கேள்வி மொழிகள்

கேள்வி மொழிகள்


1. Knowing the answers will help you in school . Knowing how to question will help you in life

- Warren Berger


பதில் சொல்லத் தெரிந்திருப்பது பள்ளிப் பாடங்களுக்கு உதவும் . கேள்வி கேட்கத் தெரிந்திருப்பது வாழ்க்கைப் பாடங்களுக்கு உதவும் .


2. Judge a man by his questions rather than his answers

- Voltaire


ஒரு மனிதனுடைய பதில்களை விட அவனுடைய கேள்விகளிலிருந்து அவனை அதிகம் தெரிந்து கொள்ளலாம் .


3. Questioning is the ability to organise our thinking around what we don't know


கேள்வி கேட்பது என்பது நமக்குத் தெரியாதவற்றைக் குறித்த நமது எண்ணங்களை ஒருங்கமைப்பதான ஒரு திறனாகும் .


4. How to create something out of nothing ? I think it is by questioning 

- Amy Tan


ஒன்றுமில்லாததில் இருந்து எதனையாவது உண்டாக்குவது எப்படி ? கேள்வி கேட்பதன் மூலமாக என்று நான் நினைக்கிறேன் .


5. He who asks a question remains a fool for five minutes . He who does not ask remains a fool forever

- Chinese Proverb


கேள்வி கேட்பவர் ஐந்து நிமிடத்துக்கு முட்டாள் . கேள்வி கேட்காதவர் காலாகாலத்துக்கும் முட்டாள் .


6. We live in the world our questions create

- David Cooperrider


நாம் கேட்கும் கேள்விகளால் ஆகப்பெற்ற உலகில் நாம் வாழ்கிறோம் .


7. Mistakes might not give you answer . But they give you questions for a greater answer


தவறுகள் , விடைகள் எதனையும் கொடுப்பதில்லை . ஆனால் அவை உயர்ந்த விடைகளைப் பெறுவதற்கான கேள்விகளை வழங்குவதாக இருக்கின்றன .


8. Asking the right questions takes as much skill as giving the right answers

- Robert Half


சரியான கேள்விகளைக் கேட்பது என்பது சரியான பதில்களைக் கொடுப்பதற்கான திறமைக்குச் சற்றும் குறையாததாகும் .


9. I had six honest serving men. They taught me all I knew . Their names were Where , What , When , Why , How and Who 


எனக்கு ஆறு நேர்மையான சேவகர்கள் இருக்கிறார்கள் . எனக்குத் தெரிந்தது யாவையும் அவர்கள் கற்றுக் கொடுத்தது மட்டுமே . அவர்களின் பெயர்கள் எங்கே என்ன எப்போது எதற்காக எவ்வாறு மற்றும் யார் என்பதாகும் .


10. The only true wisdom is in knowing that you know nothing 

- Socrates


நமக்கு எதுவும் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்வதே உண்மையான ஞானமாகும் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14