Posts

Showing posts with the label மென் சொத்துக்கள்

வாசிப்பு - சுவாசிப்பு

வாசிப்பு - சுவாசிப்பு Reading Quotes 1. Books are the plane , and the train , and the road . They are the destination , and the journey . They are home . - Anna Quindlen  புத்தகங்களே நமது பயண வாகனம் மற்றும் பாதை . அவைகளே நாம் அடைய வேண்டிய இலக்குமாகும் . அவைகளே நம் பயணம் . நம் இல்லம் . 2. Reading makes immigrants of us all . It takes away from home , but more important , it finds home for us everywhere . வாசிப்பு நம்மை அந்நியர் ஆக்கும் . நம்மை நம் வீட்டை விட்டுக் கொண்டு செல்லும் . ஆனால் மிகவும் முக்கியமாக எல்லா இடங்களிலும் நமக்கு வீட்டை அமைத்துக் கொடுக்கும் .  3. Reading is discount ticket to everywhere - Mary Schmich  வாசிப்பு எல்லா இடங்களிலும் செல்லுபடியாகக்கூடிய தள்ளுபடிச் சீட்டு . 4. Reading is to the mind what exercise is to the body - Joseph Addison உடம்புக்கு உடற்பயிற்சி மாதிரி மனதிற்கு வாசிப்பு . 5. The unread story is not a story ; it is little black marks on wood pulp . The reader , reading it , makes it live ; a live thing , a story - Ursula K Le Guin படிக்காத க...

நிதானமாக செல்வம் சேருங்கள்

நிதானமாக செல்வம் சேருங்கள் Get Rich Slowly நான் அவசரப்பட மாட்டேன் .  தாமதம் செய்வேன் . இந்தப் பரபரப்பினால் என்ன பயன் ? வானத்திற்கு ஒவ்வொரு இரவும் விண்மீன்கள் வந்து விடுகின்றன .பேரலைகளும் கடலுக்கு வந்து பாய்கின்றன . காலமோ இடமோ பள்ளமோ மேடோ எனக்குச் சேர வேண்டியதைச் சேராமல் செய்து விட முடியாது - ஜான் பர்ரோஸ்            •                     *                    * செல்வம் சேர்ப்பதற்கான கணித சமன்பாடு , மூன்று முக்கியக் காரணிகளால் ஆகப்பெற்றது . முதலாவது , நீங்கள் இடும் முதலீடு . அது ஒரு முறை முதலீடாக இல்லாமல் தொடர்ந்த வாக்கிலான முதலீடாக இருக்க வேண்டியது முக்கியம் . இரண்டாவது , முதலீட்டின் காலம் . மூன்றாவது , இந்த முதலீட்டுக்கு நீங்கள் ஈட்டும் வட்டி விகிதம் .  இந்த மூன்று அளவுருக்களில் எவ்வளவு முதலீடு இடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு காலத்திற்கு இடுகிறீர்கள் என்பது உங்கள் கையில் உள்ளது . ஆனால் இந்த முதலீடு ஈட்டும் வட்டி விகிதம் உங்கள் கையில் இல்லை . அது நி...

இயற்கை எவ்விதம் இறுதியில் வெல்கிறது ?

இயற்கை எவ்விதம் இறுதியில் வெல்கிறது ? உலகம் முழுவதுமான அனைத்துக் கலாச்சாரங்களிலும் இயற்கையை வழிபடும் ஒரு போக்கு இயல்பாக இருக்கிறது . தன் வாழ்நாளில் பாதியைக் கழித்து விட்ட சூரியன் ஒரு மகா சக்தியாக வழிபடப்படுகிறது . அனாதி காலந்தொட்டு உங்கள் முன்னோர்களின் முன்னோர்கள் சூரியனை வணங்கியிருக்கலாம் . நீங்களும் ஆயிரமாயிரம் கரங்கள் கொண்டு இந்தப் பூவுலகை அணைக்கும் சூரியனை வணங்கும் போது தொடர்ச்சியின் ஒரு கண்ணி உருவாக்கம் பெறுகிறது .  வாழ்நாள் முழுமையையும் ஒரே இடத்தில் ஒற்றைக் காலில் தவநிலையில் கழிக்கும் மரங்கள் தெய்வமாக வழிபடப்படுகின்றன .  ஒற்றைச் செல் உயிரினமான அமீபாவில் இருந்து மனித இனம் வரை இயற்கையின் கூட்டுப் பெருக்கமேயன்றி வேறென்ன ? ஆனால் இயற்கையின் கூட்டுப் பெருக்க விகிதம் (CAGR) 0.00000004 சதவீதம் என்ற குறை அளவுகளில் இருப்பதால் குறுகிய கால அளவுகளில் நம்மால் அதனை உணர முடியாது . உணர முடியாதது என்பதற்காக அது இல்லை என்பதாக ஆகி விடாது . முதலீட்டிலும் இயற்கை வழி என்பதாக ஒரு கருத்தாக்கம் இருக்கிறது . கடன் வழி முதலீடு என்றால் அதற்கான வருமானத்திற்கென்று ஒரு வரையறை இருக்கிறது . அந்த முதலீட்...

தாழப் பறத்தல்

தாழப் பறத்தல் மாத வருமானம் 10000 ரூபாய். மாத செலவு 9999 ரூபாய். மகிழ்ச்சி. மாத வருமானம் 10000 ரூபாய். மாத செலவு 10001 ரூபாய். துக்கம். சொன்னவர். சார்லஸ் டிக்கன்ஸ். சொல்லிய ஆண்டு 1850. சில சொற்கள் இவ்விதம் சாகாவரம் பெற்று விடுகின்றன. இந்த செலவை எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக ஆக்குகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதுவே தாழப் பறத்தல். செலவைக் குறைப்பது என்பது பட்டினியாக வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக்கொண்டு படுப்பதல்ல. மூன்று வேளை தேநீர் அருந்தாமல் இரண்டு வேளை மட்டும் அருந்தியெல்லாம் யாரும் பணக்காரர் ஆக முடியாது. பொதுவாக சுற்றுலா செல்வதெல்லாம் ஒரு ஆடம்பரச் செலவு என்று தான் பார்க்கப்படுகிறது. அதுவும் டிஸ்னிலேண்ட்டிற்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவழிப்பது வடிகட்டிய ஆடம்பரம் தானே? அது அவ்வாறு அல்ல. ஒருவர் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து குடும்பத்துடன் டிஸ்னிலேண்ட் செல்கிறார். அந்த சுற்றுலாவினால் அகத்தூண்டலுக்கு (inspiration) உள்ளாகி அவரின் பால்ய மகன் இப்போது டிஸ்னிலேண்ட்டில் ஒரு மிகப்பெரிய பதவியில் இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அது ஒரு கண்ணிற்குத் தெரியாத முதலீடு. நான் சொல்ல வருவது ...

வாசிக்கும் பழக்கம்

வாசிக்கும் பழக்கம் பங்குச்சந்தை குறித்த வலைப்பூவில் வாசிக்கும் பழக்கத்திற்கு என்ன இடம் என்று வியக்க வேண்டாம். பங்குச்சந்தையில் முதலீடு செய்ததின் மூலமாக மட்டும் பணக்காரரான உலகின் ஒரே ஒருவர் வாரன் பஃபெட் தினமும் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ள வலியுறுத்துகிறார். முதலீட்டில் பணம் எப்படி கூட்டுப்பெருக்கம்  அடைகிறதோ அது மாதிரி படிக்கப் படிக்க அறிவும் கூட்டுப் பெருக்கம் அடைகிறது. இன்னும் சொல்லப்போனால் பணத்தின் கூட்டுப் பெருக்கத்திற்கே அறிவின் கூட்டுப் பெருக்கம் தான் அடிப்படை. நன்றாக யோசித்துப் பாருங்கள் , ஒரு நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமென்றால் முதலில் அதன் ஆண்டறிக்கையைப் (Annual Report) படிக்க வேண்டும். வாரன் பஃபெட்டிடம் ஒருவர், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இருக்கிறதே எவ்விதம் படிப்பது என்பதாகக் கேட்டாராம். அதற்கு பஃபெட்டின் பதில்: Start with 'A' வாரன் பஃபெட்டின் Destiny Partner (தமிழில் விதியான பங்குதாரர் என்று சொல்லலாம்) சார்லஸ் மஞ்சர் கை கால் முளைத்த ஒரு புத்தகமாகவே கருதப்படுகிறார். பஃபெட்டின் இளமைக்காலத்தில் இந்தக் காலம் மாதிரி இணையத்தளங்கள் எல்லாம் கிடையாது...

நலம் தரும் புறக்கணிப்பு - 1

நலம் தரும் புறக்கணிப்பு - 1 Benign Neglect - 1 Passive என்பதற்கான சரியான தமிழ் மொழிபெயர்ப்பு கிட்டவில்லை. அகராதியின் செயலற்ற, மந்தமான, அடங்கிப்போகிற ... என்ற எந்த விளக்கங்களும் ஏற்கும் படியாக இல்லை. மொழி, தவறான புரிதலுக்கான ஊற்றுக்கண் (Language is the source of misunderstandings) என்று Antoine de exupery கூறியது ஞாபகத்திற்கு வருகிறது. Passive income என்றால் ஒரு முறை முதலீடு செய்து வாழ்நாள் முழுவதும் வருமானம் பெறுவது என்பது ஓரளவு பொருந்திப் போகிறது.  நிரந்தர வைப்பு முதலீடுகள், பங்கு முதலீடுகள் போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம். நிரந்தர வைப்பு முதலீட்டில் என்ன பிரச்னை என்றால் உங்கள் ஆரம்ப முதலீடு வளராது. நிரந்தர வைப்பு முதலீட்டுத் திட்டத்தில் 50000 ரூபாய் முதலீடு செய்தால், வருட வட்டி 8 சதவீதம் என்று கொண்டால் வருடத்திற்கு 4000 ரூபாய் கிடைக்கும். திட்டத்தின் முடிவில் உங்கள் ஆரம்ப முதலீடான 50000 ரூபாய் மட்டுமே திரும்பக் கிடைக்கும். மேலும் 8 சதவீத வட்டி என்பதும் மாறாது. அதனால் தான் நிரந்தர வைப்பு முதலீடுகள், நிலையான வருமான முதலீடுகள் (Fixed Income investments) என்று அழைக்கப்படுகின்றன...

எளிமையே வெல்லும் - 1

எளிமையே வெல்லும் - 1 அந்தக் காலத்தில் பாடப் புத்தகங்களுக்கு அட்டை போடுவது கடினமான ஒரு செயலாக இருக்கும் . அதுவும் ஜுன் மாதம் வந்து விட்டால் போதும் , ஒரு ஆள் உயர பாடப் புத்தகங்களுக்கு அட்டை போட வேண்டியிருக்கும் . இப்போது ஆயத்த அட்டைகள் (Readymade Cover) வந்து விட்டன. இந்த வரியை எழுதுவதற்குள் அட்டை போட்டு விடலாம். அதுவும் புத்தகத்தை அளந்து அட்டையைத் தேர்ந்தெடுப்பது இப்போது ரொம்பவும் எளிமையாகி விட்டது. ஒரு புத்தகத்திற்கு நீளம், அகலம் மற்றும் உயரம் என்பதான மூன்று அளவுருக்கள் (Parameters) இருக்கின்றன. ஆயத்த அட்டைகள், உயரம் என்ற ஒரேயொரு அளவை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும். நீளம் மற்றும் அகலம் என்ற இரண்டு அளவுருக்களையும் இணைத்து ஒரு அளவுருவாக்கிக் கொள்ளும். அந்த நீளம் மற்றும் அகலம் இணைக்கப்பட்ட அளவுருவை பெரிய அளவுகளில் வைத்துக் கொண்டால் பிரச்னை தீர்ந்தது. புத்தகத்தின் உயரத்தை மட்டும் அளந்து அட்டையைத் தேர்ந்தெடுத்து விடலாம். நீளம் மற்றும் அகலம் பெரிதாக இருப்பதால் எந்தப் புத்தகத்திற்கும் அது பொருந்தும் வண்ணம் இருக்கும். நீளம் மற்றும் அகலம் சிறியதாக இருந்தாலும் மடக்கி ஒட்டிக் கொள்ளலாம். நீள...

தாமதமான மனநிறைவு

தாமதமான மனநிறைவு Delayed Gratification தாமதமான மனநிறைவு என்பது முதலீட்டு வாழ்க்கையின் முதலாவதும் மற்றும் முக்கியமானதுமான ஒரு மனோநிலையாக கருதப்படுகிறது. பன்மடங்காகக் கூடிய (Multi baggers) ஒரு பங்கை இரண்டு மடங்கானதும் நிறைய பேர் விற்று விடுவதற்கு இந்தத் தாமதமான மனநிறைவு இல்லாமையே அடிப்படைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.  HDFC வங்கி 1995ல் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியிட்டதிலிருந்து நாளது தேதி வரை 1500 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடைந்திருக்கிறது. அதாவது நீங்கள் பத்து ரூபாய் முதலீடு செய்திருந்தால் உங்களிடம் இப்போது 1500 பத்து ரூபாய்கள் இருப்பதாக அர்த்தம். 2018 ஆம் ஆண்டிற்கான  ஈவுத்தொகை  (dividend) ஒரு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூபாய் 7.50/- (கடந்த இரண்டு வருடங்களாக வங்கி , covid 19 காரணமாக பங்காதாயம் வழங்கவில்லை) அதாவது நீங்கள் முதன்முதலில் முதலீடு செய்த பத்து ரூபாய்க்கு 750 சதவீதம் பங்காதாயம். வேறு மாதிரி சொல்வதானால்  உங்கள் முதலீட்டு மதிப்பைப் போல் ஏழரை மடங்கு ஒரு வருடத்திற்கான பங்காதாயமாகக் கிடைத்திருக்கிறது. HDFC வங்கி நமது நிரந்தர வைப்புத் தொகைகளுக்...

பயணமே இலக்கு

பயணமே இலக்கு The Journey is the Destination புதையலை விட புதையல் வேட்டை தான் உவப்பானது. சுற்றுலா செல்வதான ஒரு சாதாரண விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். சுற்றுலா செல்வதைக் காட்டிலும் சுற்றுலா செல்வதற்காக நாம் தயாராகும் அந்த நிலை தான் முக்கியமானது. மலை வாசஸ்தலத்திற்குச் செல்வதாக இருந்தால் கம்பளிச்சட்டை, சின்னஞ்சிறார்களுக்கு பனிக்குல்லாய், மாற்றுத்துணிகள், ஏடிஎம் அட்டை இத்யாதிகளை எடுத்து வைப்பது, அலுவலகத்திற்கு விடுமுறை சொல்வது (சித்தப்பா காலமாகி விட்டார்- எத்தனை முறை தான் தாத்தாவைக் காலமாக்குவது? ) அண்டை அயலாரிடம் பெருமை பேசி அவர்களின் பொறாமையைத் தூண்டுவது என்பதான அந்தக் காலகட்டம் தான் அலாதியானது. தீபாவளியை விட தீபாவளிக்கு நாம் தயாராகும் கால கட்டமே ஒரு மகிழ்ச்சி மத்தாப்பு. ஜவுளிக்கடையிலிருந்து இனிப்புக்கடை வரை எங்கெங்கிலும் தள்ளுபடி. தொழிலாளர்களுக்கு போனஸ். எங்கும் பணப்புழக்கம். தீபாவளியை நெருங்க நெருங்க பீத்தோவனின் ஒரு இசைக்கோர்வை மாதிரி ஒரு உச்சக்கட்ட பரபரப்பு. தீபாவளியை விட தீபாவளிக்கு முந்தைய நாட்கள் தான் குதூகலமாக இருக்கும். தீபாவளியன்று புஸ்வாணம் மாதிரி நம் மகிழ்ச்சியும் புஸ்வாணமாகி விடு...