புதிய 52 வாரக் குறைவு உத்தி
புதிய 52 வாரக் குறைவு உத்தி New 52 week low strategy 52 வாரக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகளில் முதலீடு செய்யலாமா? 52 வாரக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகள், பெரும்பாலான சமயங்களில், நியாயமான காரணங்களுக்காக அவ்விதம் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும். இத்தகைய நிறுவனங்கள் அடிக்கடி சந்தைக்கு வந்து நிதியைத் திரட்டி அவற்றின் பங்கு முதலை (equity capital) நீர்த்துப்போகும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். இவற்றின் கடன்-முதல் விகிதம் (debt-equity ratio) கட்டுக்கடங்காமல் இருக்கும். இவை ஒருபோதும் வளர்ச்சியின் மீதான வளர்ச்சியை எட்டாது. இவற்றுக்கு எந்த அகழியும் (moat) இருக்காது. இவற்றில் நிறுவனர் பங்கு ஒரு சதவீதமாகவும் சிறு முதலீட்டாளர்கள் பங்கு 99 சதவீதமாகவும் இருக்கும். அறம் என்பது அறவே இருக்காது. ஆனால் இந்த 52 வாரக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகளின் வரிசையில் புதிய நிறுவனம் ஒன்று இடம் பெற்றால் (new 52 week low) அது கவனத்திற்குரிய ஒன்றாகிறது. சமீபத்தில் Natco Pharma பங்கு, புதிய 52 வாரக் குறைவு வரிசையில் இடம் பெற்றது. இந்த மாதிரி பங்குகளைப் பகுப்பாய்வுக்கு உட்படு...