Posts

Showing posts with the label மணி மொழிகள்

வாழ்க்கை மொழிகள்- 8

வாழ்க்கை மொழிகள்- 8 1. Sunshine is delicious, rain is refreshing, wind braces up, snow is exhilarating; there is no such thing as bad weather, only different kinds of good weather- John Ruskin சூரிய ஒளி சுவை கூட்டுகிறது, மழை புத்துணர்ச்சியூட்டுகிறது, காற்று பலமாக வீசுகிறது, பனி உற்சாகப்படுத்துகிறது; மோசமான வானிலை என்று எதுவும் இல்லை, பல்வேறு வகையான இனிய வானிலைகள் மட்டுமே நிலவுகின்றன. 2. It's so hard to forget pain, but it's even harder to remember sweetness. We have no scar to show for happiness- Chuck Palahniuk துன்பத்தை மறப்பது கடினமானது, இன்பத்தை நினைவில் வைத்திருப்பது அதனினும் கடினமானது. இன்பத்தை வெளிக்காட்டுவதற்கு தழும்புகள் என்பதாக ஏதுமில்லை. 3. Life is about direction not speed. வாழ்க்கை என்பது திசையைப் பொறுத்தது, வேகத்தைப் பொறுத்தது அல்ல. 4. The most ordinary things in life are often the most extraordinary. வாழ்க்கையில் சாதாரணமான விஷயங்கள் தான் நிரம்பவும் அசாதாரணமானவை. 5. In childhood, there is paradise all around us- Wordsworth  குழந்தைப் பருவத்தில் நம்மைச் சுற்றிலும் ...

நூலகமே அகம்

நூலகமே அகம் 1. I have always imagined that paradise will be a kind of library- Jorge Luis Borges  சொர்க்கம் என்பது ஒருவிதமான நூலகம் என்பதாகவே நான் எண்ணுகிறேன். 2. Whatever the cost of our libraries, the price is cheap compared to that of an ignorant nation- Walter Cronkite நமது நூலகங்களுக்கான செலவு எதுவாக இருந்தாலும், அறியாமை நிறைந்த ஒரு தேசத்தின் மதிப்போடு ஒப்பிடுகையில் அது மிகக் குறைவானதே. 3. When I got my library card, that was when my life began- Rita Mae Brown எனக்கு நூலக அட்டை கிடைத்த போது தான் என் வாழ்க்கை தொடங்கப்பெற்றது. 4. Without the library, you have no civilization- Ray Bradbury நூலகம் இல்லாமல் நாகரிகம் இல்லை. 5. Without libraries what have we? We have no past and no future- Ray Bradbury நூலகங்கள் இல்லையென்றால் நமக்குக் கடந்த காலமும் இல்லை, எதிர்காலமும் இல்லை. 6. To build up a library is to create a life. It's never just a random collection of books- Carlos María Domínguez ஒரு நூலகத்தை உருவாக்குவது என்பது ஒரு வாழ்க்கையை உருவாக்குவதாகும். அது ஒருபோதும் வெறும் தற்செயலான ...

கதை கேளு! கதை கேளு!

கதை கேளு! கதை கேளு! Story telling Quotes  1. Stories are memory aids, instruction manuals and moral compasses- Aleks Krotoski கதைகள் என்பவை நினைவாற்றலுக்கு உதவும் கருவிகள், வழிகாட்டும் கையேடுகள் மற்றும் அறநெறி சார்ந்த திசைகாட்டிகள் ஆகும். 2. Sometimes reality is too complex. Stories give it form- Jean Luc Godard சில சமயங்களில் யதார்த்தம் மிகவும் சிக்கலானது. கதைகள் அதற்கு ஒரு வடிவத்தை அளிக்கின்றன. 3. Authors do not choose a story to write, the story chooses us- Richard P. Denney எழுத்தாளர்கள் எழுதுவதற்கு ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பதில்லை; கதை தான் எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்கிறது. 4. To hell with facts! We need stories!- Ken Kese உண்மைகள் தொலைந்து போகட்டும்! நமக்குக் கதைகள் மட்டுமே தேவை!  5. Stories are a communal currency of humanity- Tahir Shah கதைகள் என்பவை மனிதகுலத்தின் பொதுவான நாணயங்கள். 6. If history were taught in the form of stories, it would never be forgotten- Rudyard Kipling வரலாறு கதைகளாகக் கற்பிக்கப்பட்டால், அது ஒருபோதும் மறக்கப்படாது. 7. The human species thinks in me...

Max Gunther- மணி மொழிகள்

Max Gunther- மணி மொழிகள் Max Gunther Quotes 1. Adventure is what makes life worth living and the way to have an adventure is to expose yourself to risk. சாகசமே வாழ்க்கையை வாழத் தகுந்ததாக ஆக்குகிறது. இடர்களை எதிர்கொள்ள உங்களை நீங்கள் உட்படுத்திக்கொள்வதே சாகசத்தை மேற்கொள்வதற்கான வழியாகும். 2. The trick is to disregard what everybody tells you until you have thought it through for yourself. நீங்களே அதைப்பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பார்க்கும் வரை, மற்றவர்கள் சொல்வதைப் புறக்கணிப்பதே சூட்சுமம். 3. Worry is not a sickness but a sign of health. If you are not worried, you are not risking enough. கவலை என்பது ஒரு நோய் அல்ல, அது ஆரோக்கியத்தின் அறிகுறி. நீங்கள் கவலைப்படவில்லை என்றால், போதுமான அளவு இடர்ப்பாட்டை எடுக்கவில்லை என்பதாகப் பொருள். 4. Everybody wants to win but not everybody wants to bet and therein lies a difference of the greatest magnitude.  எல்லோரும் வெற்றி பெற விரும்புகிறார்கள், ஆனால் எல்லோரும் பந்தயம் கட்ட விரும்புவதில்லை; அதில் தான் மிகப்பெரிய வேறுபாடு அடங்கியுள்ளது. 5. Nobo...

பேசும் மெளனம்

பேசும் மெளனம் 1. I have often regretted my speech, but never my silence- Xenocrates என் பேச்சுக்காக நான் பலமுறை வருந்தியிருக்கிறேன், ஆனால் என் மௌனத்திற்காக நான் ஒருபோதும் வருந்தியதில்லை. 2. Silence is a fence around wisdom. மெளனம் என்பது ஞானத்தைக் காக்கும் வேலி. 3. Listen to the music of silence. வார்த்தைகள் அடங்கிய பின், மௌனம் பாடும் இசையைக் கேளுங்கள். 4. Time and silence are the most luxurious things today- Tom Ford இன்று நேரமும் மெளனமும் தான் மிகப்பெரிய ஆடம்பரங்கள். 5. In music, silence is more important than sound- Miles Davis இசையில், ஒலியை விட மௌனமே மிக முக்கியமானது. 6. When you can bear your own silence, you are free- Mooji எப்போது உங்களால் உங்களுடைய சொந்த மெளனத்தைத் தாங்கிக் கொள்ள முடிகிறதோ, அப்போது நீங்கள் சுதந்திரமாகிறீர்கள். 7. Don't look for meaning in the words. Listen to the silences- Samuel Beckett   வார்த்தைகளில் அர்த்தத்தைத் தேடாதீர்கள். மெளனங்களைக் கவனித்துக் கேளுங்கள். 8. He who does not understand your silence will probably not understand your words- Elbert Hub...

Osho- மணி மொழிகள்

Os ho- மணி மொழிகள் Osho Quotes  1. Be- don't try to become. இருத்தலில் இருங்கள். ஏதொன்றாகவும் மாற முயற்சிக்காதீர்கள். 2. Life is not a problem to be solved but a mystery to be lived. வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையல்ல; மாறாக, வாழ்ந்து உணரப்பட வேண்டிய ஒரு மர்மம். 3. The moment a child is born, the mother is also born. ஒரு குழந்தை பிறக்கும் அதே கணத்தில், ஒரு தாயும் பிறக்கிறாள். 4. I love this world because it is imperfect. It is imperfect and that's why it is growing; if it was perfect it would have been dead. இந்த உலகம் முழுமையற்றதாக இருப்பதால் நான் அதை நேசிக்கிறேன். இது முழுமையற்றது, அதனால்தான் இது வளர்ந்து கொண்டிருக்கிறது; ஒருவேளை இது முழுமையானதாக இருந்திருந்தால், அது உயிரற்றதாக இருந்திருக்கும். 5. No, I don't want to give my people sticks. I want to give them eyes. இல்லை, என் மக்களுக்கு நான் ஊன்றுகோல்களைக் கொடுக்க விரும்பவில்லை. அவர்களுக்குக் கண்களைத்தான் நான் கொடுக்க விரும்புகிறேன். 6. If you work without love, you are working like a slave. When you wor...

Lao Tzu- மணி மொழிகள்

Lao Tzu- மணி மொழிகள் Lao Tzu Quotes  1. Knowledge is a treasure, but practice is the key to it. அறிவு ஒரு பொக்கிஷம், பயிற்சியே அதற்கான திறவுகோல். 2. New Beginnings are often disguised as painful endings. புதிய தொடக்கங்கள் பெரும்பாலும் வேதனையான முடிவுகளின் வடிவத்திலேயே வருகின்றன. 3. The flame that burns twice as bright burns half as long. இரண்டு மடங்கு பிரகாசமாக எரியும் சுடர், பாதி காலமே ஒளி தரும். 4. Perfection is the willingness to be imperfect. முழுமையற்றதை ஏற்றுக்கொள்வதே முழுமைக்கான வழி. 5. A good traveler has no fixed plans, and is not intent on arriving. ஒரு சிறந்த பயணிக்கு நிலையான திட்டங்கள் இருப்பதில்லை, ஓரிடத்தைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கமும் இருப்பதில்லை. 6. He who knows that enough is enough will always have enough. எது போதும் என்பதை அறிந்தவனுக்கு, எப்போதுமே எல்லாமே போதுமானதாக இருக்கும். 7. If you are depressed, you are living in the past. If you are anxious, you are in the future. If you are at peace, you are living in the present. நீங்கள் மனச்சோர்வில் இருந்தால், கடந...

அன்பே சிவம்

அ ன்பே சிவம் 1. Kindness is the one thing you can't give away. It always come back- George Skolsky அன்பை உங்களால் ஒருபோதும் முற்றாகக் கொடுக்க முடியாது. அது எப்படியாகினும் திரும்ப உங்களிடம் வந்து சேர்வதாகவே இருக்கும். 2. Love is the only thing that will pay interest to both borrower and lender- Robert Ingersoll அன்பு என்பது மட்டுமே கடன் பெறுபவருக்கும் கடன் கொடுப்பவருக்கும் வட்டி தரும் ஒரே பொருளாகும். 3. Love cannot be bought. It cannot be sold. The price of love is love only. அன்பை வாங்கவும் முடியாது. விற்கவும் முடியாது. அன்பிற்கு விலை அன்பு தான். 4. True love begins when nothing is looked for in return. உண்மையான அன்பு, பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காத போது தொடங்குகிறது. 5. A friendly look is a dish at a feast. நேசமான பார்வை என்பது விருந்திலே ஒரு உணவு வகையாகும். 6. Love is a language that the dumb can speak and the deaf can hear. அன்பு என்ற மொழியை ஊமையர் பேச முடியும். செவிடர் கேட்டுப் புரிந்து கொள்ள முடியும். 7. Love is a perfume you cannot pour on others without getting a few drops...

உலகப் பணமொழிகள்- 3

உ லகப் பணமொழிகள்- 3 1. பணம் வரும் போது அதற்கு இரண்டு கால்கள்; போகும் போது நூறு கால்கள். 2. தென்றலை விதைப்பவன் புயலை அறுவடை செய்கிறான். 3. வேக வேகமாகச் சேர்த்த செல்வங்கள் குறைந்து விடும்; சிறிது சிறிதாகச் சேர்ந்தவை பெருகும். 4. கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல. அதிகம் விரும்புபவன் தான் ஏழை.  5. பாதிப் பணக்காரர் ஆகி விட்டால் முழுப் பணக்காரர் ஆவது எளிது. 6. பணத்தைக் கொடுத்தவனிடம் பல்லைக் காட்டிப் பேசிக் கொண்டிருந்தால் பணம் மீளாது. 7. வாணிபம் வாழ்நாள் முழுமைக்கும் ஒரு சொத்து. 8. வேண்டாத பொருள் ஒருநாளும் மலிவானதன்று. அது காசுக்கு ஒன்றாகிலும் மலிவன்று. 9. கடனாக ஆயிரத்திற்கு விற்பதைக் காட்டிலும் ரொக்கமாக எண்ணூறு பெறுவது மேல். 10. மரம் நட்டவன் அதன் கனியை உண்ணல் அரிது.

போர்த்தொழில் போக்கு

போர்த்தொழில் போக்கு 1. Peace is not an absence of war, it is a virtue, a state of mind, a disposition for benevolence, confidence, justice- Baruch Spinoza  அமைதி என்பது போர் இல்லாமை மட்டுமல்ல; அது ஒரு நற்பண்பு, ஒரு மனோநிலை, ஒரு நன்னெறி, நம்பிக்கை மற்றும் நீதிக்கான ஒரு மனப்பாங்கு. 2. There never was a good war or a bad peace- Benjamin Franklin நல்ல போர் என்றோ, கெட்ட அமைதி என்றோ எதுவுமே இருந்ததில்லை. 3. How can you have a war on terrorism when war itself is terrorism? - Howard Zinn பயங்கரவாதமே ஒரு போர் எனும் போது, பயங்கரவாதத்திற்கு எதிராக நீங்கள் எப்படி ஒரு போரை நடத்த முடியும்? 4. War is what happens when language fails- Margaret Atwood மொழி தோற்றுப்போகும் புள்ளியில் தான் போர் தொடங்குகிறது. 5. War does not determine who is right- only who is left- Bertrand Russell யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதைப் போர் தீர்மானிப்பதில்லை—யார் எஞ்சியிருக்கிறார்கள் என்பதை மட்டுமே அது தீர்மானிக்கிறது. 6. The more you sweat in peace, the less you bleed in war- George S Patton அமைதிக்காக நீங்கள் எவ்வ...

James Clear- மணி மொழிகள்- 2

James Clear- மணி மொழிகள்- 2 James Clear Quotes- 2 1. You have to fall in love with boredom. சலிப்புடன் காதல் கொள்ளுங்கள். 2. When the world seems uncontrollable, focus on what you can control. உலகம் கட்டுப்பாடற்றதாகத் தோன்றும்போது, ​​உங்களால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் கவனம் செலுத்துங்கள். 3. Life is a series of tradeoffs and greater results usually require greater tradeoffs . வாழ்க்கை என்பது பரிமாற்றங்களின் தொடர் மட்டுமே. மேலும், பெரிய முடிவுகளுக்கு பொதுவாகப் பெரிய பரிமாற்றங்கள் தேவைப்படுகின்றன. 4. The willingness to do the unsexy work is a competitive advantage. கவர்ச்சியற்ற வேலையைச் செய்வதில் விருப்பம் கொள்வது போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனுகூலத்தை அளிக்கிறது. 5. The people who stick with things for years and never stop almost always win the race. பல்லாண்டுகளாக ஒரு சில செயல்களைக் கடைப்பிடிப்பவர்கள் மற்றும் அதனை ஒருபோதும் நிறுத்தாதவர்கள் எப்போதும் பந்தயத்தில் வெற்றி பெறுகிறார்கள். 6. The secret of creative work is to make a lot and publish a little. படைப்பாற்றல் மிக்க எழுத்தின் இர...

Seneca- மணி மொழிகள்

Seneca- மணி மொழிகள் Seneca Quotes  1. We are not given a short life but we make it short and we are not ill-supplied but wasteful of it. நமக்குக் குறுகிய ஆயுள் வழங்கப்படவில்லை, ஆனால் நாம் அதைக் குறுகியதாக்குகிறோம், நமக்குக் குறைவாக வழங்கப்படுவதில்லை, மாறாக அதை நாம் வீணடிக்கிறோம். 2. Difficulties strengthen the mind as labour does the body. உழைப்பு உடலைப் பலப்படுத்துகிறது. சிரமங்கள் மனதைப் பலப்படுத்துகின்றன. 3. To be everywhere is to be nowhere. எல்லாவிடத்திலும் இருக்க வேண்டுமென்றால் எங்கும் இருக்க முடியாது. 4. The more a mind takes, the more it expands. ஒரு மனம் எவ்வளவு அதிகமாக எடுத்துக் கொள்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது விசாலமடைகிறது. 5. My anger is more likely to do me more harm than your wrong. நீ செய்த தவறை விட அதற்கான என் எதிர்வினையான கோபம் எனக்கு அதிக தீங்கை இழைக்க வல்லது. 6. The greatest wealth is the poverty of desires. ஆசைகளின் வறுமையே ஆகப்பெரிய வளமை. 7. We suffer more in imagination than in reality.  நாம் நிஜத்தை விட கற்பனையினால் அதிகம் துன்புறுகிறோம். 8. There is no di...