இருப்பு சாய்வு
இருப்பு சாய்வு Availability Bias சூழ்நிலைகளை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் போது உடனடியாக மனதிற்கு வரும் தகவல்களை வைத்து முடிவெடுப்பதான மாந்தர்களின் மனச்சாய்வு இருப்பு சாய்வு (Availability bias) என்பதாக அழைக்கப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் மனம் காட்டும் இந்த உடனடித் தகவல்கள் தவறான முடிவுகளுக்கு மட்டுமே நம்மை இட்டுச் செல்லும். இருப்பு சாய்வு என்பதை பிரச்னை ஒன்றுக்கான தீர்வைக் கண்டடைவதற்கு மனம் பயன்படுத்தும் குறுக்கு வழி என்பதாகச் சொல்லலாம். சமீப கால சாய்வின் (Recency Bias) ஒரு அங்கமாக இந்த இருப்பு சாய்வைப் பார்க்க முடியும் என்றாலும் அதற்கும் இதற்கும் நுட்பமான சில வேறுபாடுகள் இருக்கின்றன. சமீப கால சாய்வு என்பது சமீபத்தில் நடந்த நிகழ்வுகளில் கவனம் கொள்வது. இருப்பு சாய்வு என்பது எப்போதோ நடந்த நிகழ்வாக இருந்தாலும் பசு மரத்தாணி போல் மனதில் பதிந்த நிகழ்வுகளில் கவனம் கொள்வது. Jaws திரைப்படம் 1975 ஆம் ஆண்டு வெளி வந்தது. Stephen Spielberg ன் காலத்தை வென்ற திரைக்காவியம் அது. Jaws படம் எடுக்கும் போது தொழில்நுட்பம் அவ்வளவு முன்னேறியிருக்கவில்லை. சுறா ஒன்றின் பொம்மையைக் கொண்டு அந்தத் த...