கதைகளின் கதை- 2
கதைகளின் கதை - 2 Narrative Fallacy - 2 'வாரன் பஃபெட், Berkshire Hathaway என்கிற நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஒரு ஜவுளி நிறுவனமாகத் தொடங்கப்பட்டது, இன்று, பல்வேறு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வெற்றிகரமான ஒரு முதலீட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. அதன் சந்தை மதிப்பு 95.353 டிரில்லியன் அமெரிக்க டாலர். அது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பஃபெட், அதன் பங்குகள் மூலமாக உலகப் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்' Berkshire Hathaway நிறுவனத்தைக் குறித்து இவ்வாறு விளக்குவது narrative fallacy ன் பாற்பட்டது. எந்த ஒரு நிறுவனமும் இவ்வாறு நேர் கோட்டில் பயணித்திருக்காது. நாம் Berkshire Hathaway நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்து அதன் இன்று வரையிலான கதையை ஒரு பருந்துப் பார்வையாகப் பார்க்கலாம். பஃபெட், அவர் முதலீட்டாளர்களுக்கு வருடாவருடம் எழுதும் கடிதத்தில் அவருடைய தவறுகளை முதலில் பட்டியலிடுவது வழக்கம். அந்த வகையில் பஃபெட்டின் முக்கியமான சில தவறுகளை முதலில் பார்க்கலாம். Berkshire Hathaway ஜவுளி ஆலையை...