Posts

Showing posts with the label பன்மடங்காளர்

பன்மடங்காளர்களைப் பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி?

பன்மடங்காளர்களைப் பல்லாண்டுகள்  வைத்திருப்பது எப்படி? பன்மடங்காளர்களை (Multibaggers) பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி என்று பார்ப்பதற்கு முன் பன்மடங்காளர்கள் என்பதை முதலில் வரையறுத்து விடலாம். பன்மடங்காளர் என்பது இரண்டு மடங்கு கூடிய பங்கு என்பதான ஒரு எண்ணப்போக்கு நிலவுகிறது. பன்மடங்காளர் என்று ஒரு பங்கைக் குறிப்பிட வேண்டுமென்றால் அவை குறைந்தபட்சம் நீங்கள் வாங்கிய விலையிலிருந்து 100 மடங்கு கூட வேண்டும். 100 மடங்கு என்பது எட்டாத ஒரு உயரம் போல் தோன்றினாலும் 100 மடங்காளர் என்பது தொடர்ந்தவாக்கிலான இரண்டு 10 மடங்காளர் மட்டுமே. 10 ரூபாய் பங்கு 10 மடங்கு கூடினால் அது 100 ரூபாய் ஆகி விடும். இந்த 100 ரூபாய் பங்கு 10 மடங்கு கூடினால் 1000 ரூபாய் ஆகி விடும்.  100 மடங்கு கூடும் வரை ஒரு பங்கை வைத்திருப்பது மட்டும் தான் இந்தப் பன்மடங்காளர் பயணத்தின் கடினமான ஒரு பகுதி. 100 மடங்காளர் ஆகி விட்டால் பின்னர் தன்னளவில் அது வேகமெடுக்கத் தொடங்கி விடும். மேலும் இந்தப் பங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் பங்கு ஈட்டு விகிதம் (dividend yield) இந்தப் பங்குகளை விற்காமல் உங்களைக் காக்கும் அரணாக இருக்கும்....

எனது முதல் 200 மடங்காளர்

எனது முதல் 200 மடங்காளர் My First 200 Bagger நாட்கள் என்னும் பூக்கள் கொண்டு தான் ஆண்டுகள் என்னும் மாலைகள் கட்டப்படுகின்றன. ஆனால் நாட்கள் பார்க்காததையெல்லாம் ஆண்டுகள் பார்க்கின்றன - காண்டேகர் ICICI, IDBI மற்றும் IFCI ஆகிய மூன்று நிறுவனங்களும் அவற்றின் ஆரம்ப காலத்தில் DFI (Development Financial Institutions) என்ற வகையில் இயங்கிக் கொண்டிருந்தன. DFI களின் வேலையை வங்கிகளே மேற்கொண்டமையால் DFI என்ற கருத்தாக்கம் ஒரு கட்டத்தில் தேவையில்லாமல் போனது. மேலும், இவற்றின் அதிகரித்து வந்த வாராக்கடன்களும் இவை தொடர்ந்து இயங்க சாதகமான ஒரு சூழலை உருவாக்கவில்லை. முதலிரண்டு நிறுவனங்களும் அவற்றின் துணை நிறுவனங்களான ICICI வங்கி மற்றும் IDBI வங்கியுடன் தலைகீழ் இணைப்பு (reverse merger) என்ற வாக்கில் இணையப்பெற்றன. இந்த மூன்று நிறுவனங்களில் தப்பிப் பிழைத்தது ICICI வங்கி மட்டுமே. IDBI வங்கி இன்றளவும் ஏனோதானோ என்று இயங்கிக் கொண்டிருக்கிறது. IFCI இன்னும் இறக்கத்தில் உள்ளது. IDBI Bank மற்றும் IFCI பங்கு விலைகள் ஆண்டாண்டாக குறிப்பிட்ட ஒரு விலைப்பட்டையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. ஆக, இந்த மூன்று நிறுவனங்களில் அதி...

பன்மடங்காளர்கள் - பத்து கட்டளைகள்

பன்மடங்காளர்கள் - பத்து கட்டளைகள் Multibaggers - Ten Commandments  1. You have to look for them பன்மடங்காளர்களைக் கைப்பற்ற நீங்கள் அவற்றை முதலில் மனக்கண்ணில் பார்க்க வேண்டும். அவற்றில் மனதைச் செலுத்த வேண்டும். பன்மடங்காளர் வேட்டை என்பது யானை வேட்டை மாதிரி. யானை வேட்டைக்குச் செல்லும் போது வழியில் தென்படும் குருவிகளைச் சுட்டுக் கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு தொடர்ந்து குருவிகளைச் சுட்டுக் கொண்டிருந்தால் குருவி வேட்டைக்கு நீங்கள் பழகி விடுவீர்கள். ஆயிரம் குருவிகள் கூட ஒரு யானைக்கு ஈடாகாது. மேலும் குருவி வேட்டையின் துப்பாக்கி சத்தத்தைக் கேட்டால் யானைகள் ஓடி ஒளிந்து கொள்ளும். பன்மடங்காளர் பங்குகள் உங்கள் கண்ணில் தென்படாது. Samvardhana Motherson International நிறுவனப்பங்கு ஒன்றின் விலை 125 ரூபாய். அதன் 52 வார உயர்ந்த பட்ச விலை 217 ரூபாய். அதன் 52 வார குறைந்த பட்ச விலை 107 ரூபாய். இது ஒரு பக்கம். ஆனால் Samvarthana Motherson International நிறுவனத்தின் பூர்வாசிரமப் பெயர் Motherson Sumi Systems. அது இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு Samvardhana Motherson International என்ற பெயரிலும், Mother...

பன்மடங்காளர்கள் - கேள்வி பதில்

பன்மடங்காளர்கள் - கேள்வி பதில் Multibaggers - Q & A கேள்வி : பன்மடங்காளர் பங்குகளைக் கைப்பற்ற அடிப்படையாக நாம் என்ன செய்ய வேண்டும் ? பதில் : பங்குகள் பன்மடங்காளர் ஆகும் வரை அவற்றைப் பொறுமையாக வைத்திருக்க வேண்டும் . கேள்வி : பன்மடங்காளர் என்பது குறைந்த பட்சமாக எத்தனை மடங்காளர் ? பதில் : பன்மடங்காளர் பங்குகள் என்பதைக் குறைந்த பட்சமாக 100 மடங்காளர் என்று கொள்ளுங்கள் . கேள்வி : ஒரு பங்கு 100 மடங்காளர் என்ற நிலையை எட்டிப் பிடிக்க அதிக காலம் ஆகுமே ? பதில் : ஆம் . ஒரு பங்கு 20 சதவீத CAGR என்ற விலையில் வளர்ந்து வந்தால் அது 100 மடங்காளர் ஆக 25 ஆண்டுகள் ஆகும் . அதே சமயம் அது 36 சதவீத CAGR கொடுத்தால் 15 ஆண்டுகளிலேயே 100 மடங்காளர் ஆகி விடும் . 100 மடங்காளர் என்பதை 100 மடங்காளர் என்று பார்த்தால் அது ஏதோ எட்டிப் பிடிக்க முடியாத இலக்காகத் தோன்றும் . மாறாக அதனைத் தொடர்ந்த வாக்கிலான இரண்டு 10 மடங்காளர் என்பதாகப் பாருங்கள் . அதாவது 10 ரூபாய் பங்கு 10 மடங்காளர் ஆனால் அது 100 ரூபாய் ஆகி விடும் . இந்த 100 ரூபாய் பங்கு 10 மடங்காளர் ஆனால் 1000 ரூபாய் ஆகி விடும் . ஆக 10 ரூபாய் பங்கு 1000 ரூபாய் அதாவத...

100 மடங்காளர்கள்

100 மடங்காளர்கள் 100 Baggers ஒரு நிறுவனப் பங்கு நீங்கள் வாங்கிய விலையிலிருந்து 100 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடைவது 100 bagger (சுருக்கமாக 100 x) தமிழில் 100 மடங்காளர் என்று அழைக்கப்படுகிறது . இந்த இலக்கு விலை (Target Price) யுகத்தில் ஒரு பங்கு 100 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடையும் வரை காத்திருப்பது முடியாது என்பதற்கு அடுத்ததாகத் தோன்றினாலும் அந்தப் பொறுமையான காத்திருத்தலுக்குப் பெரும் பலன் இருக்கிறது . இந்த மாதிரி ஒரு பங்கின் விலை நீங்கள் வாங்கிய விலையிலிருந்து 100 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடையும் போது அந்த நிறுவனம் வருடாவருடம் அளிக்கும் பங்காதாயப் பலன்கள் மூலமாகவே உங்களுக்கான ஒரு பணப்பாய்ச்சல் (cash flow) கிடைக்கப்பெற்று விடும் . முதலீட்டுப் பெருக்கம் (capital appreciation) தனி . பங்குச்சந்தையில் இந்தப் பன்மடங்காளர்களை அடைவதற்கு சில எளிய வழிகள் இருக்கின்றன . முதலாவது மற்றும் முக்கியமானது மீமிகை கரடிச்சந்தையில் நிறுவனப் பங்குகளை இனங்கண்டு வாங்கி வைக்க வேண்டும் . அது நன்றாக வளர்ச்சி வாய்ப்புகளை அடையக்கூடிய சிறு நிறுவனப்பங்காக இருந்தால் இன்னும் நல்லது . இவ்வாறு வாங்குவது...