நஷ்டம் உவர்ப்பு சாய்வு
நஷ்டம் உவர்ப்பு சாய்வு Loss Aversion Bias 1000 ரூபாய் நஷ்டம் அடைவதும் 1000 ரூபாய் இலாபம் பெறுவதும் சமமல்ல . 1000 ரூபாய் நஷ்டம் அடையும் போது கிடைக்கப்பெறும் துக்கம் 1000 ரூபாய் இலாபம் பெறும் போது கிடைக்கப்பெறும் ஆனந்தத்தை விட பன்மடங்கு பெரியதாகும் . முதலீட்டில் இதனுடைய தாக்கம் என்னவென்று பார்க்கலாம் . பங்குச்சந்தை முதலீடுகளின் ஆதாரமான குணம் என்னவென்றால் அது ஏறி இறங்கும் தன்மை படைத்தது . பங்குச்சந்தையின் இந்த ஏறி இறங்கும் தன்மையை , முக்கியமாக , இறங்கும் தன்மையைத் தாங்காமல் பங்குச்சந்தை முதலீடுகளை அறவே தவிர்த்து விடுவது நஷ்டம் தவிர்ப்புச் சாய்வு . உங்கள் முதலீடுகள் உண்மையான வருமானம் என்று சொல்லப்படும் பணவீக்கத்தைக் கழித்த வருமானத்தை ஈட்ட வேண்டுமென்றால் பங்குச்சந்தை முதலீடுகள் தான் ஒரேயொரு சரியான வழி . மற்றபடி கடன் பத்திர முதலீடுகள் , தங்கம் மற்றும் நிலம் போன்றவை பணவீக்க இழப்புக் காப்பு (inflation hedge) என்ற அளவிலோ அல்லது பணவீக்கத்தைக் கொஞ்சம் விஞ்சும் அளவிலோ மட்டுமே வருமானத்தைக் கொடுக்கவல்லதாக இருக்கும் . நஷ்டம் தவிர்ப்பு சாய்வுக்கு ஆளானவர்கள் தப்பித்தவறி பங்கு முத...