Posts

Showing posts from February, 2026

வாழ்க்கை பதில்கள்- 3

வாழ்க்கை பதில்கள்- 3 கேள்வி: பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியுமா? பதில்: பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியும். தேவைப்படுபவர்களுக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பணத்தைக் கொடுத்துப் பாருங்கள். கேள்வி: எல்லாக் காலத்திற்கும், எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துவதான அறிவுரை ஏதேனும் இருக்கிறதா? பதில்: இதுவும் கடந்து போகும்! கேள்வி: நெருப்பால் நெருப்பை அணைக்க முடியுமா? பதில்: முடியும். காடு ஒன்றில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பரவுகையில் நெருப்பு பரவி வரும் பகுதியை அடுத்து நெருப்பு வைத்து விடுவார்கள். அந்த நெருப்பு, நிலப்பரப்பை மரம் செடி கொடிகளின்றி வெறுமையாக்கி விடும். அதனைத் தாண்டி நெருப்பு பரவாது. கேள்வி: பணத்தைப் பணமாகப் பார்ப்பது எப்படி? பதில்: பணத்தை ஒரு கருவியாகப் பாருங்கள். சுத்தியல் ஒரு கருவி. அந்தக் கருவியை எப்போது பயன்படுத்துவீர்கள்? ஆணியை அடிக்க மற்றும் ஆணியை எடுக்கும் போது. அதே மாதிரி பணத்தையும் பாருங்கள். பணம் என்பது நிதி விடுதலை மற்றும் அதன் மூலமான நேர விடுதலைக்கான ஒரு கருவி. அவ்வளவு மட்டுமே. மற்றபடி கையில் எப்போதும் சுத்தியலை வைத்திருந்தால் எதைப் பார்த்தாலும் ஆணியாகவே தெரியும். கேள்வ...

James Clear- மணி மொழிகள்- 2

James Clear- மணி மொழிகள்- 2 James Clear Quotes- 2 1. You have to fall in love with boredom. சலிப்புடன் காதல் கொள்ளுங்கள். 2. When the world seems uncontrollable, focus on what you can control. உலகம் கட்டுப்பாடற்றதாகத் தோன்றும்போது, ​​உங்களால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் கவனம் செலுத்துங்கள். 3. Life is a series of tradeoffs and greater results usually require greater tradeoffs . வாழ்க்கை என்பது பரிமாற்றங்களின் தொடர் மட்டுமே. மேலும், பெரிய முடிவுகளுக்கு பொதுவாகப் பெரிய பரிமாற்றங்கள் தேவைப்படுகின்றன. 4. The willingness to do the unsexy work is a competitive advantage. கவர்ச்சியற்ற வேலையைச் செய்வதில் விருப்பம் கொள்வது போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனுகூலத்தை அளிக்கிறது. 5. The people who stick with things for years and never stop almost always win the race. பல்லாண்டுகளாக ஒரு சில செயல்களைக் கடைப்பிடிப்பவர்கள் மற்றும் அதனை ஒருபோதும் நிறுத்தாதவர்கள் எப்போதும் பந்தயத்தில் வெற்றி பெறுகிறார்கள். 6. The secret of creative work is to make a lot and publish a little. படைப்பாற்றல் மிக்க எழுத்தின் இர...

பன்மடங்காளர்களைப் பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி?

பன்மடங்காளர்களைப் பல்லாண்டுகள்  வைத்திருப்பது எப்படி? பன்மடங்காளர்களை (Multibaggers) பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி என்று பார்ப்பதற்கு முன் பன்மடங்காளர்கள் என்பதை முதலில் வரையறுத்து விடலாம். பன்மடங்காளர் என்பது இரண்டு மடங்கு கூடிய பங்கு என்பதான ஒரு எண்ணப்போக்கு நிலவுகிறது. பன்மடங்காளர் என்று ஒரு பங்கைக் குறிப்பிட வேண்டுமென்றால் அவை குறைந்தபட்சம் நீங்கள் வாங்கிய விலையிலிருந்து 100 மடங்கு கூட வேண்டும். 100 மடங்கு என்பது எட்டாத ஒரு உயரம் போல் தோன்றினாலும் 100 மடங்காளர் என்பது தொடர்ந்தவாக்கிலான இரண்டு 10 மடங்காளர் மட்டுமே. 10 ரூபாய் பங்கு 10 மடங்கு கூடினால் அது 100 ரூபாய் ஆகி விடும். இந்த 100 ரூபாய் பங்கு 10 மடங்கு கூடினால் 1000 ரூபாய் ஆகி விடும்.  100 மடங்கு கூடும் வரை ஒரு பங்கை வைத்திருப்பது மட்டும் தான் இந்தப் பன்மடங்காளர் பயணத்தின் கடினமான ஒரு பகுதி. 100 மடங்காளர் ஆகி விட்டால் பின்னர் தன்னளவில் அது வேகமெடுக்கத் தொடங்கி விடும். மேலும் இந்தப் பங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் பங்கு ஈட்டு விகிதம் (dividend yield) இந்தப் பங்குகளை விற்காமல் உங்களைக் காக்கும் அரணாக இருக்கும்....

விலையும் மதிப்பும்

விலையும் மதிப்பும் Price and Value  பங்குச்சந்தையில் விலை உயர்ந்த பங்குகள் எவை என்றால் சுலபமாகச் சொல்லி விடலாம். MRF (ரூ.1,46,195) Page Industries (ரூ.35,650) Shree Cement (ரூ.27,350) மதிப்பு மிகுந்த பங்குகள் என்றால் அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட முடியாது. சற்று யோசித்து, கணக்கிட்டுத் தான் சொல்ல முடியும். மதிப்பு என்ற கருத்தாக்கத்தில் நகரும் பகுதிகள் நிறைய வந்து விடும். எவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டாலும் விடை சரியானது தானா என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாது. பங்குகளின் விலை மற்றும் பங்குச்சந்தை குறியீடு போன்றவை விலை குறித்த அளவீடுகள். அளவீடு செய்ய இவை சுலபமாக இருக்கலாம். ஆனால் அதைக் கொண்டு நாம் முதலீட்டு முடிவுகள் எதனையும் எடுக்கக்கூடாது. உண்மையான மதிப்பைக் கண்டறிய நாம் இன்னும் சற்று ஆழமாகத் தோண்ட வேண்டும். முதலில் குறிப்பிட்ட MRF நிறுவனப்பங்கையே எடுத்துக் கொள்ளலாம். நிறுவனம் இதுவரை பங்குப் பிரிப்பு எதுவும் மேற்கொள்ளவில்லை. இரண்டு முறை மட்டும் இலவசப்பங்களிப்பை மேற்கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் பங்கு சார் முதல் (equity capital) 4.24 கோடி ரூபாய் மட்டுமே. பத்து ரூபாய் முக மதிப்பை...