Posts

Showing posts with the label மதிப்பு முதலீடு

விலையும் மதிப்பும்

விலையும் மதிப்பும் Price and Value  பங்குச்சந்தையில் விலை உயர்ந்த பங்குகள் எவை என்றால் சுலபமாகச் சொல்லி விடலாம். MRF (ரூ.1,46,195) Page Industries (ரூ.35,650) Shree Cement (ரூ.27,350) மதிப்பு மிகுந்த பங்குகள் என்றால் அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட முடியாது. சற்று யோசித்து, கணக்கிட்டுத் தான் சொல்ல முடியும். மதிப்பு என்ற கருத்தாக்கத்தில் நகரும் பகுதிகள் நிறைய வந்து விடும். எவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டாலும் விடை சரியானது தானா என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாது. பங்குகளின் விலை மற்றும் பங்குச்சந்தை குறியீடு போன்றவை விலை குறித்த அளவீடுகள். அளவீடு செய்ய இவை சுலபமாக இருக்கலாம். ஆனால் அதைக் கொண்டு நாம் முதலீட்டு முடிவுகள் எதனையும் எடுக்கக்கூடாது. உண்மையான மதிப்பைக் கண்டறிய நாம் இன்னும் சற்று ஆழமாகத் தோண்ட வேண்டும். முதலில் குறிப்பிட்ட MRF நிறுவனப்பங்கையே எடுத்துக் கொள்ளலாம். நிறுவனம் இதுவரை பங்குப் பிரிப்பு எதுவும் மேற்கொள்ளவில்லை. இரண்டு முறை மட்டும் இலவசப்பங்களிப்பை மேற்கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் பங்கு சார் முதல் (equity capital) 4.24 கோடி ரூபாய் மட்டுமே. பத்து ரூபாய் முக மதிப்பை...

புதிய 52 வாரக் குறைவு உத்தி

புதிய 52 வாரக் குறைவு உத்தி New 52 week low strategy  52 வாரக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகளில் முதலீடு செய்யலாமா? 52 வாரக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகள், பெரும்பாலான சமயங்களில், நியாயமான காரணங்களுக்காக அவ்விதம் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும். இத்தகைய நிறுவனங்கள் அடிக்கடி சந்தைக்கு வந்து நிதியைத் திரட்டி அவற்றின் பங்கு முதலை (equity capital) நீர்த்துப்போகும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். இவற்றின் கடன்-முதல் விகிதம் (debt-equity ratio) கட்டுக்கடங்காமல் இருக்கும். இவை ஒருபோதும் வளர்ச்சியின் மீதான வளர்ச்சியை எட்டாது. இவற்றுக்கு எந்த அகழியும் (moat) இருக்காது. இவற்றில் நிறுவனர் பங்கு ஒரு சதவீதமாகவும் சிறு முதலீட்டாளர்கள் பங்கு 99 சதவீதமாகவும் இருக்கும். அறம் என்பது அறவே இருக்காது. ஆனால் இந்த 52 வாரக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகளின் வரிசையில் புதிய நிறுவனம் ஒன்று இடம் பெற்றால் (new 52 week low) அது கவனத்திற்குரிய ஒன்றாகிறது.  சமீபத்தில் Natco Pharma பங்கு, புதிய 52 வாரக் குறைவு வரிசையில் இடம் பெற்றது. இந்த மாதிரி பங்குகளைப் பகுப்பாய்வுக்கு உட்படு...

குறியீட்டு விலக்க முதலீடு

குறியீட்டு விலக்க முதலீடு Deindex Investing சென்செக்ஸ் முதலான குறியீடுகளில் புதிதாக இணையவிருக்கும் நிறுவனப்பங்குகளை அவற்றின் இணைவிற்கு முன்னரே இனங்காண முடியுமா என்பது நண்பர் ஒருவரின் கேள்வி. முதலிலேயே அத்தகைய பங்குகளை வாங்கி வைத்திருந்தால் பின்னர் சென்செக்ஸை அடித்தொடரும் குறியீட்டு நிதிகள் அவற்றை வாங்கும் போது நாம் விற்று விடலாம் அல்லது அவற்றின் தொடர்ந்தவாக்கிலான இலாபப் பயணத்தில் பங்கு பெறலாம் என்பது அவரின் எண்ணப்போக்காக இருந்தது.  சென்செக்ஸ் குறியீட்டில் இணைவதற்கு அவை பெரு நிறுவனப்பங்குகளாக (large cap stocks) இருக்க வேண்டும். தரமான இருப்பு நிலைக் கணக்கையும் (balance sheet) திடமான நிதி விகிதங்களையும் (financial ratios) அவை கொண்டிருக்க வேண்டும். நீர்மை நிறை (liquidity) மிகவும் முக்கியம். இவை போக சென்செக்ஸில் ஏற்கெனவே இடம் பெற்ற துறைகளை அவை சிறப்பு செய்வதாக (compliment) இருக்க வேண்டும். இத்தகைய பங்குகளை முன்னரே இனங்காண்பது முடியாதது என்பதற்கு அடுத்தது. மேற்கண்ட விதிமுறைகளில் அவை பெரு நிறுவனப்பங்குகளாக இருக்கவேண்டும் என்ற விதிமுறை  இத்தகைய பங்குகளை முன்னரே இனங்கண்டு, அது முடியாதெ...

நிலைப்பாடு அளவீடு

நிலைப்பாடு அளவீடு Position Sizing  ஒரு பங்கின் மூலமாக நீங்கள் பெறும் வருமானத்தில் அதன் position sizing, அதாவது, அந்தப் பங்குகளை எவ்வளவு அதிக எண்ணிக்கையில் வாங்குகிறீர்கள் என்ற நிலைப்பாடு அளவு மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. வானத்திலிருந்து தங்கமாக மழை பெய்கிறது. அந்த மழையை எப்படி நீங்கள் பிடிப்பீர்கள்? ஒரு சிறிய குவளையிலா? அல்லது பெரிய ஒரு பாத்திரத்திலா? கரடிச்சந்தையில் பங்கு மழை தங்கமாகப் பொழியும் போது அத்தகைய பங்குகளைப் பெரிய பெரிய அளவுகளில் வாங்குவது நிலைப்பாடு அளவீடு (Postion Sizing) என்பதாக அழைக்கப்படுகிறது. அது 2008 ஆம் ஆண்டு. Sub prime crisis காரணமாக உலகம் முழுவதுமான பங்குச்சந்தைகள் தலைகுப்புற விழுந்து கிடந்த காலம். அப்போது அடியேன் 2100 ரூபாய்க்கு வாங்கிய ஐம்பது V Guard பங்குகளை உதாரணமாகக் கொண்டு இதனைப் புரிந்து கொள்ள முயலலாம். 2008 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட 50 பங்குகள் அதன் பங்குப்பிரிப்பு மற்றும் இலவசப் பங்களிப்பின் காரணமாகத் தற்போது 700 பங்குகள் ஆகியிருக்கிறது. நான் வாங்கிய 2100 ரூபாயைக் கொண்டு கணக்கிட்டால் 2024 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் 46.66 சதவீதம் வருகிறது. அதன் முதலீட்...

ஒரு கேள்வி ஒரு பதில் - 2

ஒரு கேள்வி ஒரு பதில் - 2 கேள்வி : உள்ளார்ந்த மதிப்பை (Intrinsic value) முதலீட்டிற்கு எப்படிப் பயன்படுத்துவது ? உள்ளார்ந்த மதிப்பைக் கணக்கீடு செய்த பின்னர் அந்த மதிப்பிற்குக் குறைவாகப் பங்குகள் வர்த்தகமாகும் போது அவற்றை வாங்கி அந்த மதிப்பிற்கு அதிகமாகப் பங்குகள் வர்த்தகமாகும் போது விற்று விடுவது சிறந்ததா ? அல்லது அத்தகைய பங்குகளை இனங்கண்டு வாங்கி அவற்றைக் காலா காலத்துக்கும் வைத்திருப்பது நல்லதா ? பதில் :   உள்ளார்ந்த மதிப்பு குறித்து ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் . உள்ளார்ந்த மதிப்பு என்பது ஒரு தனிப்பட்ட எண் அல்ல . Range of values என்ற அடிப்படையில் அது ஒரு மதிப்புப் பட்டையில் ( value band ) இருக்கும் .  ஒரு நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பு ரூ.2127.32 என்று கணிப்பதெல்லாம்  உட்டாலக்கடி . உள்ளார்ந்த மதிப்பு , பங்குகளின் சந்தை மதிப்பைப் போல் தின அளவில் மாறாது என்றாலும் அதுவும் அவ்வப்போது மாறிய வண்ணமாகவே இருக்கும் . நிறுவனத்தின் ஒரு வியாபார உத்தி , அது மேற்கொள்ளும் விரிவாக்கம் , அதன் கையகம் , புதிய காப்புரிமைகள் போன்ற ஒவ்வொரு தரவுகளும் அதன் உள்ளார்ந்த மதிப்பை நேர்மமாகவோ அ...

வேதாளம் சொன்ன கதை - 2

வேதாளம் சொன்ன கதை - 2 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான் . பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமாதித்தனை நோக்கி , " மன்னா ! ஏழ் கடல்களின் ஆழத்தைக் கூட அளந்து விடலாம் , ஆனால் பெண்களுடைய மனதின் ஆழம் அளவிட முடியாதது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் . எனக்கென்னவோ பெண்களின் மனதை விட மனிதர்களின் பேராசை தான் அளவிட முடியாத ஆழ்கடலாகத் தோன்றுகிறது . முன்பொரு சமயம் செயற்கைத் தங்க ஆபரணங்களை விற்கும் ஒரு வணிகர் நீண்ட நாட்களாக விலை போகாமல் இருந்த ஆபரணங்களைத் தள்ளுபடியாகப் பாதி விலையில் விற்பனை செய்யும் படிக்கு தன் வேலையாளைப் பணித்தார் . அவனுக்குக் காது கொஞ்சம் மந்தம் . ஆளும் கொஞ்சம் மந்தம் . அவன் அந்த ஆபரணங்களுக்கு இரட்டிப்பு விலையைப் பட்டையில் குறித்து வைத்தான் . மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்த நகைகள் அன்று மாலைக்குள் விற்றுத் தீர்ந்தன . இந்த வேலையாளுக்காவது காது கேட்காது . காது கேளாதவன் மாதிரி நடித்த இன்னொருவனின் கதையையும் கூறுகிறேன் கே...

உள்ளார்ந்த மதிப்பு

உள்ளார்ந்த மதிப்பு  Intrinsic Value உள்ளார்ந்த மதிப்பு என்பது ஒரு நகரும் இலக்கு (moving target) மேலும் அது வெறும் கணக்கு மட்டுமல்ல ஒரு கலையும் கூட . அதை விளக்க முற்படும் போதே வார்த்தைகளுக்குள் அடங்காமல் புகை போல் என் எண்ணங்கள் நழுவிச் செல்கின்றன . வெவ்வேறு கோணங்களிலிருந்து உள்ளார்ந்த மதிப்பை விளக்க முயற்சிக்கிறேன் . உள்ளார்ந்த மதிப்பு என்பது ஒரு தனிப்பட்ட எண் அல்ல . Range of values என்ற அடிப்படையில் அது ஒரு மதிப்பீடு மட்டுமே . மதிப்பு முதலீட்டு குரு பெஞ்சமின் கிரகாம் பின்வருமாறு இதனை விளக்குகிறார் . தெருவில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கிறார் . அவருடைய மிகச்சரியான எடை நமக்குத் தெரியாவிட்டாலும் அவரின் உயரத்திற்கு அவர் கொஞ்சம் பருமனாக இருக்கிறார் என்று பார்த்ததுமே சொல்லி விடலாம் அல்லவா ? அதே மாதிரி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு பெண்மணியின் சரியான வயது நமக்குத் தெரியாவிட்டாலும் அவர் ஓட்டுப் போடும் வயதை அடைந்து விட்டாரா என்று பார்த்ததுமே சொல்லி விடலாம் . பங்கு விலை வேறு . உள்ளார்ந்த மதிப்பு என்பது வேறு . பங்கின் விலை உள்ளார்ந்த மதிப்பை விடக் கூடுதலாகவோ (காளைச்சந்தை) குற...

மதிப்பு முதலீடு

மதிப்பு முதலீடு Value Investing மதிப்பு முதலீடு என்பதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு ரூபாய் மதிப்பு உள்ள பொருளை ஐம்பது காசுக்கு வாங்குவது என்பதாகச் சொல்லலாம் . நாம் அனைவரும் பங்குச்சந்தையில் (மதிப்பு) முதலீட்டை மேற்கொள்கிறோமோ இல்லையோ அன்றாடம் மதிப்பு முதலீட்டு அடிப்படையில் நிறையப் பொருட்களை வாங்கிக்கொண்டு தான் இருக்கிறோம் . ஆடித் தள்ளுபடி என்றால் ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது . ஒன்றுக்கொன்று இலவசத்தை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன? பங்குச்சந்தையில்  அவ்வப்போது மதிப்பு முதலீட்டு வாய்ப்புகள் முகிழ்த்தெழும் போது ஏற்கெனவே முதலீட்டை மேற்கொண்டிருப்பவர்கள் பங்குச்சந்தையை விட்டு ஓடுவதும் புதிதாக முதலீடு செய்ய வருபவர்கள் வாசலிலேயே தயங்கி நிற்பதும் ஒரு புரியாத புதிர் . பங்குச்சந்தை பற்றிய சரியான ஒரு புரிதல் இருந்தால் அடிக்கடி வரும் ஆடித் தள்ளுபடியை நீங்கள் வரவேற்க ஆரம்பித்து விடுவீர்கள் . ஆடித் தள்ளுபடிக்கும் மீமிகை கரடிச்சந்தை தள்ளுபடிக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. ஜவுளிச்சந்தையில் ஆடித் தள்ளுபடியில் 2000 ரூபாய் மதிப்புள்ள சட்டையை 1000 ரூபாய்க்கு வ...