Posts

Showing posts from May, 2026

இயல்பு நிலை சாய்வு

இயல்பு நிலை சாய்வு Status quo Bias  இயல்பு நிலை சாய்வு என்பது ஏற்கெனவே உள்ள நிலைமைகளைப் பேணுதல், இந்த நிலைமைகளை மாற்றத்திற்கு உட்படுத்தினால் அது அனுகூலங்களுக்கு இட்டுச்செல்லும் என்று தெரிந்தும் பழைய நிலைமைகளையே தொடர்வதான ஒரு மனோநிலையாகும்.  பிதுரார்ஜித வடிவில் உங்களுக்குப் பாட்டனாரின் ஒரு பங்குத்தொகுப்பு கிடைப்பதாகக் கொள்ளலாம். அவர் காலத்தில் வாங்கப்பட்ட பங்குகளைக் கொண்டு அது கட்டப்பட்டுள்ளது தெளிவு. அது உங்கள் கைக்குக் கிடைத்ததும் நீங்கள் அந்தப் பங்குத்தொகுப்பைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி இனி தேறவே தேறாது என்பதான பங்குகளைக் களையெடுப்பது, மதில் மேல் பூனையாக இருக்கும் பங்குகளைக் கண்காணிப்புக்கு உட்படுத்துவது மற்றும் புதிய பங்குகளை மதிப்பாய்வு செய்து வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். மாறாக, காலத்தின் கோலத்தில் உருமாறிய அவற்றை இவை எங்கள் பாட்டனார் வாங்கிய பங்கு என்று உணர்வுபூர்வமாக வைத்திருப்பது, இத்தகைய பங்குகளை விற்பது, வரி வகையறாக்களுக்கு இட்டுச்செல்லும் என்று அவற்றின் விற்பனையை ஒத்திப்போடுவது போன்றவை இயல்பு நிலை சாய்வின் பாற்பட்டதாகும். பங்குச்சந்தை குறித்த ஒரு புரி...

தங்கமே பணம்

த ங்கமே பணம் 1. Gold standard is dead but gold is the standard- Zoltan Pozsar தங்கத் தரம் வழக்கொழிந்து விட்டது. ஆனால் தங்கமே இன்னும் தரத்திற்கான அளவீடாக உள்ளது. 2. If you don't own gold, you know neither history nor economics- Ray Dalio தங்கம் உங்களிடம் இல்லையென்றால் வரலாறும் உங்களுக்குத் தெரியாது, பொருளாதாரமும் தெரியாது என்பதாக அர்த்தம் . 3. Gold is money. Everything else is credit- J. P. Morgan தங்கம் என்பது பணம். மற்றவை எல்லாம் கடன். 4. Gold is the universal language understood by all nations- George Herbert தங்கம் என்பது அனைத்து நாடுகளாலும் புரிந்துகொள்ளப்படும் உலகளாவிய ஒரு மொழி. 5. Indian Gold obsession isn’t just cultural, it’s economic strategy- Dipti Dhakul இந்தியத் தங்க மோகம் என்பது வெறும் கலாச்சார ரீதியானது மட்டுமல்ல, அது ஒரு பொருளாதார உத்தியும் கூட. 6. I like gold because it is a stabilizer; it is an insurance policy- Kevin O'Leary எனக்குத் தங்கம் பிடிக்கும், ஏனென்றால் அது ஒரு நிலைப்படுத்தி; அது ஒரு காப்பீட்டுத் திட்டம். 7. We have gold because we cannot trust govern...