Posts

Showing posts with the label நடத்தை நிதியியல்

அடிப்படை விகித மாயை

அடிப்படை விகித மாயை Base Rate Fallacy  அடிப்படை விகித மாயை (Base rate fallacy)  என்பது அடிப்படை விகிதத்தைப் புறக்கணித்து பிற தற்காலிகமான விகிதங்களில் கவனத்தைச் செலுத்தும் ஒரு சார்பு நிலையாகும். உலக வர்த்தக மையக்கட்டிடம் விமானங்களைக் கொண்டு தகர்க்கப்பட்ட சமயம் அது. தொலைக்காட்சி நிலையங்கள் அல்லும் பகலும் இந்த மோதல் காட்சிகளை ஒளிபரப்பிய வண்ணமாக இருந்தன. மக்கள், விமானப்பயணத்தை அறவே ஒதுக்கிக் கார்களில் சாலை மார்க்கமான பயணத்தை மேற்கொண்டனர். உலக வர்த்தக மையக் கட்டிட விமான மோதலில் இறந்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள், அதாவது 1595 பேர் இந்தத் தரைவழிப் பயணத்தில் இறந்தனர். விமானப்பயணத்தில், ஓராண்டில், சராசரியாக இறப்பவர்களை விட தரை மார்க்கப் பயணத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் மிக அதிகமாகும்.  விமானப்பயணம் என்பது மிகவும் பாதுகாப்பான ஒரு பயண வழிமுறையாகும். பல்லாண்டுகளின் அனுபவத்தில், சரிபார்ப்பு பட்டியல் (checklist) வழிமுறையின் படி அது செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எப்போதாவது விமானமொன்று விபத்தில் சிக்கினால் அது அதி கவனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. தரைவழி விபத்துக்களில் அங்...

இயல்பு நிலை சாய்வு

இயல்பு நிலை சாய்வு Status quo Bias  இயல்பு நிலை சாய்வு என்பது ஏற்கெனவே உள்ள நிலைமைகளைப் பேணுதல், இந்த நிலைமைகளை மாற்றத்திற்கு உட்படுத்தினால் அது அனுகூலங்களுக்கு இட்டுச்செல்லும் என்று தெரிந்தும் பழைய நிலைமைகளையே தொடர்வதான ஒரு மனோநிலையாகும்.  பிதுரார்ஜித வடிவில் உங்களுக்குப் பாட்டனாரின் ஒரு பங்குத்தொகுப்பு கிடைப்பதாகக் கொள்ளலாம். அவர் காலத்தில் வாங்கப்பட்ட பங்குகளைக் கொண்டு அது கட்டப்பட்டுள்ளது தெளிவு. அது உங்கள் கைக்குக் கிடைத்ததும் நீங்கள் அந்தப் பங்குத்தொகுப்பைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி இனி தேறவே தேறாது என்பதான பங்குகளைக் களையெடுப்பது, மதில் மேல் பூனையாக இருக்கும் பங்குகளைக் கண்காணிப்புக்கு உட்படுத்துவது மற்றும் புதிய பங்குகளை மதிப்பாய்வு செய்து வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். மாறாக, காலத்தின் கோலத்தில் உருமாறிய அவற்றை இவை எங்கள் பாட்டனார் வாங்கிய பங்கு என்று உணர்வுபூர்வமாக வைத்திருப்பது, இத்தகைய பங்குகளை விற்பது, வரி வகையறாக்களுக்கு இட்டுச்செல்லும் என்று அவற்றின் விற்பனையை ஒத்திப்போடுவது போன்றவை இயல்பு நிலை சாய்வின் பாற்பட்டதாகும். பங்குச்சந்தை குறித்த ஒரு புரி...

கட்டமைப்பு விளைவு

கட்டமைப்பு விளைவு Framing Effect  பரஸ்பர நிதி ஒன்றின் விளம்பர வாசகம் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.  70 சதவீதம் மிகை வருமானத்தைக் கொடுக்கக்கூடிய வாய்ப்பு ... இன்னொரு நிதியின் விளம்பரம் கீழ்க்கண்டவாறு உள்ளது. 30 சதவீதம் குறை வருமானத்தைக் கொடுக்கக்கூடிய வாய்ப்பு ... எந்த நிதியில் நீங்கள் முதலீடு செய்வீர்கள்? பெரும்பாலோனோர் முதல் நிதியில் முதலீட்டை மேற்கொள்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  இரண்டு நிதிகளும் ஒரே தகவலைத் தான் தெரிவிக்கின்றன.  ஆனால் அவை வார்த்தைகளை அமைக்கும் கட்டமைப்பு மாறுகிறது. முதல் நிதி இலாபத்தை முன்னிறுத்துகிறது. இரண்டாவது நிதி இழப்பை முன்னிறுத்துகிறது. 100 சதவீதம் இலாபம் அடையப் பெறுவதும் 100 சதவீதம் நஷ்டம் அடையப் பெறுவதும் ஒன்றல்ல. இது நஷ்டம் உவர்ப்பு சாய்வு (Loss aversion bias) என்பதாக அழைக்கப்படும். எனவே இழப்பை மட்டுமல்ல, இழப்பை முன்னிறுத்தும் நிதியில் கூட நாம் முதலீடு செய்யத் துணிவதில்லை.  இலாபத்தையே நாம் எப்போதும் விரும்புகிறோம். இவ்வாறு அடிப்படையான உண்மைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட வார்த்தைகளைக் கவனமாகக் கட்டமைப்பதன் மூலமாக மாந்தர்கள...

அளவைச் சாய்வு

அளவைச் சாய்வு Quantitative Bias அளவைகளின் பக்கம் அதீதமாகச் சாய்வு கொள்வது அளவைச் சாய்வு (Quantitative bias) என்று அழைக்கப்படுகிறது. பங்குச் சலிப்பான்களை (stock screener) ரொம்பவும் இறுக்கமாக (rigid) வைத்திருக்கக் கூடாது. உதாரணமாக நிறுவனங்கள் அடிக்கடி பங்குச்சந்தைக்கு வந்து நிதி திரட்டி முதல் நீர்க்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது, அதற்குக் கடன் இருக்கக்கூடாது, ROCE அதிகமாக இருக்க வேண்டும், அதற்கு ஆகப்பெரிய அகழி இருக்க வேண்டும், நிறுவனத்தில் நிறுவனர் பங்கு பெரும்பான்மையாக இருக்க வேண்டும், அது அறவழியில் செயல்படுவதாக இருக்க வேண்டும், அது குறைவான PE மதிப்பிலும் வர்த்தகமாக வேண்டும், அது பங்காதாயங்களை அதிக அளவில் வழங்க வேண்டும், அது இலவசப்பங்குகளை அள்ளி வழங்குவதாகவும் பங்குப் பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பை மேற்கொள்வதாகவும் இருக்க வேண்டும் என்று சலிப்பானை வைத்திருந்தால் அதில் எந்தப் பங்கும் தேறி வராது. அதற்காகச் சலிப்பான்களை ரொம்பவும் தளர்வாகவும் (lenient) வைத்திருக்கக் கூடாது. தளர்வாக வைத்திருந்தால் எல்லாப் பங்குகளும் தேறி வந்து விடும். Sundram Fasteners நிறுவனப் பங்குகளை, அது தொடர்ந்தவாக்கி...

கதைகளின் கதை- 2

கதைகளின் கதை - 2 Narrative Fallacy - 2 'வாரன் பஃபெட், Berkshire Hathaway என்கிற நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஒரு ஜவுளி நிறுவனமாகத் தொடங்கப்பட்டது, இன்று, பல்வேறு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வெற்றிகரமான ஒரு முதலீட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. அதன் சந்தை மதிப்பு 95.353 டிரில்லியன் அமெரிக்க டாலர். அது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பஃபெட், அதன் பங்குகள் மூலமாக உலகப் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்' Berkshire Hathaway நிறுவனத்தைக் குறித்து இவ்வாறு விளக்குவது narrative fallacy ன் பாற்பட்டது. எந்த ஒரு நிறுவனமும் இவ்வாறு நேர் கோட்டில் பயணித்திருக்காது. நாம் Berkshire Hathaway நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்து அதன் இன்று வரையிலான கதையை ஒரு பருந்துப் பார்வையாகப் பார்க்கலாம்.  பஃபெட், அவர் முதலீட்டாளர்களுக்கு வருடாவருடம் எழுதும் கடிதத்தில் அவருடைய தவறுகளை முதலில் பட்டியலிடுவது வழக்கம். அந்த வகையில் பஃபெட்டின் முக்கியமான சில தவறுகளை முதலில் பார்க்கலாம்.   Berkshire Hathaway ஜவுளி ஆலையை...

செயற்பாடு சாய்வு

செயற்பாடு சாய்வு Action Bias செயற்பாடு சாய்வு (Action Bias) என்பது செயலற்ற தன்மையை விட செயல்பாட்டை விரும்பும், அவ்வாறு செய்வது எந்த முன்னேற்றத்திற்கும் இட்டுச் செல்லாது என்பதை உணர்ந்தும் அதனையே தொடர்ந்தும் செய்வதான உளவியல் சார்ந்த ஒரு நிலையாகும். கால்பந்து விளையாட்டு ஒன்றைக் கற்பனை செய்து பார்க்கலாம். அது உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி. இரண்டு அணிகளும் புள்ளி எதுவும் போடவில்லை. ஆட்டத்தின் இறுதியில் ஒரு அணிக்குத் தண்டனை உதை (penalty kick)  அடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது எதிரணி இலக்குக் காப்பாளரின் (goal keeper) மனநிலையைக் கணக்கில் கொண்டு பாருங்கள். அந்தப் போட்டியில் வென்று உலகக்கோப்பையைக் கைப்பற்றுவது இப்போது அவர் கையில், காலில், அசைவில் இருக்கிறது. அவர் குறியிலக்குக் கம்பங்கள் (goal post) நடுவில் நிலையாக நிற்காமல் வலது இடதாக அசைந்து கைகளையும் கால்களையும் வீசி தடுப்பு வேலி அமைத்துத் தயார் நிலையில் இருப்பதாகக் காட்டிக் கொள்வார். ஆனால் இலக்குக் காப்பாளர்கள் வெறுமனே நடுவில் நிலையாக நின்றால் பெரும்பான்மையான தடுப்பாட்டத்திற்கு அதுவே போதுமானதாக இருக்கும். இலக்குப் பகுதியை ம...

மந்தை மனப்பான்மை

மந்தை மனப்பான்மை Herd Mentality  மனிதர்கள் தனிப்பட்டு சிந்திக்காமல் மந்தை மனப்பான்மையில் முடிவுகளை எடுப்பது மந்தை மனப்பான்மை (Herd Mentality) என்பதாக அழைக்கப்படுகிறது.  நம் மூதாதையர்கள் முன்பொரு காலத்தில் கூட்டம் கூட்டமாகக் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் எந்த முடிவுகளையும் கூட்டமாகச் சேர்ந்து தான் எடுப்பார்கள். எந்த இடத்திற்கு வேட்டையாடச் செல்வது என்பதில் தொடங்கி அவர்களது கூட்டத்தில் புதிதாக ஒருவரை இணைத்துக் கொள்வது வரை அனைத்து முடிவுகளும் கூட்டு அளவில் மட்டுமே எடுக்கப்படும்.  இப்போது நாம் அந்தக் கற்காலத்திலிருந்து பயணித்து எவ்வளவோ தூரம் வந்து விட்டோம். இப்போது நாம் வேட்டையாடச் செல்வதில்லை. பல்வேறு நாடுகளுக்கு அவற்றின் பற்பல இடங்களுக்குச் சுற்றுலா செல்கிறோம். சமூக ஊடகங்களில் யாரை நமது நண்பர்களாகச் சேர்த்துக் கொள்வது என்பது இப்போது நம் கையில் (விரலில்) உள்ளது. இருந்தாலும் சில இடங்களில் நாம் இன்னமும் அந்தக் கற்கால மனிதன் போலவே நடந்து கொள்கிறோம். அவற்றில் மிக முக்கியமான ஒரு இடமாகப் பங்குச்சந்தையைக் குறிப்பிடலாம்.  பங்குச்சந்தையில் அவ்வப்போது குமிழிகள் தோன்றி...

இருப்பு சாய்வு

இருப்பு சாய்வு Availability Bias  சூழ்நிலைகளை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் போது உடனடியாக மனதிற்கு வரும் தகவல்களை வைத்து முடிவெடுப்பதான மாந்தர்களின் மனச்சாய்வு இருப்பு சாய்வு (Availability bias) என்பதாக அழைக்கப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் மனம் காட்டும் இந்த உடனடித் தகவல்கள் தவறான முடிவுகளுக்கு மட்டுமே நம்மை இட்டுச் செல்லும்.  இருப்பு சாய்வு என்பதை பிரச்னை ஒன்றுக்கான தீர்வைக் கண்டடைவதற்கு மனம் பயன்படுத்தும் குறுக்கு வழி என்பதாகச் சொல்லலாம். சமீப கால சாய்வின் (Recency Bias) ஒரு அங்கமாக இந்த இருப்பு சாய்வைப் பார்க்க முடியும் என்றாலும் அதற்கும் இதற்கும் நுட்பமான சில வேறுபாடுகள் இருக்கின்றன. சமீப கால சாய்வு என்பது சமீபத்தில் நடந்த நிகழ்வுகளில் கவனம் கொள்வது. இருப்பு சாய்வு என்பது எப்போதோ நடந்த நிகழ்வாக இருந்தாலும் பசு மரத்தாணி போல் மனதில் பதிந்த நிகழ்வுகளில் கவனம் கொள்வது. Jaws திரைப்படம் 1975 ஆம் ஆண்டு வெளி வந்தது. Stephen Spielberg ன் காலத்தை வென்ற திரைக்காவியம் அது. Jaws படம் எடுக்கும் போது தொழில்நுட்பம் அவ்வளவு முன்னேறியிருக்கவில்லை. சுறா ஒன்றின் பொம்மையைக் கொண்டு அந்தத் த...