Posts

Showing posts with the label கேள்வி பதில்

அனுமானக் கேள்விகளும் அதற்கான பதில்களும்- 2

அ னுமானக் கேள்விகளும் அதற்கான பதில்களும்- 2 கேள்வி: சராசரியை நோக்கிய பின்னடைவு (Reversion to the mean) இல்லாவிட்டால் என்னவாகும்? பதில்: சந்தை என்பது ஒரு இடத்தால் ஆகப் பெற்றதல்ல. அது மாந்தர்களால் ஆகப்பெற்றது. அவர்கள் உணர்வுகளால் நெய்யப்பெற்றது. இந்த உணர்வுகளின் கொந்தளிப்பால் ஒரு சொத்தின் மதிப்பு அதி விலையில் வர்த்தகமாவதும் பின்னர் சராசரியை நோக்கிய பின்னடைவு என்ற அடிப்படையில் அது இறங்கி வருவதும் இயல்பானது. இந்த இறக்கம் அதன் சராசரிக்கும் கீழாக இறங்குவதும் இயல்பானது. பின்னர் சராசரியை நோக்கிய முன்னடைவு செயல்படத் தொடங்கும். வேறு மாதிரி சொல்வதானால் கடிகார ஊசல் மாதிரி ஒரு சொத்து அதன் உள்ளார்ந்த மதிப்பை விட அதிகமாகவும் (காளைச்சந்தை) குறைவாகவும் (கரடிச்சந்தை) வர்த்தகமாகும். சராசரியை நோக்கிய பின்னடைவும் முன்னடைவும் இல்லாவிட்டால் பங்குச்சந்தையும் அதன் மூலமான முதலீட்டு வாய்ப்புகளும் இல்லை என்றே சொல்லலாம். தனிப்பட்ட ஒரு பங்கைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கால அளவில் அது ஒரு விலைப்பட்டையில் (price band) முன்னும் பின்னுமாக சராசரியை நோக்கிய முன்னடைவிற்கும் பின்னடைவிற்கும் உள்ளாகும். பின்னர் அதிகரிக்கும்...

பங்கு கேள்வி பதில்- 9

பங்கு கேள்வி பதில்- 9 கேள்வி : IRCTC நிறுவனப்பங்கு நீண்ட காலமாக நகரவே இல்லை? பதில்: PE, Super Fast Express வேகத்தில் முன் சென்று விட்டது. EPS பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. கேள்வி: 2026 ஆம் ஆண்டுக்கு எந்தப் பங்கை நீண்ட காலம் வைத்துக் கொள்ளலாம்? பதில்: *^^# கேள்வி: Infosys Technologies, ITC முதலான பங்குகள் ஏன் நத்தை நடை நடக்கின்றன? பதில்: பங்கு முதலீடுகள் மூலமாக இரண்டு விதங்களில் பணம் ஈட்டலாம். ஒன்று முதலீட்டுப் பெருக்கம் (capital appreciation) இன்னொன்று பங்காதாயம் (dividend) நிறுவனங்கள், இளமையாக இருக்கும் போது முதலீட்டுப் பெருக்கம் செயல்படும். நிறுவனங்கள், தத்தமது மிகுதிப் பணத்தை பங்காதாயமாக வழங்காமல் அவற்றின் வளர்ச்சி வாய்ப்புகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும். அவை பெரிதாக வளர்ந்த பின்னர் பங்காதாயத்தை வழங்கத் துவங்கும். நாட்பட இந்த பங்காதாய வழங்கல் விகிதம் (dividend payout ratio) அதிகரிக்கும். இதற்கான சிகர உதாரணங்களாக Infosys மற்றும் ITC நிறுவனங்களைச் சொல்லலாம். Infosys நிறுவனத்தின் பங்காதாய வழங்கல் விகிதம் 60 சதவீதம். ITC நிறுவனத்திற்கு இது 80 சதவீதம். இந்தக் கட்டத்தில் அவை பங்க...

படித்ததில் பிடித்தது- 3

படித்ததில் பிடித்தது - 3 [சுஜாதா பதில்கள்- முதல் மற்றும் இரண்டாம் பாகம் (உயிர்மை வெளியீடு) மற்றும் இணையத்திலிருந்து தேர்ந்தெடுத்த சில கேள்வி பதில்கள். சில பதில்கள் உங்களைச் சிரிக்க வைக்கும். சில சிந்திக்க வைக்கும்] கேள்வி: இணையத்தளங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்? பதில்: சுய விளம்பரங்களுக்குப் பயன்படும். கேள்வி: கடவுள் கொள்கையில் உங்கள் தெளிவான முடிவு என்ன? பதில்: கடவுள் இருக்கிறார். கடவுள்கள் இல்லை. கேள்வி: வாழ்க்கையில் நீங்கள் கற்றதிலேயே முக்கியமான விஷயம் என்று எதைக் கருதுவீர்கள்? பதில்: கற்றது போதாது என்பதை. கேள்வி: ஆண்கள், பெண்கள்- பொய் சொல்வதில் யார் கில்லாடி? பதில்: பொய் பேசுவதில் கில்லாடிகள் ஆண்கள். அதைச் சட்டென்று கண்டுபிடிப்பதில் கில்லாடிகள் பெண்கள். கேள்வி: கதைகள் எப்போது காவியமாகின்றன? பதில்: நூறு வருஷம் பிழைத்திருந்தால். கேள்வி: உங்களுக்கு எந்த அளவு கடவுள் நம்பிக்கை உண்டு? பதில்: கடவுள் இருக்கிறார் என்ற அளவுக்கு. கேள்வி: ஒரு கதை எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? பதில்: சாதாரணமாக சில மணி நேரம் போதும். சில கதைகள் எழுதுவதற்கு வருஷங்கள் கூட ஆகும். கேள்வி: சந்த...

பங்குச்சந்தை பதில்கள் - 17

பங்குச்சந்தை பதில்கள் - 17 கேள்வி: கடவுள் உங்கள் முன் தோன்றி பங்குச்சந்தையைப் பொறுத்து ஒரேயொரு வரம் தருவதாகக் கூறினால் என்ன கேட்பீர்கள்? பதில்: அடுத்து பன்மடங்காளர் ஆகக்கூடிய பங்குகளின் பட்டியலை எல்லாம் கேட்க மாட்டேன். தற்போது வாராவாரம் செய்யும் பங்குச்சந்தை முதலீடுகளை ஆயுளுக்கும் செய்ய அருளும் படி கேட்டுக் கொள்வேன். கேள்வி: பங்குச்சந்தை நகைச்சுவை ஏதேனும்? பதில்: இரண்டு ரூபாய்க்கும் குறைவாக வர்த்தகமாகும் பென்னி பங்கு அதன் பங்குகளை 1:2 என்ற விகிதத்தில் பிரிக்க பதிவுத்தேதியை அறிவித்தது.  (நகைச்சுவை தொடர்கிறது) இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதன் பங்குகள் 5 சதவீதம் விலை உயர்வு!  கேள்வி: முதலீடுகளில் Macro பார்வை அல்லது Micro பார்வை - எது சரியானது? பதில்: பேரளவு (macro) என்பது சிற்றளவு (micro) களால் ஆகப்பெற்றது. கேள்வி: Berkshire Hathaway பங்கு 1964 லிருந்து 2024 வரை 5502284% வருமானம் கொடுத்திருக்கிறதே? பதில்: இது absolute return என்று சொல்லப்படும் இந்த இடைப்பட்ட ஆண்டுகளுக்கான மொத்த வருமானம். Annualised return என்று சொல்லப்படும் ஆண்டாண்டு வருமானத்தைக் கணக்கிட்டால் 20 சதவீத கூட்டுப்பெர...

பங்கு கேள்வி பதில் - 8

பங்கு கேள்வி பதில் - 8 கேள்வி : பங்கு முதலீடுகளில் Consistency க்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்? பதில் : நிறுவனப்பங்கு ஒன்றின் ஒரு பங்குச் சம்பாத்தியம் (EPS) 100 ரூபாய் என்று கொள்ளலாம். நிறுவனம் ஆண்டாண்டு ஒரே சீராக 15 சதவீதக் கூட்டுப்பெருக்கம் என்ற அளவில் நிகர இலாபம் ஈட்டுவதாகக் கொள்ளலாம். அதன் EPS ஆண்டுக் கணக்கில் ரூ.115, 132, 151, 173, 198 ... என்றவாக்கில் வளர்ந்து வரும். இன்னொரு நிறுவனம் முதல் நான்கு ஆண்டுகளில் 20 சதவீதம் கூட்டுப் பெருக்கம் மற்றும் ஐந்தாவது ஆண்டு 20 சதவீத எதிர்மப் பெருக்கத்திற்கு உள்ளாவதாகவும் கொள்ளலாம். அதன் EPS ரூ.120, 144, 165, 198, 159 ... என்றவாக்கில் வளர்ந்து வரும். முதல் நிறுவனம் குறைவான சதவீதத்தில் வளர்ந்து வந்தாலும் அதன் சீர்மை நிறை (consistency) காரணமாகக் கூடுதல் வருமானத்தை ஈட்டுவதாக இருக்கும். சந்தை இந்த ஒரே சீரான வருமானத்திற்கு அதிக விலை வருவாய் விகிதத்தை வழங்கும். Pidilite Industries பங்கு உயர் PE விகிதங்களில் வர்த்தகமாவதற்கு அதன் consistency முக்கியமான காரணம். கேள்வி : Infosys நிறுவனம் இன்றைய தேதியில் 19856 bagger. ஆனால் TCS வெறும் இத்தனை 32 bagger மட...

பங்குச்சந்தை பதில்கள்- 16

பங்குச்சந்தை பதில்கள்- 16 கேள்வி: உலகப் பங்குச்சந்தைகளின் எதிர்காலப் போக்கு என்னவாக இருக்கும் என்று கணிக்க முடியுமா? பதில்: இன்றைய சூழ்நிலையில் மட்டுமல்ல, எந்த சூழ்நிலையிலும் பொருந்துவதான ஒரே கணிப்பு: எதிர்பாராததை எதிர்பாருங்கள்! கேள்வி: ஒரு காளைச்சந்தையில் முதலீட்டு வெளிச்சத்தில் இருக்கும் சில துறைகள் அடுத்த காளைச்சந்தையில் பங்கேற்காது என்பது உண்மையா? எனில் அத்தகைய துறை சார்ந்த நிறுவனப்பங்குகளை விற்று விட வேண்டுமா? பதில்: பங்குச்சந்தை முதலீடுகளில் வெற்றி பெற உடைமை மனப்பான்மை (ownership mentality) கொள்வது அடிப்படையான ஒன்று. வாகன உதிரி பாகங்கள் (Auto ancillary) துறை முதலீட்டு வெளிச்சத்தில் இருக்காது என்று Samvardhana Motherson International நிறுவனர் அதன் பங்குகளை விற்று விடுவாரா? Samvardhana Motherson International (Formerly Motherson Sumi Systems) நிறுவனப்பங்குகள் அதன் IPO விலிருந்து நாளது தேதி வரை 30 சதவீத CAGR கொடுத்திருப்பது இங்கே கவனம் பெறுகிறது.  கேள்வி : ஒருவர் தனது வருமானத்தில் எத்தனை சதவீதம் சேமிக்க வேண்டும்? பதில் : (பங்கு) முதலீடுகள் மூலமாக நமக்குக் கிடைக்கப்பெறும் வர...

பங்குச்சந்தை பதில்கள் - 15

பங்குச்சந்தை பதில்கள் - 15 கேள்வி: இந்தியப் பங்குச்சந்தை தனது அடுத்த உயர்வை எப்போது துவங்கும்? பதில்: யாமறியேன் பராபரமே! கேள்வி: ஏன் F & O வேண்டாம் என்கிறீர்கள்? பதில்: செல்வம் சேர்ப்பது முக்கியம். மனநிம்மதியுடன் செல்வம் சேர்ப்பது அதைவிட முக்கியம். கேள்வி: Gold மற்றும் Real estate முதலீடுகளில் பெரும்பாலோனோர் பெறும் ஆதாயத்தைப் பங்குச்சந்தையில் ஏன் பெறமுடிவதில்லை? பதில்: தங்கம் மற்றும் நிலத்தை இது எங்கள் பாட்டியின் நகை இது எங்கள் பாட்டனார் நிலம் என்று தலைமுறை தாண்டி வைத்திருக்கிறோம். பங்குகளை அப்படி வைத்திருக்கிறோமா? கேள்வி: சென்னை போன்ற நகரங்களில் இருந்த பங்குச்சந்தைகள் ஏன் மூடப்பட்டன? பதில்: நீர்மை நிறை உருவாக்கம் என்று சொல்லப்படும் liquidity இன்மையால். கேள்வி: பங்குச்சந்தையில் உங்கள் முதலீட்டுத் திட்டம் என்ன? பதில்: தரமான பங்குகளை இனங்கண்டு அவ்வப்போது காலப்பன்மயமாக்கம் என்ற முறையில் அவற்றை வாங்குவது ... கேள்வி: நீங்கள் காளையின் காதலரா அல்லது கரடியின் காதலரா? பதில்: பங்குகளை வாங்கும் போது நான் கரடியின் காதலன். அவற்றை விற்கும் போது காளையின் காதலன். கேள்வி: சந்தை நகைச்சுவை ஏத...