பரஸ்பர நிதி கேள்வி பதில்- 2
பரஸ்பர நிதி கேள்வி பதில்- 2 கேள்வி: பரஸ்பர நிதி முதலீடுகள் ஆறிய கஞ்சியைக் குடிப்பது போல உள்ளது? பதில்: முதலீடுகள் என்பவை கேளிக்கைகளோ அல்லது சாகச நடவடிக்கைகளோ அல்ல. அது புல் முளைப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது அல்லது பூச்சு உலர்வதற்காகக் காத்துக் கொண்டிருப்பது போன்றதாகும். ஆக, ஆறிய கஞ்சி நல்லது. கேள்வி: பங்கு முதலீடுகளுக்கு எங்கு பயிற்சி எடுக்கலாம்? பதில்: பங்கு முதலீடுகளுக்கான Net practice என்ற வகையில் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். கேள்வி: Rupee cost averaging, Value averaging என்ன வேறுபாடு? பதில்: பண சராசரி என்பது குறிப்பிட்ட அளவு பணத்தைக் குறிப்பிட்ட கால அளவில் முதலீடு செய்வது. மதிப்பு சராசரி என்பது சந்தையின் போக்கிற்கு ஏற்ப, சந்தை காளைத்தனமாக இருந்தால் குறைந்த அளவிலான பணம், சந்தை கரடித்தனமாக இருந்தால் அதிக அளவிலான பணம் என்ற வகையில் குறிப்பிட்ட கால அளவில் முதலீடு செய்வது. பண சராசரியை விட மதிப்பு சராசரி கொஞ்சம் கூடுதல் வருமானத்தைத் தருவதாக இருக்கும். அதற்காகக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். கேள்வி: பரஸ்பர நிதிகள் பன்மடங்காளர் ஆகுமா? பதில்: எத்தனையோ பரஸ்பர நிதித் திட்டங்களின் ...