Posts

Showing posts from September, 2026

கதை கேளு! கதை கேளு!

கதை கேளு! கதை கேளு! Story telling Quotes  1. Stories are memory aids, instruction manuals and moral compasses- Aleks Krotoski கதைகள் என்பவை நினைவாற்றலுக்கு உதவும் கருவிகள், வழிகாட்டும் கையேடுகள் மற்றும் அறநெறி சார்ந்த திசைகாட்டிகள் ஆகும். 2. Sometimes reality is too complex. Stories give it form- Jean Luc Godard சில சமயங்களில் யதார்த்தம் மிகவும் சிக்கலானது. கதைகள் அதற்கு ஒரு வடிவத்தை அளிக்கின்றன. 3. Authors do not choose a story to write, the story chooses us- Richard P. Denney எழுத்தாளர்கள் எழுதுவதற்கு ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பதில்லை; கதை தான் எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்கிறது. 4. To hell with facts! We need stories!- Ken Kese உண்மைகள் தொலைந்து போகட்டும்! நமக்குக் கதைகள் மட்டுமே தேவை!  5. Stories are a communal currency of humanity- Tahir Shah கதைகள் என்பவை மனிதகுலத்தின் பொதுவான நாணயங்கள். 6. If history were taught in the form of stories, it would never be forgotten- Rudyard Kipling வரலாறு கதைகளாகக் கற்பிக்கப்பட்டால், அது ஒருபோதும் மறக்கப்படாது. 7. The human species thinks in me...

அதிர்ஷ்டத் தேர்வு

அதிர்ஷ்டத் தேர்வு Luck Selection நெடுஞ்சாலை ஒன்றில் நண்பர்களுடன் தொலைதூரப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறீர்கள். ஒரு திருப்பத்தில் தவறாகத் திரும்பியது சிறிது நேரத்தில் உங்களுக்குப் புலப்படுகிறது. நீங்கள் உடனே வந்த வழியில் திரும்பி சரியான பாதையில் பயணிப்பீர்களா? அல்லது, உங்கள் தவறை ஏற்றுக்கொள்ள மனமின்றி தொடர்ந்து பயணிப்பீர்களா? ஒரு சிலர் பாதையை மாற்றாமல் பயணிப்பதாகவும், அதிலும் பெண்களை விட ஆண்கள் இந்த மனச்சாய்வுக்கு அதிகம் ஆட்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  Stop loss என்பது பங்குச்சந்தை வர்த்தக விதிகளில் தலையாய ஒன்றாகும். பங்குச்சந்தையில் மட்டுமல்ல, வாழ்க்கைச் சந்தையிலும் இந்த விதி, விதியான ஒரு விதியாகும்.  அது பங்கு முதலீடாக இருந்தாலும் சரி அல்லது அது ஒரு வேலையாக இருந்தாலும் சரி அல்லது அது ஒரு காதல் உறவாக இருந்தாலும் சரி அது எப்படி மலர்ந்து மணம் பரப்பும், அதில், அதிர்ஷ்டத்தின் பங்கு என்னவாக இருக்கும் என்று யாராலும் எப்போதும் தீர்மானமாகக் கூறவியலாது. ஒரு பங்கில் செய்யப்பட்ட முதலீடு ஆழம் காண முடியாத அதல பாதாளத்திற்குச் செல்லாது என்று எப்படி உறுதியாகக் கூற முடியும்? ...

Max Gunther- மணி மொழிகள்

Max Gunther- மணி மொழிகள் Max Gunther Quotes 1. Adventure is what makes life worth living and the way to have an adventure is to expose yourself to risk. சாகசமே வாழ்க்கையை வாழத் தகுந்ததாக ஆக்குகிறது. இடர்களை எதிர்கொள்ள உங்களை நீங்கள் உட்படுத்திக்கொள்வதே சாகசத்தை மேற்கொள்வதற்கான வழியாகும். 2. The trick is to disregard what everybody tells you until you have thought it through for yourself. நீங்களே அதைப்பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பார்க்கும் வரை, மற்றவர்கள் சொல்வதைப் புறக்கணிப்பதே சூட்சுமம். 3. Worry is not a sickness but a sign of health. If you are not worried, you are not risking enough. கவலை என்பது ஒரு நோய் அல்ல, அது ஆரோக்கியத்தின் அறிகுறி. நீங்கள் கவலைப்படவில்லை என்றால், போதுமான அளவு இடர்ப்பாட்டை எடுக்கவில்லை என்பதாகப் பொருள். 4. Everybody wants to win but not everybody wants to bet and therein lies a difference of the greatest magnitude.  எல்லோரும் வெற்றி பெற விரும்புகிறார்கள், ஆனால் எல்லோரும் பந்தயம் கட்ட விரும்புவதில்லை; அதில் தான் மிகப்பெரிய வேறுபாடு அடங்கியுள்ளது. 5. Nobo...