Posts

Showing posts from August, 2024

Basant Maheswari - மணி மொழிகள்

Basant Maheswari - மணி மொழிகள் 1. If a person had invested one rupee at the time Babur invaded India in the year 1526 A.D then on a nominal 3 percent rate of interest it would have grown to Rs.17.85 lakh ; at 4% to 19.73 Cr ; at 5% to Rs.2085 Cr and at 6% to Rs.210841 Cr in year 2015 . பாபர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்த 1526 ஆம் ஆண்டு ஒரு ரூபாயை 3 சதவீத கூட்டு வட்டியில் ஒருவர் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு 2015 ஆம் ஆண்டு 17.85 இலட்சம் ஆகியிருக்கும் . அதுவே 4 சதவீதம் என்றால் 19.73 கோடி ; 5 சதவீதம் என்றால் 2085 கோடி ; 6 சதவீதம் என்றால் 210841 கோடி . 2. Given an option between good results and a stock moving up , an investor should settle for the former - any day . ஒரு நிறுவனம் நன்கு வருமானம் ஈட்டுகிறது மற்றும் அதன் பங்கின் விலை கூடுகிறது என்ற இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் ஒரு முதலீட்டாளர் முதல் வாய்ப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் - எப்போதும் . 3. Making income is different from creating wealth . The former has to be done repeatedly , while for the latt...

வாழ்க்கை பதில்கள் - 1

வாழ்க்கை பதில்கள் - 1 கேள்வி : வேலை-வாழ்க்கை சமநிலையை எப்படி அடைவது? பதில் : நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதனைப் பிடித்துச் செய்தால் அல்லது பிடித்த வேலையைச் செய்தால் இந்த வேலை-வாழ்க்கை சமநிலை என்பதே உங்களுக்குத் தேவைப்படாது. வேலையே உங்கள் வாழ்க்கையாகி விடும். கேள்வி : எல்லாவற்றையும் பொருளாதாரக் கண் கொண்டு தான் பார்க்க வேண்டுமா? பதில் : அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு பொருளாதாரம் இருக்கிறது. இளமையில் கருகருவென்று அடர்த்தியாக இருக்கும் முடி வயதானதன் பின்னர் நரைத்தும் கொட்டியும் விடுகிறது. இது ஏனென்றால் இளமையாக இருக்கும் போது எதிர் பாலினத்தைக் கவரும் பொருட்டு இயற்கை தன் பொருள் ஆதாரத்தை இந்த மாதிரியான அழகுபடுத்தும் செயல்களில் செலவிடுகிறது. வயதானதும் இத்தகைய தேவைகள் குறைகின்றன. இதயம் போன்ற பிற முக்கியத் தேவைகளுக்கு இந்த ஆதாரம் செலவிடப்படுகிறது. எல்லாவற்றுக்கும் பொருளாதாரம் தான் ஆதாரம். அதனைப் பணத்தை மட்டும் கொண்டு பார்க்காமல், அதனினும் மேலான ஒரு பார்வையைக் கொண்டு நோக்க வேண்டும். கேள்வி : மற்றவர்களைப் பார்த்து ஏதோ ஒரு வகையில் பொறாமைப்படுகிறேன். இதிலிருந்து எப்...

தெரிந்த கருத்தாக்கம் தெரியாத விளக்கம்

தெரிந்த கருத்தாக்கம் தெரியாத விளக்கம் 1. Efficient Market Hypothesis (திறமையான சந்தை கருத்தாக்கம்) பங்குச்சந்தையில் நிறுவனப்பங்குகளின் விலைகள், எல்லா நேரமும், எல்லாத் தகவல்களையும் பிரதிபலிக்கும் வண்ணம் மட்டுமே வர்த்தகமாகும் என்ற கருத்தாக்கம் Efficient Market Hypothesis என்பதாக அழைக்கப்படுகிறது. சந்தை விலை தான் எப்போதும் முதலும் முடிவுமானது. வேறு மாதிரி சொல்வதானால் பங்கின் விலைகள் எப்போதும் அதன் உள்ளார்ந்த மதிப்பை ஒட்டியே வர்த்தகமாகும். பங்குச்சந்தை குறியீடுகளை வெற்றி கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. சரியா? தவறு! இந்தக் கருத்தாக்கம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மதிப்பு முதலீடு என்ற கருத்தாக்கத்திற்கே இடமில்லாமல் போகிறது. மதிப்பு முதலீடு தான் பங்குச்சந்தையின் முதலும் முடிவுமான முதலீட்டு உத்தியாகும். பங்குச்சந்தை மாயப் பித்துகளில் இந்த EMH தலையானதாகும். ஒரு மதிப்பு முதலீட்டாளர் EMH விற்பன்னர் ஒருவருடன் நடைப்பயிற்சி சென்று கொண்டிருக்கையில் கீழே 500 ரூபாய் நோட்டு ஒன்று தட்டுப்பட்டது. மதிப்பு முதலீட்டாளர் அதைக் குனிந்து எடுக்க முனைகையில் EMH விற்பன்னர் அவரைத் தடுத்தாட்கொண்டார். அது உண்மையா...

பங்குச்சந்தை பதில்கள் - 11

பங்குச்சந்தை பதில்கள் - 11 கேள்வி : பங்குச்சந்தை ஆட்டம் கண்டது பார்த்தீரா ? பதில் : அது ஆட்டம் இல்லை , அசைவு . கேள்வி : எந்தப் பங்கு அடுத்த ஓராண்டில் 100 சதவீதம் கூடும் ? பதில் : ஓர் ஆண்டு கழித்துச் சொல்கிறேன் . கேள்வி : இலவசப்பங்குகள் இலவசம் தானே ? அவற்றை விற்று வைத்தால் என்ன ? பதில் : இலவசம் என்றால் இலவசம் என்று அர்த்தமில்லை , விலை மதிப்பற்றது என்று அர்த்தம் . கேள்வி : பங்குகள் இரட்டிப்பானதும் விற்பதில் என்ன தவறு ? பதில் : இரட்டிப்பான பங்குகளை விற்றால் பன்மடங்காளர்களை எவ்விதம் கைப்பற்றுவது ? கேள்வி : Assured interest தானே சிறந்தது ? பதில் : உத்தரவாதமான வட்டிக்கான விலை அதிகம் . கேள்வி : எந்தக் கடன் அட்டை வாங்குவது நல்லது ? பதில் : எந்தக் கடன் அட்டையும் வாங்காமலிருப்பதே நல்லது ! கேள்வி : PE Multiple ஐ ஒரே வரியில் விளக்க முடியுமா ? பதில் : நிறுவனத்தின் வருமானம் குறித்த சந்தையின் சராசரி எதிர்பார்ப்பு . கேள்வி : Peter Lynch எழுதிய புத்தகங்களில் Oneup on Wall Street மற்றும் Beating the Street இவற்றில் எது சிறந்தது ? பதில் : இரண்டையும் விட அவருடைய Learn to Earn இன்னும் சிறந்தத...

தலைகீழ் விகிதங்கள் - 4

தலைகீழ் விகிதங்கள் - 4 தரமான நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் தேவையில்லை. எங்காவது கூகுள் நிறுவன விளம்பரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? சிறந்த கதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளும், தரமான பங்கு தன்னைத்தானே வாங்கிக் கொள்ளும் என்பது மாதிரி தரமான நிறுவனங்களுக்கும் விளம்பரங்கள் தேவையில்லை. ஆனால் எல்லா நிறுவனங்களுக்கும் விளம்பரங்களே தேவையில்லை என்று சொல்லி விடவும் முடியாது. சரி, விளம்பரங்களை எப்படி மலிவாக அதே சமயம் பயனாளர்களைச் சரியான முறையில் சென்று சேரும் படி கொடுப்பது? இந்த வகையில் கூகுள் நிறுவனம் ஓரளவு உதவிகரமாக இருக்கிறது. விளம்பரங்களை எப்படிக் கொடுக்கக்கூடாது மற்றும் எப்படிக் கொடுக்க வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். Greg McLemore என்பவர் pets.com என்கிற வளர்ப்புப் பிராணிகளுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் நிகழ்நிலையில் (online) விற்பனை செய்வதான நிறுவனம் ஒன்றைத் தொடங்குகிறார். 1998ல் அமெரிக்க வளர்ப்புப் பிராணிகள் (pet) துறையின் சந்தை மதிப்பு யுஎஸ் டாலர் 23 பில்லியன். பிரச்னை என்னவென்றால் petsmart.com மற்றும் petstore.com என்று புற்றீசல் மாதிரி நிறைய நிறுவனங்கள் இதே...