Posts

Showing posts from September, 2021

கேள்வி மொழிகள்

கேள்வி மொழிகள் 1. Knowing the answers will help you in school . Knowing how to question will help you in life - Warren Berger பதில் சொல்லத் தெரிந்திருப்பது பள்ளிப் பாடங்களுக்கு உதவும் . கேள்வி கேட்கத் தெரிந்திருப்பது வாழ்க்கைப் பாடங்களுக்கு உதவும் . 2. Judge a man by his questions rather than his answers - Voltaire ஒரு மனிதனுடைய பதில்களை விட அவனுடைய கேள்விகளிலிருந்து அவனை அதிகம் தெரிந்து கொள்ளலாம் . 3. Questioning is the ability to organise our thinking around what we don't know கேள்வி கேட்பது என்பது நமக்குத் தெரியாதவற்றைக் குறித்த நமது எண்ணங்களை ஒருங்கமைப்பதான ஒரு திறனாகும் . 4. How to create something out of nothing ? I think it is by questioning  - Amy Tan ஒன்றுமில்லாததில் இருந்து எதனையாவது உண்டாக்குவது எப்படி ? கேள்வி கேட்பதன் மூலமாக என்று நான் நினைக்கிறேன் . 5. He who asks a question remains a fool for five minutes . He who does not ask remains a fool forever - Chinese Proverb கேள்வி கேட்பவர் ஐந்து நிமிடத்துக்கு முட்டாள் . கேள்வி கேட்காதவர் காலாகாலத்துக்கும் முட்டாள் . 6. We l...

பங்குச்சந்தை நகை அகராதி

பங்குச்சந்தை நகை அகராதி (நகைச்சுவைக்காக மட்டும் , யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை) Long Term Investment ஒரு மாத முதலீடு Short Term Investment ஒரு வார முதலீடு  Demat Account காளைச்சந்தையில் தொடங்கும் மற்றும் கரடிச்சந்தையில் உறங்கும் கணக்கு  Buyback   பங்கு விலையை செயற்கையாக உயர்த்தும் பொருட்டு நிறுவனங்கள் அறிவிப்பது Delivery   தினசரி வணிகத்தில் வாங்கிய பங்கு மிகவும் குறைந்து விட்டால் எடுப்பது Dividend டெலிவரி எடுத்த பங்குகள் சில சமயம் கொடுப்பது Target Price  நம் காலில் நாமே சுட்டுக் கொள்வது Stop Loss நம்மை நாமே சுட்டுக் கொள்வது Bull Market பங்குகளின் விலை உயர உயர வாங்கிக் குவிக்கும் சந்தை Bear Market பங்குகளின் விலை குறையக் குறைய விற்று விட்டு ஓடும் சந்தை Trader முன்னாள் முதலீட்டாளர் Investor பின்னாள் வணிகர் Sector Funds ஒரு துறை உச்சத்தில் இருக்கும் போது பரஸ்பர நிதி நிறுவனங்கள் வெளியிடுவது Rupee Stocks காளைச்சந்தையின் கடைசிக் கட்டத்தில் விலை உயரும் பங்குகள் Multibagger இரண்டு மடங்காகும் பங்குகள் F & O பங்குத் தொகுப்பிற்கு (Portfolio) இழப்புக் காப்பீடு. ...

பங்குச்சந்தை பதில்கள் - 3

பங்குச்சந்தை பதில்கள் - 3 கேள்வி : சென்செக்ஸ் 60000 புள்ளிகளைத்  தொட்டிருப்பது குறித்து ? பதில் : Way to go ... சென்செக்ஸ் செல்ல வேண்டிய தூரம் (நீண்ட கால நோக்கில்) இன்னும் நிறைய இருக்கிறது . கேள்வி : 52 வார குறைந்த பட்ச விலையில் பங்குகளை வாங்கி 52 வார அதிக பட்ச விலையில் விற்பது குறித்து ? பதில் : தாராளமாகச் செய்யலாம் . பிஸினஸ் லைன் பத்திரிகையைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு பங்கை அதன் 52 வாரக் குறைந்த பட்ச விலையில் வாங்கி 52 வார அதிக பட்ச விலையில் விற்றிருந்தால் எவ்வளவு பணம் கிடைக்கப் பெற்றிருக்கும் என்று பகல் கனவு காணலாம் . ஒரு பேச்சுக்கு ஒருவர் இந்த மாதிரி தொடர்ந்து செய்து வந்தால் ஒரு கட்டத்தில் அவர் உலகப் பணக்காரர் வரிசையில் இடம் பெற்று விடுவார் . ஆனால் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் தத்தம் நிறுவனப் பங்குகளை வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே உலகப் பணக்காரர் ஆகியிருக்கின்றனர் . கேள்வி : நான் பங்குச்சந்தையில் குறுகிய கால முதலீட்டின் மூலமாக ஆறு மாதங்களில் 40 சதவீதம் சம்பாதித்திருக்கிறேன் . ஆண்டுக் கணக்கு போட்டுப் பார்த்தால் 80 சதவீதம் வருகிறது . இதைப்பற்றி என்ன...

ஆத்தும குணம் -1

ஆத்தும குணம் -1 Basic Instinct - 1 சின்ன வயதிலிருந்தே ராஜா ராமனுக்கு சூதாடுவதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது . சிறுவனாக இருக்கும் போது தீப்பெட்டிப் படங்களை வைத்து கோலிக்குண்டு விளையாடுவதில் அது தொடங்கியது . பின்னர் தீப்பெட்டிப் படங்களுக்குப் பதிலாகக் காசு வைத்து சூதாடுவது என்று அது வளர்ந்தது . பள்ளியில் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் இவன் சொல்வதற்கு மாறாக ஏதாவது சொன்னால் உடனே என்ன பந்தயம் என்று பேனா பென்சில் இவைகளைப் பணயமாக வைப்பது அவனின் வாடிக்கை . ஆனால் இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே ஒன்றை அவன் கவனித்திருந்தால் உருப்பட்டிருப்பான் . இந்த சூதுகளில் ஒரு முறை இவன் வென்றால் மறுமுறை எதிராளி வெல்வதான ஒரு பாங்கு இருந்தது . துரதிர்ஷ்டவசமாக ராஜா ராமன் தான் அவ்வப்போது அடையும் வெற்றிகளை நன்கு ஞாபகத்தில் கொள்பவனாகவும் தோல்விகளை உடனே மறந்து விடுபவனாகவும் இருந்தான் . அப்புறம் வளர்ந்து வாலிபனான பின்னர் கொஞ்ச நாட்கள் லாட்டரிச் சீட்டு வாங்கிக் கொண்டிருந்தான் . பத்து ரூபாய்க்கு லாட்டரி வாங்கியதும் பத்து இலட்சக் கனவுகளில் மிதக்க ஆரம்பித்து விடுவான் . கட்டாயமாக முதல் பரிசு எனக்குத் தான் எ...

பன்மடங்காளர் இரகசியம்

பன்மடங்காளர் இரகசியம் Multibagger Secret பங்குச்சந்தை பனை ஓலைகளிலிருந்து ... ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் . அவர் தனது நாட்டின் கருவூலத்தில் (Treasury) அதிகப்படியாக இருக்கும் பணத்தை அவ்வப்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்வது வழக்கம் . ராஜாவுக்கு பங்குச்சந்தை முதலீடுகள் மூலமாக ஓரளவு இலாபம் கிடைத்தது என்றாலும் Multibagger Stocks என்று சொல்லப்படும் பன்மடங்காளர் பங்குகளை அவரால் இனங்காண முடியவில்லை . ராஜாவுக்கு அது ஒரு பெரிய மனக்குறையாக இருந்தது . இது இவ்வாறு இருக்கையில் பங்குச்சந்தை ஜென் குரு ஒருவர் அவருடைய நாட்டிற்கு வருகை தந்திருந்தார் . ராஜா அவருக்கு மரியாதை செய்து தக்க சமயத்தில் தன் மனதின் குறையைத் தெரிவித்துக் கொண்டார் . பங்குச்சந்தை ஜென் குரு உனது நாட்டின் ஈசானிய மூலையில் இருக்கும் மலை உச்சியில் கொடுங்கோடையிலும் வற்றாத சுனை ஒன்று உள்ளது நீ அறிந்ததே . ஒரு நாள் நீ அங்கு சென்று வா ! பன்மடங்காளர் பங்குகளைக் கைக்கொள்ள எது தடையாக இருக்கிறது என்பதற்கான பதில் அங்கு கிடைக்கும் . ராஜா ஒரு நல்ல நாளில் சுனையை அடைந்தார் . அதன் சுவையான தண்ணீரைப் பருகி விட்டு அதனுள் ஆழ்ந்து நோக்கினார் . சுனையில்...

உள்ளார்ந்த மதிப்பு

உள்ளார்ந்த மதிப்பு  Intrinsic Value உள்ளார்ந்த மதிப்பு என்பது ஒரு நகரும் இலக்கு (moving target) மேலும் அது வெறும் கணக்கு மட்டுமல்ல ஒரு கலையும் கூட . அதை விளக்க முற்படும் போதே வார்த்தைகளுக்குள் அடங்காமல் புகை போல் என் எண்ணங்கள் நழுவிச் செல்கின்றன . வெவ்வேறு கோணங்களிலிருந்து உள்ளார்ந்த மதிப்பை விளக்க முயற்சிக்கிறேன் . உள்ளார்ந்த மதிப்பு என்பது ஒரு தனிப்பட்ட எண் அல்ல . Range of values என்ற அடிப்படையில் அது ஒரு மதிப்பீடு மட்டுமே . மதிப்பு முதலீட்டு குரு பெஞ்சமின் கிரகாம் பின்வருமாறு இதனை விளக்குகிறார் . தெருவில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கிறார் . அவருடைய மிகச்சரியான எடை நமக்குத் தெரியாவிட்டாலும் அவரின் உயரத்திற்கு அவர் கொஞ்சம் பருமனாக இருக்கிறார் என்று பார்த்ததுமே சொல்லி விடலாம் அல்லவா ? அதே மாதிரி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு பெண்மணியின் சரியான வயது நமக்குத் தெரியாவிட்டாலும் அவர் ஓட்டுப் போடும் வயதை அடைந்து விட்டாரா என்று பார்த்ததுமே சொல்லி விடலாம் . பங்கு விலை வேறு . உள்ளார்ந்த மதிப்பு என்பது வேறு . பங்கின் விலை உள்ளார்ந்த மதிப்பை விடக் கூடுதலாகவோ (காளைச்சந்தை) குற...

பங்குச்சந்தை நகை மொழிகள்

பங்குச்சந்தை நகை மொழிகள் Funny Stock Market Quotes 1. The stock market is still less volatile than most of my romantic relationships . பங்குச்சந்தை , என் காதல் உறவுகளை விட குறைவாகவே ஏறி இறங்குவதாக இருக்கிறது . 2. One of the funny things about the stock market is that every time one person buys , another sells and both think they are astute . பங்குச்சந்தையைக் குறித்த ஒரு நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் ஒருவர் விற்கிறார் , ஒருவர் வாங்குகிறார் , ஆனால் இரண்டு பேருமே தங்களை அதி புத்திசாலி என்பதாக எண்ணிக் கொள்கிறார்கள் . 3. The difference between playing the stock market and the horses is that one of the horses must win . பங்குச்சந்தைக்கும் குதிரைப் பந்தயத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் குதிரைப் பந்தயத்தில் ஒரு குதிரை கண்டிப்பாக ஜெயிக்கும் .  4. The perfect strategy works every time until you start using it . ஒரு கேந்திரமான உபாயம் அதனை நீங்கள் உபயோகப்படுத்தத் தொடங்கும் வரை வேலை பார்ப்பதாக இருக்கும் .  5. If your strategy seems to be working well , you haven't be...

பங்குச் சுழல்

பங்குச் சுழல் (முன் குறிப்பு : அன்பான வாசகருக்கு , இது ஒரு சுழல் . இதனுள் இறங்கினால் நீங்கள் வெளியேற முடியாது . கவனம் தேவை) The bust requires a boom . The boom requires a bust . ஒரு இறக்கத்திற்கு ஒரு ஏற்றம் தேவைப்படும் . ஒரு ஏற்றத்திற்கு ஒரு இறக்கம் தேவைப்படும் . காளைச் சந்தைக்கு ஒரு கரடிச்சந்தை தேவைப்படுகிறது . கரடிச்சந்தையில் பங்குகளின் விலை தரை தட்டிய பின்னர் மதிப்பு முகிழ்த்தெழுகிறது . தலால் தெரு எங்கும் வைரங்கள் சிதறிக் கிடக்கின்றன . ஆனால் அது வெறும் கூழாங்கல் என்று யாரும் அதனைத் தொடக்கூட மாட்டார்கள் . மதிப்பு முதலீட்டாளர்கள் ( Value Investors) கொஞ்சம் கொஞ்சமாக அந்த வைரங்களை வாங்கத் தொடங்குகின்றனர் . PE விகிதம் அடி மேல் அடியாக உயர்ந்த வண்ணம் உள்ளது . பிறகு சந்தையில் கைகட்டி வேடிக்கை பார்த்தவண்ணம் இருக்கும் வளர்ச்சி முதலீட்டாளர்கள் (Growth Investors) முதலீட்டை மேற்கொள்ளத் தொடங்குகின்றனர் . PE இன்னும் மேலே உயரத் தொடங்குகிறது . இப்போது வேக முதலீட்டாளர்கள் (Momentum Investors) படுவேகமாக வரும் நேரம் . PE இன்னும் கொஞ்சம் மேலே உயரே என்ற அளவில் வர்த்தகமாகிறது . கடைசியாக ஊக வணிகர்களின...

ஞாபக சாபம் மறதி வரம்

ஞாபக சாபம் மறதி வரம் Zomato நிறுவன IPO விற்கு விண்ணப்பிக்க மறந்து விட்டதாக நண்பர் ஒருவர் வருத்தப்பட்டுக் கொண்டார் . 100 பங்குகளுக்கு விண்ணப்பம் செய்து அது கிடைக்கப் பெற்றிருந்தால் எவ்வளவு பட்டியல் இலாபம் (listing gain) கிடைக்கப் பெற்றிருக்கும் ? அது நஷ்டமாகி விட்டதாம் . நீங்கள் முதலீடு செய்யாத பங்குகளில் உங்களுக்கான நஷ்டம் பூஜ்யம் என்பதான பொன்மொழி ஞாபகத்திற்கு வந்தது . நான் சொல்ல வந்ததை மறந்து விட்டு எங்கோ சென்று விட்டேன் ! இந்த மறதி குறித்துக் கொஞ்சம் கிட்டே சென்று ஆராயலாம் . முதலீட்டாளர்களின் ஒட்டு மொத்த மறதி தான் அடுத்தடுத்த மீமிகைக் காளைச் சந்தைகளாக உருவெடுக்கிறது . ஒவ்வொரு மீமிகைக் காளைச் சந்தையும் வெடிக்கக் காத்துக் கொண்டிருப்பதான ஒரு நீர்க்குமிழி என்பதை முதலீட்டாளர்கள் மறந்ததால் தானே இத்தகைய சந்தைகள் உருவாகின்றன ? கரடிச் சந்தைகளும் இந்த மறதியினால் தான் பிறக்கின்றன . பன்மடங்காளர் பங்குகளின் பிறப்பிடம் கரடிச்சந்தைகள் என்பதனை முதலீட்டாளர்கள் மறந்ததால் தானே கரடிகள் அவ்வப்போது ஆட்டம் போடுகின்றன ? ஆனால் முதலீட்டாளர்களின் மறதியினால் இவ்வாறு காளைச் சந்தையும் கரடிச் சந்தையும் மாறி மாற...