Posts

Showing posts with the label தங்கம்

தங்கமே பணம்

த ங்கமே பணம் 1. Gold standard is dead but gold is the standard- Zoltan Pozsar தங்கத் தரம் வழக்கொழிந்து விட்டது. ஆனால் தங்கமே இன்னும் தரத்திற்கான அளவீடாக உள்ளது. 2. If you don't own gold, you know neither history nor economics- Ray Dalio தங்கம் உங்களிடம் இல்லையென்றால் வரலாறும் உங்களுக்குத் தெரியாது, பொருளாதாரமும் தெரியாது என்பதாக அர்த்தம் . 3. Gold is money. Everything else is credit- J. P. Morgan தங்கம் என்பது பணம். மற்றவை எல்லாம் கடன். 4. Gold is the universal language understood by all nations- George Herbert தங்கம் என்பது அனைத்து நாடுகளாலும் புரிந்துகொள்ளப்படும் உலகளாவிய ஒரு மொழி. 5. Indian Gold obsession isn’t just cultural, it’s economic strategy- Dipti Dhakul இந்தியத் தங்க மோகம் என்பது வெறும் கலாச்சார ரீதியானது மட்டுமல்ல, அது ஒரு பொருளாதார உத்தியும் கூட. 6. I like gold because it is a stabilizer; it is an insurance policy- Kevin O'Leary எனக்குத் தங்கம் பிடிக்கும், ஏனென்றால் அது ஒரு நிலைப்படுத்தி; அது ஒரு காப்பீட்டுத் திட்டம். 7. We have gold because we cannot trust govern...

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு  அண்மையில் தங்கத்தின் விலை திடுதிப்பென்று அதிகரித்த போது வழக்கம் போல் தங்க ETF ( Exchange Traded Fund) கொள்முதல் (purchase) அதிகரித்ததாகத் தகவல். தங்கத்தின் விலை குறைந்ததும் மறு கொள்முதல் (repurchase) அதிகரிக்கும். இது buy low sell high என்ற தாரக மந்திரத்திற்கு எதிரானது. இவ்வாறாக தங்கத்தில் தவறான முறையில் முதலீடு செய்வது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கும் முதலாக தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு விவேகமான முடிவு தானா?  தங்கத்தை ஒரு store of value என்ற அடிப்படையில் தான் அணுக  வேண்டும். தமிழில் சொல்வதென்றால் தங்கம், மதிப்பைத் தக்க வைக்கும் தன்மை படைத்தது. ஆனால் மதிப்புப் பெருக்கம் அடையாது. நீண்ட கால நோக்கில் தங்கம் பணவீக்கத்தை சமன் செய்ய வல்லது. மற்றபடி பணவீக்கத்தை விஞ்சிய வருமானம் கொடுக்காது.   மதிப்புப் பெருக்கம் மற்றும் வருமானத்திற்கு நிறுவனப் பங்குகளைத் தான் நாம் சார்ந்திருக்க வேண்டும். பங்குகள் மாதிரி தங்கம்      பங்காதாயம்  வழங்காது. நாம் தங்கத்தை விற்றுத் தான் வருமானத்தைப் பெற முடியும். ஒரு நல்ல முதலீட்டின் கல்யாண குணம் என்னவென்ற...