Posts

Showing posts with the label முதலீடும் அதிர்ஷ்டமும்

இலாபத்தை இடைவெட்டல்

இலாபத்தை இடைவெட்டல் Run Cutting ஒரு கணவன்-மனைவிக்குப் பிதுரார்ஜித வடிவில் ஒரு இலட்சம் ரூபாய் கிடைக்கப்பெறுகிறது. அதனை அவர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அது பாதி ஆவியாகி 50000 ரூபாய் என்ற அளவிற்கு வந்த புள்ளியில் இந்தக் கதை தொடங்குகிறது.  தம்பதியருக்கு நிறுவனம் ஒன்றைக் குறித்த இரகசியத் தகவல் ஒன்று கிடைக்கப்பெறுகிறது. அந்த நிறுவனப்பங்குகள் 'ரூபாய் பங்கு' என்ற வகையில் 25 காசுக்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. நிறுவனத்தைக் குறித்த அந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதன் பங்குகள் காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணை முட்டும். இருந்தாலும் தம்பதியர் ஏற்கெனவே சந்தையில் சூடுபட்டதால் மதில் மேல் பூனையாக இருக்கின்றனர்.  பங்கின் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இரண்டு ரூபாயைத் தொடுகிறது. தம்பதி, தரகரின் எச்சரிக்கையை மீறி 50000 ரூபாய்க்கு அந்த ரூபாய் பங்கை பங்கு ஒன்று ரூபாய் இரண்டு என்ற விலையில் வாங்குகின்றனர்.  ஒரே வருடத்தில் அதன் பங்குகளின் விலை எட்டு ரூபாயைத் தொடுகிறது. பன்மடங்காளர் கணக்கில் சொல்வதானால் அது 4 bagger. தரகர், அதன் பங்குகளை விற்று விட வலியுறுத்துகிறார். நிறு...

அதிர்ஷ்டத் தேர்வு

அதிர்ஷ்டத் தேர்வு Luck Selection நெடுஞ்சாலை ஒன்றில் நண்பர்களுடன் தொலைதூரப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறீர்கள். ஒரு திருப்பத்தில் தவறாகத் திரும்பியது சிறிது நேரத்தில் உங்களுக்குப் புலப்படுகிறது. நீங்கள் உடனே வந்த வழியில் திரும்பி சரியான பாதையில் பயணிப்பீர்களா? அல்லது, உங்கள் தவறை ஏற்றுக்கொள்ள மனமின்றி தொடர்ந்து பயணிப்பீர்களா? ஒரு சிலர் பாதையை மாற்றாமல் பயணிப்பதாகவும், அதிலும் பெண்களை விட ஆண்கள் இந்த மனச்சாய்வுக்கு அதிகம் ஆட்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  Stop loss என்பது பங்குச்சந்தை வர்த்தக விதிகளில் தலையாய ஒன்றாகும். பங்குச்சந்தையில் மட்டுமல்ல, வாழ்க்கைச் சந்தையிலும் இந்த விதி, விதியான ஒரு விதியாகும்.  அது பங்கு முதலீடாக இருந்தாலும் சரி அல்லது அது ஒரு வேலையாக இருந்தாலும் சரி அல்லது அது ஒரு காதல் உறவாக இருந்தாலும் சரி அது எப்படி மலர்ந்து மணம் பரப்பும், அதில், அதிர்ஷ்டத்தின் பங்கு என்னவாக இருக்கும் என்று யாராலும் எப்போதும் தீர்மானமாகக் கூறவியலாது. ஒரு பங்கில் செய்யப்பட்ட முதலீடு ஆழம் காண முடியாத அதல பாதாளத்திற்குச் செல்லாது என்று எப்படி உறுதியாகக் கூற முடியும்? ...

அதிர்ஷ்ட மொழிகளும் அதற்கான விளக்கங்களும்- 1

அதிர்ஷ்ட மொழிகளும் அதற்கான விளக்கங்களும்- 1 1. No one is luckier than the person who believes in his luck- German proverb அதிர்ஷ்டத்தை நம்புகிறவரே மிகப்பெரிய  அதிர்ஷ்டக்காரர். எதன் மேலும் நம்பிக்கை கொள்பவருக்குத் தான் வாழ்க்கை இருக்கிறது. அது கடவுளாக இருக்கட்டும் அல்லது அதிர்ஷ்டமாக இருக்கட்டும், நம்பிக்கை தான் அடுத்தடுத்த கதவுகளைத் திறக்கிறது. பங்குச்சந்தையைப் பொறுத்தவரை எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. உலகின் எல்லாக் கண்டுபிடிப்புக்களும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன என்ற வாதம் உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது. பங்குச்சந்தை முதலீடு என்பது மனிதத்தின் கூர்மதியில் (Human Ingenuity) செய்யப்படும் முதலீடு. மனிதத்தின் கூர்மதிக்கு எல்லைகள் என்பதாக எதுவும் கிடையாது. பங்குச்சந்தையைப் பொறுத்தவரை நன்னம்பிக்கை (Optimism) மற்றும் அவநம்பிக்கை (Pessimism) என்ற இரு துருவங்களின் சேர்க்கையான புன்னகையுடனான அவநம்பிக்கை (Sunny Pessimism) என்ற எதிரெதிர் சிந்தனையில் (opposable mind) இயங்குவது இன்னும் சிறப்பு. 2. I am a great believer in luck and I find the harder...

வேகப் பாய்வை இனங்காணுதல்

வேகப் பாய்வை இனங்காணுதல் Finding the fast flow  வாழ்க்கையில் பெரும்பாலோனோர் அவர்களுடைய கனவு என்ன என்று தெரியாமலேயே கடைசி வரை வாழ்ந்து மடிந்து விடுகிறார்கள். சிலருக்கு அவர்களுடைய கனவு என்னவென்று தெரியும். ஆனால் அதை நனவாக்கும் வழிமுறைகள் அவர்களுக்குத் தெரியாது. கனவை நனவாக்கும் வழிமுறைகளில் தலையாய ஒரு உத்தியாக இந்த finding the fast flow வைச் சொல்லலாம்.  உங்களுடைய கனவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்தக் கனவு எங்கு உயிர்த்துடிப்புடன் நனவாகிக் கொண்டிருக்கிறதோ அத்தகைய இடங்களை நாடி நீங்கள் செல்ல வேண்டும். நீங்கள் ஒரு நாட்டுக்கே தலைவனாக வேண்டுமென்று விரும்பினாலும் சரி, நல்ல வேலை என்பது உங்களின் இலக்காக இருந்தாலும் சரி அவை நடைபெறும் இடங்களில் உங்களை நீங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நடிகராக வேண்டுமென்று விரும்பினால் கோடம்பாக்கத்திற்கு நீங்கள் செல்ல வேண்டியது அவசியம். நல்ல வேலை வேண்டுமென்று விரும்பினால் linkedin தளத்தில் நீங்கள் இருக்க வேண்டும்.  பங்குச்சந்தைக்கு வருவோம். பங்குச்சந்தையில் உங்கள் முதலீடுகள் இலாபகரமாக இருக்க வேண்டுமென்றால் பங்கு சார்ந்த இடங்களுக்கு ந...

ஆக்கபூர்வமான மடமைகள்

ஆக்கபூர்வமான மடமைகள் Constructive Supernaturalism  அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கான வழிமுறைகளில் ஒன்று இந்த ஆக்கபூர்வமான மடமைகள். அதிர்ஷ்டசாலிகள் அனைவரும் இந்த ஆக்கபூர்வமான மடமைகளில் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை அவர்களுக்கு எந்த வகையில் நன்மை செய்கிறது? வாருங்கள், பார்க்கலாம். வாழ்க்கையில், சில சமயங்களில் இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் உள்ளாக்கப்படுவோம். பிரச்னை என்னவென்றால் எந்த முடிவு நமக்கு நன்மையைத் தரப்போகிறது என்பதை நம்மால் தீர்மானமாகக் கணிக்கவியலாது. மேலும் இந்த முடிவினை உடனடியாக நாம் எடுக்க வேண்டியதாக இருக்கும். காற்றில் வைத்த கற்பூரம் மாதிரி இந்த முடிவெடுக்க வேண்டிய கால அளவு குறைந்து கொண்டே வருவதாக இருக்கும்.  சூதாட்ட நிலையத்தில் மூன்று இலக்க எண் ஒன்றில் பணம் கட்டி விளையாடும் ஒரு ஆட்டத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த மூன்று இலக்க எண்ணை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? எந்த எண் அடுத்த போட்டியாளரை விட ஒரு படி மேலாக உங்கள் வெற்றிக்கு உதவுவதாக இருக்கும்? எவ்வளவு யோசித்தாலும் இந்தப் புதிருக்கு விடை காணவே இயலாது....

அதிர்ஷ்டத்திற்குத் திட்டமிடுவது எப்படி ?

அதிர்ஷ்டத்திற்குத் திட்டமிடுவது எப்படி ? How to get lucky என்ற புத்தகத்தில் Max Gunther எடுத்துரைக்கும் ஒரு கருத்தாக்கம் : அதிர்ஷ்டம் வேறு , திட்டமிடல் வேறு . அதிர்ஷ்டத்தைத் திட்டமிடல் என்று கொள்வது ஆபத்தை விளைவிக்கும் . இந்தக் கருத்தைச் சிறிய ஒரு உண்மைக்கதையின் மூலம் அவர் விளக்குகிறார் . சூதாட்ட வட்டில் (Roulette wheel) பணம் கட்டி வெற்றி பெற பெண்மணி ஒருவர் ஒருங்கமைவு (system) ஒன்றைக் கண்டறிகிறார் . அது என்னவென்றால் , சூதாட்ட வட்டு குறிப்பிட்ட ஒரு எண்ணில் நிற்கும் என்பதாகப் பந்தயம் கட்டுகையில் பந்தயத்தில் தோற்றால் பந்தயப் பணத்தை இரட்டிப்பாக்கி அதே எண்ணில் மீண்டும் கட்டுவது . தோற்றால் மீண்டும் ... இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் இழந்த பணத்தை மட்டுமின்றி பெரும் பணத்தையும் ஒரு கட்டத்தில் சம்பாதித்து விடலாம் . இந்த ஒருங்கமைவைக் கொண்டு முதல் நாள் அந்தப் பெண்மணி சூதாட்டத்தில் வெற்றி பெறுகிறார் . மறுநாளும் வெற்றி . மூன்றாம் நாள் ஆகப்பெரிய அளவிலான பணத்தைப் பந்தயமாகக் கட்டி அதைத் தொடர்ந்து இரட்டிப்பாக்க முனைகையில் ஒருங்கமைவு வேலை செய்யவில்லை . என்னவாயிற்று ஒருங்கமைவுக்கு ?  சூதாட்ட...

அதிர்ஷ்ட மொழிகள்

அதிர்ஷ்ட மொழிகள் Luck quotes 1. I am a great believer in luck and I find the harder I work , the more I have of it - Thomas Jefferson நான் அதிர்ஷ்டத்தை மிகவும் நம்புகிறேன். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உழைக்கிறேனோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுகிறது. 2. The secret of a lucky life is making the most of a bad moment அதிர்ஷ்டமான வாழ்க்கையின் இரகசியம் , துரதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டத்தின் வேர்களை இனங்காண்பதில் உள்ளது. 3. No one is luckier than the person who believes in his luck - German proverb அதிர்ஷ்டத்தை நம்புகிறவரே மிகப்பெரிய  அதிர்ஷ்டக்காரர். 4. Better an ounce of luck than a pound of gold - Yiddish proverb கிலோ கணக்கில் தங்கம் கிடைக்கப்பெறுவதை விட கிராம் கணக்கில் அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுவது மேலானது. 5. Every wall is a door - Ralph Waldo Emerson ஒவ்வொரு சுவரும் ஒரு கதவு . 6. Luck sometimes visits a fool , but it never sits down with him - German proverb அதிர்ஷ்டம் சிலசமயம் முட்டாள் ஒருவனைச் சந்திக்கும். ஆனால் அவனுடன் கூடிக் குடும்பம் நடத்திக் கொண்டிராது. 7. Luck has ...

வாயை மூடி பேசவும்

வாயை மூடி பேசவும் எப்படிப்பட்ட வார்த்தைப் பின்னல்களும் தோற்றுவிக்க முடியாத உணர்ச்சியை மிகச் சரியாகக் கையாளப்பட்ட சிறிய மௌனம் உணர்த்தி விடும் - மார்க் ட்வெய்ன் மனிதன் தோன்றிய புதிதில் தன் உணர்ச்சிகளை ஸ்பரிசத்தினால் தான் வெளியிட்டிருப்பான் என்று தோன்றுகிறது . இன்னமும் கூடத்தான் . மனிதன் பேச்சிலே இவ்வளவு வல்லாளன் ஆன பிறகும் கூடத்தான் - காண்டேகர் சொல்லாத சொல்லுக்கு விலை ஏதுமில்லை .             *                   *                    ‌* அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் ஒரு வழிமுறையாக Max Gunther இந்த Closed Mouth என்ற கருத்தாக்கத்தைச் சொல்கிறார் . அமெரிக்க ஜனாதிபதி Calvin Coolidge ன் கதையைக் கொண்டு அதனைச் சுருக்கமாகப் பார்க்கலாம் . Coolidge அவசியத்திற்குப் பேசுவாரேயன்றி அனாவசியமாக ஒரு வார்த்தை பேச மாட்டார் . அவரைப் பற்றிய ஒரு பிரபலமான நகைச்சுவை : வாஷிங்டனைச...

நியாயமற்ற பிரபஞ்சம்

நியாயமற்ற பிரபஞ்சம் Unfair Universe How to get lucky புத்தகத்தில் Max Gunther அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கான 13 உத்திகளைப் பட்டியலிடுகிறார் . அதில் ஒரு உத்தியான நியாயமற்ற பிரபஞ்சத்தை ஏற்றுக் கொள்ளுதலின் (Accepting an Unfair Universe) மிகச் சுருக்கமான மொழிபெயர்ப்பு ...                *               *              * Rabbi Harold Kushner பொதுவாக ஒரு நல்ல மனிதர் . எல்லோரையும் போல சின்னஞ்சிறிய தவறுகளைச் செய்திருக்கிறார் என்றாலும் அவர் மாபெரும் தண்டனையைப் பெறுவதற்கான முகாந்திரம் எதுவுமில்லை . ஆனால் அவருடைய மகனுக்கு பிரபஞ்சம் ஆகப்பெரிய தண்டனை ஒன்றை வழங்குகிறது . அவருடைய மகன் மூன்று வயதில் Progeria என்று சொல்லப்படும் அதிவிரைவாக முதுமையடையும் நோயினால் பாதிக்கப்படுகிறான் . அந்த நோய்க்கு மருந்துகள் ஏதுமில்லை . அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று அடிக்கு மேல் வளர மாட்டார்கள் . முடி எதுவும் அவர்களுக...

ஒரு அதிர்ஷ்டக் கதை

ஒரு அதிர்ஷ்டக் கதை Charles Darrow ஜெர்மனியின் பென்சில்வேனியா நகரில் வசித்து வந்த 42 வயது heating engineer . 1930 களின் ஆகப்பெரிய பொருளாதார நெருக்கடியின் (Great Depression) போது நிலையான வேலையில்லாமல் அவருடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது . Charles Darrow அவ்வப்போது பங்குச்சந்தையில் ஊக வணிகம் செய்து பணம் சம்பாதிக்க முயல்வது வழக்கம் . அந்தப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வறுமையின் கோரப்பிடியில் இருந்த Darrow விற்கு பங்குச்சந்தை ஊக வணிகங்களில் இதை இவ்விதம் செய்திருந்தால் எவ்விதம் இருந்திருக்கும் அதை அவ்விதம் செய்திருந்தால் எவ்விதம் இருந்திருக்கும் என்ற கற்பனைகளில் திளைப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்காக இருந்தது . உதாரணமாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனப்பங்குகள் 40 டாலர் என்ற அளவுக்குத் தரையைத் தட்டும் வரை காத்திராமல் 1000 டாலர் என்ற அளவில் விற்று விட்டு வெளியேறியிருந்தால் எப்படி இருந்திருக்கும் ? அந்தப் பணத்தை  நிலத்தில் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கப் பெற்றிருக்கும் என்பதான ஒருபோதும் முடிவு பெறாத ஆகாயக் கோட்டைகள் ... அந்தப் பொருளாதார நெருக்கடி நிலையிலும் ரி...