Posts

Showing posts from July, 2022

கூகுள் கேட்ட கேள்விகள் -1

கூகுள் கேட்ட கேள்விகள் - 1 Questions by Google - 1 (Ideas panel questions) ஒரு சிறிய முன் குறிப்பு : நாம் தான் கூகுள் தேடுபொறியிடம் கேள்விகள் கேட்போம் . கூகுள் எப்படி கேள்வி கேட்கும் ? வலைப்பூக்களின் (blogs) உள்ளடகத்திற்குப் பொருத்தமான , ஆனால் , இணையத்தில் இன்னமும் பதில் சொல்லப்படாத கேள்விகளை , Ideas Panel என்ற பெயரில் கூகுள் தொகுத்து வழங்குகிறது . Beta version என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறிப்பிட்ட வலைப்பூக்களில் மட்டும் இத்தகைய கேள்விகளை கூகுள் பதிவேற்றம் செய்திருக்கிறது . நமது வலைப்பூவும் அதில் ஒன்று . வேறு மாதிரி சொல்வதானால் புதிய பதிவுகளுக்கான எண்ணக் கருக்களை (ideas) கூகுள் வழங்குகிறது . இந்தக் கேள்விகளின் தொகுப்பே இந்த வார பதிவு . 1. In case of scraping equity market by govt how the fund will be paid to shareholders ? அரசாங்கம் பங்குச்சந்தையை மூடி விட்டால் முதலீட்டாளர்களுக்குப் பணம் எப்படிக் கிடைக்கும் ? ஏன் இந்தக் கெட்ட கனவு ? பங்குச்சந்தையின் மூலமாக முதல் உருவாக்கம் (capital formation) நிகழ்கிறது . வேலை வாய்ப்புகள் உருவாகின்றன . அந்நியச் செலாவணி கிடைக்கிறது . அ...

செய்முறை வர்த்தகம்

செய்முறை வர்த்தகம் Algo Trading செய்முறை வர்த்தகம் என்பது மனித உணர்வுகளைக் களைந்த , முன்பே தீர்மானிக்கப்பட்ட சில அளவுருக்களின் (parameters) அடிப்படையில் கணினி மூலமாகப் பங்கு வியாபாரத்தை மேற்கொள்வதான ஒரு வியாபார முறையாகும் . இந்த அளவுருக்கள் பங்குகளின் விலை சார்ந்தோ , எண்ணிக்கை சார்ந்தோ , பங்குகளை வாங்குவதற்கான நேரம் சார்ந்தோ எவ்விதம் வேண்டுமானாலும் இருக்கலாம் . 1987 ல் அமெரிக்கப் பங்குச்சந்தை ஒரு மாபெரும் சரிவைச் சந்தித்தமைக்கு இந்த செய்முறை வர்த்தகம் தான் காரணம் . பங்குச்சந்தையில் நாம் அன்றாடம் சந்திக்கும் stop loss ( நஷ்டம் தவிர்த்தல் - பங்கின் விலை நாம் வாங்கிய விலையை விட ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைந்ததும் விற்று விடுவது) மற்றும் target price ( இலாபத்தைப் பிடித்தல் - பங்கின் விலை நாம் வாங்கிய விலையை விட  ஒரு குறிப்பிட்ட சதவீதம் கூடியதும் விற்று விடுவது) போன்றவையும் இந்த செய்முறையின் பாற்பட்டது தான் . செய்முறை வர்த்தகத்தைப் புரிந்து கொள்ள பங்கு வர்த்தகத்தின் இந்த இரண்டு முக்கியக் கருவிகளான நஷ்டம் தவிர்த்தல் மற்றும் இலாபத்தைப் பிடித்தல் என்பதைக் கொஞ்சம் கிட்டே சென்று ஆராயலாம்...

பங்கு கேள்வி பதில் - 2

பங்கு கேள்வி பதில் - 2 கேள்வி : Sundaram Finance பங்குகளை வாங்கலாமா ? அல்லது அதன் நிரந்தர வைப்புத் திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாமா ? பதில் : Sundaram Finance பங்குகளை வாங்கினால் நீங்கள் அதன் owner . சரி , பகுதி owner . சுந்தரம் பைனான்ஸ் நிரந்தர வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் நீங்கள் அதன் Loaner . Owner தான் அதிக அதிக அளவிலான அபாயங்களை ஏற்றுக் கொள்கிறார் . எனவே அபாய வெகுமதி (Risk - Reward ) owner க்கு மட்டுமே உரித்தானது . கேள்வி : Balmer Lawrie Investments பங்கின் விலை குறைந்து கொண்டே வருகிறதே ? பதில் : அதன் பங்கு ஈட்டு விகிதம் ( Dividend Yield ) கூடிக் கொண்டே வருகிறதே ! கேள்வி : Info Edge நிறுவனப் பங்கு மட்டும் ஏன் தொடர்ந்த வாக்கில் அபரிமிதமான PE அளவுகளில் வர்த்தகமாகிறது ? பதில் : Info Edge நிறுவனம் வளரக்கூடிய நிறுவனங்களை இனங்கண்டு அவைகளில் முதலீட்டை மேற்கொள்கிறது . இந்த நிறுவனங்கள் வளர்ந்து அவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது மதிப்புத் திறப்பு (value unlocking) என்ற வகையில் பெரும் பணம் பெறக்கூடிய வாய்ப்பு கிட்டுகிறது . சமீபத்தில் Zomato நிறுவனம் பட்டியலிடப்ப...

பரிச்சய சாய்வு

பரிச்சய சாய்வு Familiarity Bias நடத்தை நிதியியலின் (Behavioural Finance) பிறிதொரு அங்கமான பரிச்சய சாய்வு குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம் . பரிச்சயமானவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தன்மை பரிச்சய சாய்வு என்பதாக அழைக்கப்படுகிறது . நாம் நமது நண்பர்களின் வழக்கமான (regular) புகைப்படங்களையும் நமது வலம் இடமான (inverted) புகைப்படங்களையும் விரும்பிப் பார்க்கிறோமாம் . ஏனெனில் நிஜ வாழ்க்கையில் நமது நண்பர்களை வழக்கமான முறையில் பார்க்கிறோம் . ஆனால் கண்ணாடியில் நமது வலம் இடமான பிம்பத்தை மட்டுமே பார்த்துப் பழகியிருக்கிறோம் . சரி , முதலீட்டில் இந்த சாய்வின் தாக்கம் என்னவாக இருக்கும் ? நிறுவனம் ஒன்றின் பொருளை நீங்கள் நீண்ட நெடுங்காலமாகப் பயன்படுத்துவதாகக் கொள்ளலாம் . எனில் அந்த நிறுவனத்தின் மேல் ஒரு சாய்வு ஏற்படுவது இயல்பே . ஆனால் சந்தையில் அந்த நிறுவனம் உயர் விலை வருவாய் விகிதத்தில் (price earning multiple) வர்த்தமாகிக் கொண்டிருக்கலாம் . நிறுவனம் என்பது வேறு . நிறுவனப் பங்கு என்பது வேறு . நிறுவனத்தின் நிதி விகிதங்கள் சிறப்பாக இருந்தாலும் உயர் விலை கொடுத்து அந்த நிறுவனப் பங்குகளை வாங்...

பொறுமை மொழிகள் - 1

பொறுமை மொழிகள் - 1 Patience Quotes 1. வளர நேரம் எடுக்கும் மரம் சிறந்த பலனைத் தரும் . 2. ஒரு மலையை அதன் அருகிலிருந்து பார்க்க முடியாது . 3. ஒரே இரவில் பொறுமையைப் பெற முடியாது . அது ஒரு தசையை உருவாக்குவது போன்றது . ஒவ்வொரு நாளும் நீங்கள் அதற்கு வேலை செய்ய வேண்டும் .  4. சில ஆழமான கணக்கீடுகளை விட பொறுமை ஆகப்பெரிய பலன்களைத் தருவதாக இருக்கிறது . 5. மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துவது புத்திசாலித்தனம் அல்ல . அது காத்திருக்கும் திறன் .  6. அம்புக்குறியின் இயக்கம் ஒரு நொடி நீடிக்காது . ஆனால் அது ஒரு திறமை . அதனை அடையப் பல்லாண்டுகள் பிடிக்கும் .   7. பொறுமை செயலற்ற வெறும் காத்திருப்பு மட்டுமல்ல . அது உங்கள் குறிக்கோள்களையும் கனவுகளையும் பெறுவதற்குத் தேவையான செயல்முறையைத் தீவிரமாக ஏற்றுக் கொள்வதாகும் . 8. பெரிய படைப்புகள் பலத்தால் செய்யப்படுவதில்லை . அவை விடாமுயற்சியால் செய்யப்படுகின்றன .  9. பொறுமையின் பலன்களை உடனடியாக அறுவடை செய்ய முடியாது . மேலும் பெரும்பாலான சமயங்களில் விதைக்கப்பட்ட இடம் ஒன்றாகவும் அறுவடை செய்யும் இடம் வேறாகவும் இருக்கும் .  10. வெற்றியாளர்கள் தொடர்...