Posts

வாழ்க்கை மொழிகள் - 6

வாழ்க்கை மொழிகள்- 6 1. Try to be a rainbow in someone else's cloud- Maya Angelou அடுத்தவர்களின் வாழ்க்கை என்கிற மேகத்தில் ஒரு வானவில்லாக இருக்க முயற்சி செய்யுங்கள். 2. When you look back on your life, it looks as though it were a plot but when you are into it, it's like a mess: just one surprise after another. Then later, you see it was perfect- Schopenhaner உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழும் அது கூச்சலும் குழப்பமுமாகவே இருக்கும். பின்னர் அதனைத் திரும்பிப் பார்க்கையில் அது சீரான ஒன்றாக இருக்கும். அதன் அனைத்துப் புள்ளிகளும் ஒரு கோலமாக இணையும். 3. Don’t ask, What do I want from life? Ask a different set of questions: What does life want from me? What are my circumstances calling me to do? - David Brooks வாழ்க்கையிலிருந்து நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்ற கேள்வியைக் கேட்காதீர்கள். வாழ்க்கை என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்ற கேள்வியைக் கேளுங்கள். அதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அறைகூவல் என்ன என்று ஆராயுங்கள். 4. Life does not ask what we want. It presents us with options- Thomas ...

குறியீட்டு விலக்க முதலீடு

குறியீட்டு விலக்க முதலீடு Deindex Investing சென்செக்ஸ் முதலான குறியீடுகளில் புதிதாக இணையவிருக்கும் நிறுவனப்பங்குகளை அவற்றின் இணைவிற்கு முன்னரே இனங்காண முடியுமா என்பது நண்பர் ஒருவரின் கேள்வி. முதலிலேயே அத்தகைய பங்குகளை வாங்கி வைத்திருந்தால் பின்னர் சென்செக்ஸை அடித்தொடரும் குறியீட்டு நிதிகள் அவற்றை வாங்கும் போது நாம் விற்று விடலாம் அல்லது அவற்றின் தொடர்ந்தவாக்கிலான இலாபப் பயணத்தில் பங்கு பெறலாம் என்பது அவரின் எண்ணப்போக்காக இருந்தது.  சென்செக்ஸ் குறியீட்டில் இணைவதற்கு அவை பெரு நிறுவனப்பங்குகளாக (large cap stocks) இருக்க வேண்டும். தரமான இருப்பு நிலைக் கணக்கையும் (balance sheet) திடமான நிதி விகிதங்களையும் (financial ratios) அவை கொண்டிருக்க வேண்டும். நீர்மை நிறை (liquidity) மிகவும் முக்கியம். இவை போக சென்செக்ஸில் ஏற்கெனவே இடம் பெற்ற துறைகளை அவை சிறப்பு செய்வதாக (compliment) இருக்க வேண்டும். இத்தகைய பங்குகளை முன்னரே இனங்காண்பது முடியாதது என்பதற்கு அடுத்தது. மேற்கண்ட விதிமுறைகளில் அவை பெரு நிறுவனப்பங்குகளாக இருக்கவேண்டும் என்ற விதிமுறை  இத்தகைய பங்குகளை முன்னரே இனங்கண்டு, அது முடியாதெ...

இருப்பு சாய்வு

இருப்பு சாய்வு Availability Bias  சூழ்நிலைகளை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் போது உடனடியாக மனதிற்கு வரும் தகவல்களை வைத்து முடிவெடுப்பதான மாந்தர்களின் மனச்சாய்வு இருப்பு சாய்வு (Availability bias) என்பதாக அழைக்கப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் மனம் காட்டும் இந்த உடனடித் தகவல்கள் தவறான முடிவுகளுக்கு மட்டுமே நம்மை இட்டுச் செல்லும்.  இருப்பு சாய்வு என்பதை பிரச்னை ஒன்றுக்கான தீர்வைக் கண்டடைவதற்கு மனம் பயன்படுத்தும் குறுக்கு வழி என்பதாகச் சொல்லலாம். சமீப கால சாய்வின் (Recency Bias) ஒரு அங்கமாக இந்த இருப்பு சாய்வைப் பார்க்க முடியும் என்றாலும் அதற்கும் இதற்கும் நுட்பமான சில வேறுபாடுகள் இருக்கின்றன. சமீப கால சாய்வு என்பது சமீபத்தில் நடந்த நிகழ்வுகளில் கவனம் கொள்வது. இருப்பு சாய்வு என்பது எப்போதோ நடந்த நிகழ்வாக இருந்தாலும் பசு மரத்தாணி போல் மனதில் பதிந்த நிகழ்வுகளில் கவனம் கொள்வது. Jaws திரைப்படம் 1975 ஆம் ஆண்டு வெளி வந்தது. Stephen Spielberg ன் காலத்தை வென்ற திரைக்காவியம் அது. Jaws படம் எடுக்கும் போது தொழில்நுட்பம் அவ்வளவு முன்னேறியிருக்கவில்லை. சுறா ஒன்றின் பொம்மையைக் கொண்டு அந்தத் த...

வழி முறைகளில் களி கொள்வோம்

வழி முறைகளில் களி கொள்வோம் 1. The means is as important as the end- Mahatma Gandhi முடிவைப் போலவே வழிமுறைகளும் முக்கியமானவை. 2. Happiness is not a state of mind but a way of being, an activity of the soul in accordance with virtue- Michael Sandel மகிழ்ச்சி என்பது ஒரு மனோநிலை அல்ல அது ஒரு வழிமுறை, அறத்தின் பாற்பட்ட ஆத்மாவின் செயல்முறை.  3. Put one dumb foot in front of the other and course connect as you go- Barry Diller ஒரு காலடியின் முன் அடுத்த காலடியை வைத்து பயணப்படுங்கள். பயணிக்கையில் காலடித்தடங்களை சரி செய்து கொள்ளுங்கள். 4. Enjoy the little things. One day you may look back and realize they were the big things- Robert Brault  சிறிய விஷயங்களில் மனமகிழ்ச்சி கொள்ளுங்கள். ஒரு நாள் அவை தான் பெரிய விஷயம் என்று உணர்வீர்கள். 5. Sometimes, when things are falling apart, they may actually be falling into place. சில சமயங்களில் விஷயங்கள் கை நழுவிச் செல்கையில் அவை சரியான வகையில் செல்வதாக இருக்கும். 6. Be the change that you wish to see in the world- Mahatma Gandhi இந்த உலகை எவ்விதம் ப...

நிலைப்பாடு அளவீடு

நிலைப்பாடு அளவீடு Position Sizing  ஒரு பங்கின் மூலமாக நீங்கள் பெறும் வருமானத்தில் அதன் position sizing, அதாவது, அந்தப் பங்குகளை எவ்வளவு அதிக எண்ணிக்கையில் வாங்குகிறீர்கள் என்ற நிலைப்பாடு அளவு மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. வானத்திலிருந்து தங்கமாக மழை பெய்கிறது. அந்த மழையை எப்படி நீங்கள் பிடிப்பீர்கள்? ஒரு சிறிய குவளையிலா? அல்லது பெரிய ஒரு பாத்திரத்திலா? கரடிச்சந்தையில் பங்கு மழை தங்கமாகப் பொழியும் போது அத்தகைய பங்குகளைப் பெரிய பெரிய அளவுகளில் வாங்குவது நிலைப்பாடு அளவீடு (Postion Sizing) என்பதாக அழைக்கப்படுகிறது. அது 2008 ஆம் ஆண்டு. Sub prime crisis காரணமாக உலகம் முழுவதுமான பங்குச்சந்தைகள் தலைகுப்புற விழுந்து கிடந்த காலம். அப்போது அடியேன் 2100 ரூபாய்க்கு வாங்கிய ஐம்பது V Guard பங்குகளை உதாரணமாகக் கொண்டு இதனைப் புரிந்து கொள்ள முயலலாம். 2008 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட 50 பங்குகள் அதன் பங்குப்பிரிப்பு மற்றும் இலவசப் பங்களிப்பின் காரணமாகத் தற்போது 700 பங்குகள் ஆகியிருக்கிறது. நான் வாங்கிய 2100 ரூபாயைக் கொண்டு கணக்கிட்டால் 2024 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் 46.66 சதவீதம் வருகிறது. அதன் முதலீட்...

முதுமை மொழிகள் - 2

மு துமை மொழிகள்- 2 Old Age Quotes- 2 1. For the unlearned, old age is winter; for the learned, it is the season of the harvest. கல்லாதவர்களுக்கு முதுமை என்பது இலையுதிர்காலம்; கற்றவர்களுக்கு அது அறுவடைக்காலம். 2. Anyone who keeps the ability to see beauty never grows old- Franz Kafka அழகைக் காணும் திறனை வைத்திருக்கும் எவருக்கும் வயதாகாது. 3. Anyone who stops learning is old, whether at twenty or eighty. Anyone who keeps learning stays young- Henry Ford கற்பதை நிறுத்தும் எவருக்கும் வயதாகிறது. கற்றுக்கொண்டே இருப்பவர் இளமையாகவே இருப்பார். 4. Age isn’t a number, it’s an attitude. வயது என்பது ஒரு எண் அல்ல, அது ஒரு அணுகுமுறை. 5. We are always the same age inside- Gertrude Stein மனதிற்கு வயது கிடையாது. 6. Ageing is just another word for living - Cindy Joseph  முதுமை என்பது வாழ்தலின் இன்னொரு பெயர் மட்டுமே. 7. It's not how old you are. It's how you are old - Jules Renard  உங்களின் வயது எவ்வளவு என்ற கணக்கை விட அதனை எவ்விதம் வந்தடைந்தீர்கள் என்ற கணக்கே முக்கியமானது. 8. Old age is the end ...

எனது முதல் 200 மடங்காளர்

எனது முதல் 200 மடங்காளர் My First 200 Bagger நாட்கள் என்னும் பூக்கள் கொண்டு தான் ஆண்டுகள் என்னும் மாலைகள் கட்டப்படுகின்றன. ஆனால் நாட்கள் பார்க்காததையெல்லாம் ஆண்டுகள் பார்க்கின்றன - காண்டேகர் ICICI, IDBI மற்றும் IFCI ஆகிய மூன்று நிறுவனங்களும் அவற்றின் ஆரம்ப காலத்தில் DFI (Development Financial Institutions) என்ற வகையில் இயங்கிக் கொண்டிருந்தன. DFI களின் வேலையை வங்கிகளே மேற்கொண்டமையால் DFI என்ற கருத்தாக்கம் ஒரு கட்டத்தில் தேவையில்லாமல் போனது. மேலும், இவற்றின் அதிகரித்து வந்த வாராக்கடன்களும் இவை தொடர்ந்து இயங்க சாதகமான ஒரு சூழலை உருவாக்கவில்லை. முதலிரண்டு நிறுவனங்களும் அவற்றின் துணை நிறுவனங்களான ICICI வங்கி மற்றும் IDBI வங்கியுடன் தலைகீழ் இணைப்பு (reverse merger) என்ற வாக்கில் இணையப்பெற்றன. இந்த மூன்று நிறுவனங்களில் தப்பிப் பிழைத்தது ICICI வங்கி மட்டுமே. IDBI வங்கி இன்றளவும் ஏனோதானோ என்று இயங்கிக் கொண்டிருக்கிறது. IFCI இன்னும் இறக்கத்தில் உள்ளது. IDBI Bank மற்றும் IFCI பங்கு விலைகள் ஆண்டாண்டாக குறிப்பிட்ட ஒரு விலைப்பட்டையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. ஆக, இந்த மூன்று நிறுவனங்களில் அதி...