Posts

Showing posts with the label பங்காதாயம்

பங்காதாய வளர்ச்சி முதலீடு

பங்காதாய வளர்ச்சி முதலீடு Dividend Growth Investing  பங்குச்சாமி அந்த நிறுவனப்பங்குகளை 1990 களின் ஆரம்பத்தில் அதன் முதல் பொது வெளியீட்டில் வாங்கினார். ஒரு பங்கின் விலை நூறு ரூபாய் என்று நூறு பங்குகளை வாங்கியதாக ஞாபகம். நிறுவனப்பங்கு, சந்தையில் ஐம்பது சதவீத அதிக விலையில் பட்டியலிடப்பட்டது. பங்குச்சாமியின் பெயர் தான் பங்குச்சாமியே தவிர அவருக்குப் பங்குச்சந்தை நெளிவு சுளிவுகள் அவ்வளவாகத் தெரியாது. அவருடைய பங்குச்சந்தை நண்பர் சில நாட்கள் சென்று அவரைச் சந்தித்த போது அந்தப் பங்குகளை விற்று இலாபத்தைப் பிடித்தாயா என்பதாகக் கேட்டார். விற்கவில்லை என்று கூறியதும் ஒருமாதிரி ஙே என்பதாகப் பார்த்தார். நாங்களெல்லாம் அதன் பங்குகளைப் பத்து நாட்களில் விற்று சரிபாதி இலாபம் எடுத்து விட்டோம், இந்த இலாபத்திற்கு ஆண்டாண்டு வருமானம் (Annualised yield) எவ்வளவு தெரியுமா என்றும் கேட்டார். பங்குச்சாமியின் மனதில் பத்து நாட்களில் 50 சதவீதம் இலாபம் என்ற கணக்கில் ஆண்டு முழுவதும் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு எவ்வாறு கிட்டும் என்பதான ஒரு வினா எழுந்தது. இதற்கிடையில் நிறுவனம் அதன் முதல் பங்காதாயத்தை 1994 ஆம் ஆண்டு வழங்கிய...

பங்காதாயம் - பங்கு ஈட்டு விகிதம் என்ன தொடர்பு ?

பங்காதாயம் - பங்கு ஈட்டு விகிதம் என்ன தொடர்பு ? பங்காதாயம் (dividend) பங்கின் முக மதிப்பைக் கொண்டு கணக்கிடப்படுவது . பங்கு ஈட்டு விகிதம் (dividend yield) பங்கின் விலையை வைத்துக் கணக்கிடப்படுவது . ஒரு சின்ன உதாரணம் சொன்னால் எளிதாகப் புரிந்து விடும் . Balmer Lawrie Investments நிறுவனம் 2022 ஆம் வருடத்திற்கு 300 சதவீதம் பங்காதாயமாக வழங்கியிருக்கிறது . பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு 30 ரூபாய் பங்காதாயம் . பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட Balmer Lawrie Investments நிறுவனப் பங்கு , சந்தையில் தற்போது 381 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிறது . 381 ரூபாய் கொடுத்து தற்போது அதன் பங்குகளை வாங்கும் முதலீட்டாளருக்கு 7.87 (30 × 100 ÷ 381) சதவீத வருமானம் மட்டுமே கிடைக்கப்பெறும் . இந்த 7.87 சதவீதம் தான் பங்கு ஈட்டு விகிதம் என்று அழைக்கப்படுகிறது .  தரமான பங்குகள் சந்தையில் ஒரு சதவீத பங்கு ஈட்டு விகிதம் என்ற அளவில் மட்டுமே வர்த்தகமாகும் (அதற்காக Balmer Lawrie Investments பங்கு தரமற்றது என்று நினைக்க வேண்டாம் . அது ஒரு பிறழ்வு ) வேறு மாதிரி சொல்வதானால் தரமான பங்குகளை வாங்கும் முதலீட...

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல் பாட்டியும் பேத்தியும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். பேத்தி, கடந்த வருடப் பங்குச்சந்தை அவளை நட்டாற்றில் விட்டதாகப் புலம்புகிறாள். பாட்டி, கடந்த வருடப் பங்குச்சந்தை மிகச் சிறப்பாக இருந்ததாகவும், பங்காதாயம், அதற்கு முந்தைய வருடத்தை விடக் கூடுதலாகக் கிடைத்ததாகவும் கூறுகிறாள். யார் சொல்வது சரி? அவரவர் கோணத்தில் இருவர் சொல்வதும் சரி தான். ஆனால், பங்குச்சந்தையைச் சரியான கோணத்தில் பார்ப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் பாட்டியின் கருத்து தான் சரி.  பங்கு முதலீட்டில் இரண்டு விதங்களில் வருமானம் கிடைக்கிறது. ஒன்று, முதலீட்டுப்பெருக்கம் (capital appreciation)  இரண்டு, பங்காதாயம் (dividend) இதில் முதலீட்டுப் பெருக்கத்தைத் தான் நம்மவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றனர். இன்ன விலைக்கு வாங்கினேன், இன்ன விலைக்கு விற்றேன், இவ்வளவு இலாபம் என்பதாகத் தான் அவர்களின் எண்ணக்கணக்கு இருக்கும். பங்காதாயத்தைப் பற்றிய பேச்சே இருக்காது. மேலும், பங்காதாயம் பங்குகளின் முக மதிப்பிற்கு வழங்கப்படுவதால் மிகவும் குறைவாக இருக்கும். ஒரு சின்ன உதாரணம். HDFC நிறுவனப் பங...