அழியாத செல்வம் கல்வி
அழியாத செல்வம் கல்வி
1. That is what learning is. You suddenly understand something you've understand all your life, but in a new way- Doris Lessing
கற்றல் என்பது இது தான். நீங்கள் ஏற்கெனவே புரிந்து கொண்டதைப் புதிய முறையில் தெரிந்து தெளிவது.
2. Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.
நாளை இறப்பது போல் வாழுங்கள். என்றென்றும் வாழ்வது போல் கற்றுக்கொள்ளுங்கள்.
3. Books increase by rule of compound interest: one interest leads to another interest and this compounds into third- Tom Rachman
புத்தகங்கள் கூட்டுப்பெருக்க விதியின் படி செயல்படும்: ஒன்றின் மீதான ஆர்வம் மற்றொன்றுக்கு இட்டுச் செல்லும். அது பிறிதொன்றுக்கு அழைத்துச் செல்லும்.
4. The only thing that compounds faster than interest is learning- Orrin Woodward
வட்டி வருமானத்தை விட அதிகமாகக் கூட்டுப்பெருக்கத்திற்கு உள்ளாவது கற்றல் மட்டுமே.
5. Read 500 pages everyday. That's how knowledge works. It builds up like compound interest- Warren Buffett
தினமும் 500 பக்கங்களைப் படியுங்கள். அது கூட்டு வட்டியைப் போல் செயல்படும்.
6. Self education is the only kind of education- Isaac Asimov
சுயமாகக் கற்பதே ஒரேயொரு முறையான கல்வி முறை.
7. 'Easy come easy go' is a saying as applicable to wealth as to knowledge.
எளிதாகக் கிடைப்பது எளிதாகச் சென்று விடும் என்பது செல்வத்துக்கு மட்டுமல்ல கல்விக்கும் பொருந்தும்.
8. Education is an ornament in prosperity and a refuge in adversity- Aristotle
கல்வி என்பது வளமையில் அணிகலன்; இன்னலில் புகலிடம்.
9. Our most valuable possessions are those which can be shared without lessening those which, when shared, multiply- William H Danforth
பகிர்தலின் போது பன்மடங்காகும் செல்வமே விலைமதிப்பற்ற செல்வம்.
10. To educate educaters! But the first ones must educate themselves. And for these I write- Friedrich Nietzsche
பிறருக்குக் கல்வி கற்பிக்கும் முன் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பொருட்டே நான் எழுதுகிறேன்.
Comments
Post a Comment