில் இந்தக் கதை தொடங்குகிறது. தம்பதியருக்கு நிறுவனம் ஒன்றைக் குறித்த இரகசியத் தகவல் ஒன்று கிடைக்கப்பெறுகிறது. அந்த நிறுவனப்பங்குகள் 'ரூபாய் பங்கு' என்ற வகையில் 25 காசுக்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. நிறுவனத்தைக் குறித்த அந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதன் பங்குகள் காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணை முட்டும். இருந்தாலும் தம்பதியர் ஏற்கெனவே சந்தையில் சூடுபட்டதால் மதில் மேல் பூனையாக இருக்கின்றனர். பங்கின் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இரண்டு ரூபாயைத் தொடுகிறது. தம்பதி, தரகரின் எச்சரிக்கையை மீறி 50000 ரூபாய்க்கு அந்த ரூபாய் பங்கை பங்கு ஒன்று ரூபாய் இரண்டு என்ற விலையில் வாங்குகின்றனர். ஒரே வருடத்தில் அதன் பங்குகளின் விலை எட்டு ரூபாயைத் தொடுகிறது. பன்மடங்காளர் கணக்கில் சொல்வதானால் அது 4 bagger. தரகர், அதன் பங்குகளை விற்று விட வலியுறுத்துகிறார். நிறு...