Posts

Showing posts from June, 2026

மிகை கடன் இல்லாமை

மி கை கடன் இல்லாமை Minimum Debt  பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்: 1. மிகை முதல் நீர்க்காமை 2. மிகை கடன் இல்லாமை 3. நிறுவனர் பங்கு 4. தரமான வளர்ச்சி 5. அகழி 6. அறம் இவற்றில் மிகை கடன் இல்லாமை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். கடன் வாங்கி காணாமல் போன நிறுவனங்களின் நீண்ட பட்டியல் ஒன்று உள்ளது. எனவே இந்த அளவுருவில் கவனம் கொள்வது அவசியமாகிறது. சில நிறுவனங்கள் முதல் செறிவாக (capital intensive) இருக்கும். விமானத்துறை, இரும்பு மற்றும் எஃகு, மின் உற்பத்தி, தொலைத் தொடர்பு, சுரங்கம் மற்றும் நில முதலீட்டு நிறுவனங்களைக் குறிப்பாகச் சொல்லலாம். இவை மிகை கடனைக் கொண்டிருப்பது இயல்பான ஒன்று. இவற்றில் முதலீடு செய்யாமல் இருப்பது சாலச் சிறந்தது. நிதி சார் நிறுவனங்களுக்குக் கடன் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவற்றுக்கான மூலப்பொருளே கடன் தான். உதாரணமாக வங்கிகள், சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு மூலமாகக் குறை வட்டியிலும் பூஜ்ய வட்டியிலும் பணத்தைப் பெறுகின்றன. இவை போக நிரந்தர வைப்புக் கணக்கு மற்றும் தொடர் வைப்புக் கணக்குகள் மூலமாகவும் ஓரளவு குறைந்த வட்டியில் அவை பணத்தைத் திரட்டிக் கொள்கின்றன...

மறைந்திருக்கும் உண்மைகள்

மறைந்திருக்கும் உண்மைகள் PE Multiple என்று கூறப்படும் விலை-வருவாய் விகிதம் பற்றி ஏற்கெனவே படித்திருக்கிறோம்.  நிறுவனப்பங்கு ஒன்றின் விலை, அது ஈட்டும் ஒரு பங்கு வருவாயின் எத்தனை மடங்குகளில் வர்த்தகமாகிறது என்ற விகிதமே விலை-வருவாய் விகிதம்.  அதற்கான சமன்பாடு: விலை-வருவாய் விகிதம்= பங்கின் விலை ÷ ஒரு பங்கு வருவாய் பங்கு ஒன்றின் விலை நமக்கு எதையும் தெரிவிப்பதில்லை.  பங்கு ஒன்றின் விலையைக் கொண்டு அது மலிவு அல்லது அதிகம் என்பதான எந்த ஒரு முடிவுக்கும் நாம் வரமுடியாது. பங்கு ஒன்றின் PE எவ்வளவு என்று பார்ப்பது தான் சரியான ஒரு பார்வையாக இருக்கும். ஒரு பங்கு 1000 ரூபாய் என்ற விலையில் மலிவாகவும் (PE 10) மற்றொரு பங்கு 100 ரூபாய் என்ற விலையில் விலை அதிகமாகவும் (PE 20) இருக்கும். மேலும், பங்குகளின் விலையைப் பார்க்கும் போது அதன் முக மதிப்பையும் (face value) கணக்கில் கொள்ள வேண்டும். Groww நிறுவனப்பங்கு ரூ.191.55 என்ற விலையில் வர்த்தகமாகிறது. அதன் விலை மலிவாக இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அது வெறும் தோற்றம் மட்டுமே. அதன் முக மதிப்பு ஒரு ரூபாயாகவும் அதன் PE, 56.34 என்ற உயர் அளவீட்டிலும் ...

மிகை முதல் நீர்க்காமை

மிகை முதல் நீர்க்காமை  Minimum Equity Dilution பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்: 1. மிகை முதல் நீர்க்காமை 2. மிகை கடன் இல்லாமை 3. நிறுவனர் பங்கு 4. தரமான வளர்ச்சி 5. அகழி 6. அறம் இவற்றில் மிகை முதல் நீர்க்காமை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். உலகெங்கிலும் உள்ள நாணயங்கள், நாளும் தத்தமது மதிப்பை இழந்து வருவதற்கான அடிப்படையான காரணம், அரசாங்கங்கள் அவற்றை அச்சடித்துப் புழக்கத்தில் விடுவது தான்.  1971 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒரு நாடு எவ்வளவு தங்கத்தை இருப்பில் வைத்திருக்க முடியுமோ அவ்வளவு பணத்தை மட்டுமே வெளியிட முடியும் என்பதான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. 1971 ஆம் ஆண்டு இந்த அளவுகோல் கைவிடப்பட்டு விட்டது. பண நீர்த்தல் என்பது வாடிக்கையாகி விட்டது.  Bitcoin போன்ற எண்ணிம நாணயங்கள் (crypto currencies) அவற்றின் மதிப்பைத் தக்க வைத்திருப்பதற்கான அடிப்படையான காரணம் அவற்றை அதிக எண்ணிக்கையில் உருவாக்கம் செய்ய முடியாதது மட்டுமே.  Bitcoin உருவாக்கத்திற்கான உச்சபட்ச அளவு 21 மில்லியன் என்பதாக உள்ளது. தற்போது வரை கிட்டத்தட்ட 20 மில்லியன் Bitcoin கள் அகழ்வு (mining) செய்யப்பட...