வாழ்க்கை மொழிகள்- 8

வாழ்க்கை மொழிகள்- 8

1. Sunshine is delicious, rain is refreshing, wind braces up, snow is exhilarating; there is no such thing as bad weather, only different kinds of good weather- John Ruskin


சூரிய ஒளி சுவை கூட்டுகிறது, மழை புத்துணர்ச்சியூட்டுகிறது, காற்று பலமாக வீசுகிறது, பனி உற்சாகப்படுத்துகிறது; மோசமான வானிலை என்று எதுவும் இல்லை, பல்வேறு வகையான இனிய வானிலைகள் மட்டுமே நிலவுகின்றன.


2. It's so hard to forget pain, but it's even harder to remember sweetness. We have no scar to show for happiness- Chuck Palahniuk


துன்பத்தை மறப்பது கடினமானது, இன்பத்தை நினைவில் வைத்திருப்பது அதனினும் கடினமானது. இன்பத்தை வெளிக்காட்டுவதற்கு தழும்புகள் என்பதாக ஏதுமில்லை.


3. Life is about direction not speed.


வாழ்க்கை என்பது திசையைப் பொறுத்தது, வேகத்தைப் பொறுத்தது அல்ல.


4. The most ordinary things in life are often the most extraordinary.


வாழ்க்கையில் சாதாரணமான விஷயங்கள் தான் நிரம்பவும் அசாதாரணமானவை.


5. In childhood, there is paradise all around us- Wordsworth 


குழந்தைப் பருவத்தில் நம்மைச் சுற்றிலும் சொர்க்கம் இருக்கிறது.


6. Life is the art of drawing without a eraser- John W Gardner


வாழ்க்கை என்பது அழிப்பான் இல்லாமல் ஆக்கப்படுவதான ஒரு வரைபடம்.


7. Life can only be understood backwards; but it must be lived forwards.


வாழ்க்கையை முன்னோக்கி மட்டுமே வாழ வேண்டும். ஆனால் அதனைப் பின்னோக்கி மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.


8. Life is an equation with hundreds of variables .


வாழ்க்கை என்பது நூற்றுக்கணக்கான மாறிகள் கொண்ட ஒரு சமன்பாடு.


9. One half of troubles of life can be traced to saying 'yes' too quickly and not saying 'no' soon enough- Josh Billings


வாழ்க்கையின் பாதி பிரச்னைகளுக்கான வேர்கள் 'ஆம்' என்பதை விரைந்து சொல்வதிலும் 'வேண்டாம்' என்பதைத் தாமதமாகச் சொல்வதிலும் உள்ளது.


10. Live your life, sing your song. Not full of expectations. Not for the ovations. But fot the joy of it- Rasheed Ogunlaru


உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள், உங்களுக்கான பாடலைப் பாடுங்கள். எதனையும் எதிர்பார்க்காதீர்கள். கைதட்டல்களுக்காக அல்ல, மனமகிழ்ச்சிக்காக உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள் ...

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

இலவசப் பங்களிப்புகளை இனங்காண்பது எப்படி?