Posts

Showing posts with the label கருத்தாக்கம்

சந்தைப் பெருங்குழப்பம்

சந்தைப் பெருங்குழப்பம் Market Chaos  பங்குச்சந்தை, chaos என்று சொல்லத்தக்க வகையில் ஏன் எப்போதும் குழப்பத்தின் ஒரு கூடாரமாக இருக்கிறது? சந்தை, பொதுவாக அதன் பங்கேற்பாளர்களின் கூட்டு மதியின் (wisdom of crowds) காரணமாக எப்போதும் பொருளாதாரத்திற்கு ஒரு அடி முன்னதாகச் செல்லும்.  அந்த வகையில் பொருளாதாரம் ஒரு உச்சநிலையை எட்டியிருக்கும் போது தவிர்க்க முடியாமல் அதன் பின்னர் வரவிருக்கும் பொருளாதார மந்தம் மற்றும் வீழ்ச்சியை இனங்கண்டு சந்தை சரியும்.  அதே மாதிரி பொருளாதாரம் தரை தட்டும் போது சந்தை அதனை இனங்கண்டு பின்னர் வரவிருக்கும் முன்னேற்றங்களுக்குத் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்ளும்.  ஒட்டுமொத்த சந்தைக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட பங்குகளுக்கும் இது பொருந்தும்.  ஆனால், இது கடிகாரச்சுற்று கணக்காக எப்போதும் நிகழும் என்று கூறமுடியாது. சந்தை இதனை உணருங் காலையில் வேறு ஏதேனும் பிரச்னைகள் எழுந்தால் அது இந்த உணர்தலைப் பாதிப்பதாக அமையும்.  சில சமயம் நல்ல செய்தி வரும் போது சந்தை அதனை ஏற்கெனவே தள்ளுபடி (discount) செய்திருக்கும். அதாவது சந்தையில் அது ஏற்கெனவே ஒரு நேர்மமான பாதிப்பை...

வணிக வடிவமைப்பு- 2

வணிக வடிவமைப்பு- 2 The Design of Business- 2 பொறுப்புத்துறப்பு: இந்தப் பதிவு இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனப் பங்கினை வாங்குவதற்கான பரிந்துரை அல்ல. The design of business (நிறுவனங்களின் வணிக வடிவமைப்பு) என்ற கருத்தாக்கத்தை விளக்கும் பொருட்டு ஒரு நிறுவனத்தை உதாரணமாகக் கொண்டு இது எழுதப்பட்டிருக்கிறது.              *                *                * Never invest in any idea you can't illustrate with a crayon- Peter Lynch  ஒரு வண்ணக்குச்சியைக் கொண்டு உங்கள் எண்ணக்கருக்களை விளக்க முடியாத எதிலும் முதலீடு செய்யாதீர்கள்.              *                *               * Federal Reserve: Plumber of the financial system               ...

சந்தை மாயைகள்- 1

ச ந்தை மாயைகள்- 1 Market Myths- 1 1. In the stock market you can't go broke by booking profits. பங்குச்சந்தையில் இலாபமீட்டுவதன் மூலமாக யாரும் நஷ்டமடைய முடியாது. HDFC வங்கிப் பங்கின் முதல் பொது வெளியீடு (IPO) 1995 ஆம் ஆண்டில் அதன் முக மதிப்பான பத்து ரூபாய் என்ற விலையில் வெளியிடப்பட்டது. அதன் பட்டியல் விலை 40 ரூபாய். கிட்டத்தட்ட 15 நாட்களில் 300 சதவீதம் இலாபம். பன்மடங்காளர் கணக்கில் சொல்வதானால் 3 bagger. பட்டியல் விலையில் இந்தப் பங்குகளை விற்று இலாபமீட்டுவதன் மூலம் எவ்விதம் நஷ்டமடைய முடியும்? இன்றைய தேதியில் HDFC வங்கிப் பங்கு 1963 மடங்கு கூடியிருக்கிறது. அதன் முதல் பொது வெளியீட்டில் வாங்கப்பட்ட 100 பங்குகளுக்கான இந்த வருட பங்காதாயம் 22000 ரூபாய். பங்காதாயம் மூலமாக மட்டும் 2200 சதவீதம் இலாபம் கிடைத்திருக்கிறது. பன்மடங்காளர் கணக்கில் 22 bagger. HDFC வங்கிப் பங்கை பட்டியல் விலைக்கு விற்றவர்கள் அவர்கள் தொடர்ந்தவாக்கிலான பங்கு முதலீடுகள் மூலம் இத்தனை சதவீத இலாபம் ஈட்டியிருப்பார்கள் என்று கூறவியலாது. HDFC வங்கிப் பங்கு மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான பங்குகள் இம்மாதிரி பன்மடங்காளர்கள் ஆகியிருக...

அடுத்த கூகுளை இனங்காண முடியுமா?

அடுத்த கூகுளை இனங்காண முடியுமா? தேடாதே! காணாமற் போவாய்! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன - புவியரசு                ×                 ×                × அடுத்த கூகுளை, அதாவது கூகுள் மாதிரி பன்மடங்காளர் ஆகக்கூடிய ஒரு பங்கை முன்னரே இனங்கண்டு முதலீடு செய்வது ஒரு சிறந்த உத்தியாக இருக்கும். இவ்வாறான சில வைரங்களை நாம் வசப்படுத்தினால் நமது பங்குத்தொகுப்பு பிரகாசமடையும். பெஞ்சமின் கிரகாமின் பங்குத்தொகுப்பில் GEICO பங்கு இவ்வாறான ஒரு விளைவை ஏற்படுத்தியது. அவருடைய பங்குத்தொகுப்பின் மூலமான வாழ்நாள் வருமானத்தில் பேர்பாதி GEICO பங்கின் மூலமாகக் கிடைக்கப்பெற்றது. ஆனால், அடுத்த கூகுளை நாம் இனங்காண்பது சாத்தியம் தானா? அடுத்த கூகுளை நாம் இனங்காண்பது ஒருபுறம் இருக்கட்டும். கூகுள் நிறுவனர்களுக்கே கூகுள் அடையவிருக்கும் உயரங்கள் குறித்த சரியான ஒரு புரிதல் இல்லை என்பது வியப்பான ஒரு விஷயம். சரியான ஒரு புரிதல் இருந்திருந்தால் அதனை அவர்கள் ஒரு மில்லியன் டா...

வணிக வடிவமைப்பு- 1

வணிக வடிவமைப்பு- 1 The Design of Business- 1 பொறுப்புத்துறப்பு: இந்தப் பதிவு, இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனப் பங்கினை வாங்குவதற்கான பரிந்துரை அல்ல. The design of business என்ற கருத்தாக்கத்தை விளக்கும் பொருட்டு ஒரு நிறுவனத்தை உதாரணமாகக் கொண்டு இது எழுதப்பட்டிருக்கிறது.        *          *            * Never invest in any idea you can't illustrate with a crayon- Peter Lynch  ஒரு வண்ணக்குச்சியைக் கொண்டு உங்கள் எண்ணக்கருக்களை விளக்க முடியாத எதிலும் முதலீடு செய்யாதீர்கள்.              *                *               * Federal Reserve: Plumber of the financial system                *                *           ...

பழைய புத்தகச்சந்தை பாடங்கள்

பழைய புத்தகச்சந்தை பாடங்கள் The Perfect Store என்று ஒரு புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் பார்க்கிறீர்கள் . அந்தப் புத்தகம் எதைக் குறித்தது என்பதான ஒரு புரிதல் உங்களுக்குக் கட்டாயம் இருக்க வேண்டும் . The perfect store புத்தகம் eBay நிறுவன வரலாறு . இணையவழி வியாபாரத்தின் முதல் வெற்றிக்கதை eBay நிறுவனம் . வலிமையான நேர் பின்னூட்ட அகழியின் சிகர உதாரணம் . The perfect store புத்தகம் eBay நிறுவன வரலாறு என்ற தகவல் உங்கள் மன தரவுத்தளத்தில் (mental database) சேமிக்கப்பட்டிருக்க வேண்டும் . இது மிகவும் அடிப்படையானது . இந்த மாதிரி நிறுவன(ர்) வரலாறுகள் , முதலீட்டு உத்திகள் , பொருளாதாரக் குமிழிகள் இத்யாதி இத்யாதி குறித்த புத்தகங்களின் அன்றாடம் புதுப்பிக்கப்படுவதான ஒரு தரவுத்தளம் உங்களிடம் இருக்க வேண்டும் . மேலும் இந்த மாதிரி புத்தகங்களை எழுதும் ஆசிரியர்கள் குறித்த ஒரு பட்டியலும் உங்கள் மன வரைபடத்தில் இருக்க வேண்டும் . அப்போது தான் நீங்கள் அப்புத்தகத்தை இனங்கண்டு வாங்க ஏதுவாகும் . 20 டாலர் மதிப்புள்ள புத்தகங்களை கிட்டத்தட்ட ஒன்றரை டாலர் என்ற விலையில் மதிப்பு முதலீடாக வாங்கலாம் . Charles Brandes எழுதிய...