Posts

Showing posts with the label கூட்டுப்பெருக்கம்

பைசா நகரத்தின் சாயாத கோபுரம்

பைசா நகரத்தின் சாயாத கோபுரம் ஒரு பைசா 30 நாட்களுக்குத் தொடர்ந்து இரட்டிப்பானால் என்னவாகும்? 1 - 0.01 2 - 0.02 3 - 0.04 4 - 0.08 5 - 0.16 6 - 0.32 7 - 0.64 8 - 1.28 9 - 2.56 10 - 5.12 11  - 10.24 12 - 20.48 13 - 40.96 14 - 81.92 15 - 163.84 16 - 327.68 17 - 655.36 18 - 1310.72 19 - 2621.44 20 - 5242.88 21 - 10485.76 22 - 20971.52 23 - 41943.04 24 - 83386.08 25 - 167772.16 26 - 335544.32 27 - 671088.64 28 - 1342177.28 29 - 2684354.56 30 - 5368709.12 ஆயிரம் வார்த்தைகளால் தெரிவிக்க முடியாத செய்தியை ஒரு அட்டவணை தெரிவித்து விடுகிறது.  மேலே உள்ள அட்டவணையை எப்படிப் பார்த்தீர்கள்? ஒன்று இரண்டு என்று சற்று நிதானித்துப் பார்த்து விட்டு சட்டென்று முப்பதுக்கு வந்து விட்டீர்கள், இல்லையா? மறுபடி ஒருமுறை தொடக்கத்திலிருந்து பாருங்கள். தினசரி இரட்டிப்பாகும் ஒரு பைசா ஒற்றை இலக்கத்தைத் தாண்டவே பத்து நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இருபது நாட்களில் கூட ஆகப்பெரிய அளவுகளில் அது கூடவில்லை. கடைசி பத்து நாட்களில் அது கொஞ்சம் வேகமெடுக்கத் தொடங்குகிறது. அதுவும் கடைசி நாள் மட்டும் 2684354.56 என்ற அளவில் அதி ...

கூட்டு விளைவு

கூட்டு விளைவு The Compound Effect  1. The first rule of compound interest is to never interrupt it unnecessarily - Charlie Munger கூட்டு வட்டியின் முதல் விதி அதனைத் தேவையின்றி இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கக்கூடாது என்பதாகும். 2. My life has been the product of compound interest - Buffett எனது வாழ்க்கை கூட்டு வட்டியால் ஆனது. 3. When it comes to compounding, percentage losses and gains are not equal . Avoid large losses - Frank Martin கூட்டுப்பெருக்கத்தில் ஒவ்வொரு சதவீத இலாபமும் நஷ்டமும் சமம் அல்ல. எனவே பெரும் நஷ்டத்தைத் தவிருங்கள். 4. Relatively small divergences in annual compounded returns over many years result in dramatic differences in terminal wealth - Nick Train கூட்டுப்பெருக்கத்தின் சிறிய மாறுபாடுகள் கூட  நாளடைவில் உங்கள் செல்வத்தின் இறுதி மதிப்பில் மாபெரும் மாற்றங்களை நிகழ்த்துவதாக இருக்கும். 5. The compound effect is the principle of reaping huge rewards from a series of small, smart choices - Darren Hardy கூட்டு விளைவு என்பது தொடர்ச்சியான சிறிய சிறந்த தேர்வுகளால் ஆகப்பெ...

வேதாளம் சொன்ன கதை - 3

வேதாளம் சொன்ன கதை - 3 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான் . பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமாதித்தனை நோக்கி , 'மன்னா !  விடாமுயற்சி உடனான உன் நீடிப்புத்திறனை நான் பாராட்டுகிறேன் . பங்குச்சந்தையில் வெற்றி பெற இந்த நீடிப்புத்திறன் தலையாயது . ஒரு ஊரில் வடிகட்டிய முட்டாள் ஒருவன் இருந்தான் . கல்விக்கும் அவனுக்கும் காத தூரம் . ஒரு நாள் காட்டு வழியாக அவன் நடந்து சென்று கொண்டிருக்கையில் தேவதை ஒன்று அவன் முன்னால் தோன்றி அவனுக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாகக் கூறியது . அவன் உடனே எனக்கு ஒரு கோப்பை மது வேண்டும் என்று கூறினான் . மதுக் கோப்பையை அளித்த தேவதை இது மிகவும் அபூர்வமான கோப்பையாகும் . நீ நினைக்கும் போதெல்லாம் இந்தக் கோப்பை மதுவைத் தரவல்லது . இன்னொரு வரத்தையும் கேட்டு வாங்கிக்கொள் என்றது . அந்த முட்டாள் கேட்டது : எனக்கு இதே போல இன்னொரு மதுக் கோப்பை வேண்டும். கல்வியறிவற்றவன் தனக்குக் கிடைக்கப்பெறும் வரங்களைக் கூட இவ்வாறு சாபங்களாக மாற்றிக் கொ...

பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள் இந்த சதுரங்கக் கதை குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் . சில கதைகள் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பைத் தராது . அந்த வகையில் அந்தக் கதையை என்னுடைய பாணியில் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் .  ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் . சதுரங்க விளையாட்டு அவருக்கு ரொம்பவும் பிடித்தமானது . மணிக்கணக்காக அவர் அதனை விளையாடுவது வழக்கம் . அவர் மூளையைக் கூர் தீட்ட இந்த சதுரங்க விளையாட்டு மிகவும் உதவிகரமாக இருந்தது . ராஜிய பிரச்னையாக இருந்தாலும் சரி அல்லது சொந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி அந்தப் பிரச்னைகளின் தீர்வுகளுக்கு இந்த விளையாட்டில் பதில் கிடைத்தது . பங்குச்சந்தை அப்போது இருந்திருந்தால் ராஜா அதில் முதலீடு செய்திருப்பார் என்பதாகத் தோன்றுகிறது . பங்குச்சந்தை முதலீடு என்பது பல்லாயிரம் மனிதர்களுடன் ஒரே சமயத்தில் சதுரங்கம் விளையாடுவதேயன்றி வேறென்ன ? இந்த சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்தவர் தனது நாட்டுக் குடிமகன் என்று ஒரு நாள் ராஜாவுக்குத் தெரிய வந்ததும் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி . அவருக்கு மரியாதை செய்யும் முகமாக அரண்மனை சேவகர்களை விட்டு அந்த மேதையை அரசவைக்கு அழைத்து வரச் சொ...

கூட்டுப்பெருக்கக் கதைகள்

கூட்டுப்பெருக்கக் கதைகள் இந்த ஒப்பந்தம் எங்கு எப்போது நடந்தது என்று தெரியாது. நடக்காமலே கூட இருக்கலாம். அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஒப்பந்தம் மெய்யோ பொய்யோ ஆனால் படிக்கச் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. ஒரு கோடீஸ்வரர் மிகவும் மனமகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். தன் மகிழ்ச்சியை மனைவியுடன் பகிர்ந்து கொண்டார். பணக்காரர்கள் தான் மென்மேலும் பணக்காரர்கள் ஆவார்கள் என்பது உண்மை தான். அந்த மாதிரியான ஒரு அதிர்ஷ்டம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இன்று ஒருவரைச் சந்தித்தேன். நான் ஒரு கோடீஸ்வரர் என்பதைத் தெரிந்து கொண்டு அவர் என்னுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். அது என்னவென்றால், அவர் தினமும் எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவார். நான் பதிலுக்கு அவருக்கு முதல் நாள் ஒரே ஒரு பைசா, இரண்டாம் நாள் இரண்டு பைசா, மூன்றாம் நாள் நான்கு பைசா, பின் எட்டு... இவ்வாறாக முப்பது நாட்களும் தரவேண்டும். என்ன ஒரு இலாபகரமான ஒப்பந்தம்! நாளைக்கு அவர் வருவாரா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அவர் சந்தேகப்பட்டிருக்க வேண்டாம். மறுநாள் காலை கோடீஸ்வரர் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. அந்த ஒப்பந்தக்காரர் ஒரு இலட...