சைக்கிள் திருடர்கள் ஜாக்கிரதை
சைக்கிள் திருடர்கள் ஜாக்கிரதை . புரட்சி நடைபெறுவதற்கு முந்தைய ரஷ்யாவில் சைக்கிள் போன்ற வாகனங்களை விரைவாக விற்பதற்கு மோசடியான சில வழிமுறைகளை விற்பனையாளர்கள் கையாண்டனர் . உதாரணமாக நாளிதழ்களில் பின்வருமாறு விளம்பரம் கொடுப்பார்கள் . ஒரு சைக்கிள் வெறும் 10 ரூபிள் (ரஷ்ய நாணயம்) மட்டுமே . 50 ரூபிள் மதிப்புள்ள சைக்கிள் 10 ரூபிளுக்கு . முந்துங்கள் . இச்சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே . இலவச விவரங்களுக்கு எங்களை அணுகவும் . விவரம் என்னவென்றால் , நிறுவனம் நான்கு சீட்டுக்களை (coupon) உங்களுக்குக் கொடுக்கும் . அந்த சீட்டுக்களை நீங்கள் நான்கு நபர்களிடம் தலா பத்து ரூபிளுக்கு விற்க வேண்டும் . பின்னர் உங்களுக்கான பத்து ரூபிளையும் சேர்த்து மொத்தம் ஐம்பது ரூபிள்களை நிறுவனத்திடம் கொடுத்து சைக்கிளைப் பெற்றுக் கொள்ளலாம் . பத்து ரூபிளுக்கு உங்களுக்கு சைக்கிள் கிடைப்பதென்னவோ உண்மை தான் . ஆனால் ... முதன்முதலில் இந்தத் திட்டத்தில் சேருபவருக்கு சீட்டுக்களை விற்பதில் பெரிய பிரச்னை எதுவும் இருக்காது . இந்தத் திட்டத்தில் ஆர்வமுடைய நான்கு பேரை மட்டும் அவர் இனங்கண்டால் போதுமானது . அந்த நால்வர் ஒவ்வொருவரும் ...