முதுமை மொழிகள் - 2

முதுமை மொழிகள்- 2

Old Age Quotes- 2


1. For the unlearned, old age is winter; for the learned, it is the season of the harvest.


கல்லாதவர்களுக்கு முதுமை என்பது இலையுதிர்காலம்; கற்றவர்களுக்கு அது அறுவடைக்காலம்.


2. Anyone who keeps the ability to see beauty never grows old- Franz Kafka


அழகைக் காணும் திறனை வைத்திருக்கும் எவருக்கும் வயதாகாது.


3. Anyone who stops learning is old, whether at twenty or eighty. Anyone who keeps learning stays young- Henry Ford


கற்பதை நிறுத்தும் எவருக்கும் வயதாகிறது. கற்றுக்கொண்டே இருப்பவர் இளமையாகவே இருப்பார்.


4. Age isn’t a number, it’s an attitude.


வயது என்பது ஒரு எண் அல்ல, அது ஒரு அணுகுமுறை.


5. We are always the same age inside- Gertrude Stein


மனதிற்கு வயது கிடையாது.


6. Ageing is just another word for living - Cindy Joseph 


முதுமை என்பது வாழ்தலின் இன்னொரு பெயர் மட்டுமே.


7. It's not how old you are. It's how you are old - Jules Renard 


உங்களின் வயது எவ்வளவு என்ற கணக்கை விட அதனை எவ்விதம் வந்தடைந்தீர்கள் என்ற கணக்கே முக்கியமானது.


8. Old age is the end of life- like the end of a game.


வயதான காலம் என்பது வாழ்வின் நிறைவு- விளையாட்டின் நிறைவைப் போல.


9. Today is the oldest you've ever been , and the youngest you'll ever be again- Roosevelt 


இன்று தான் உங்களின் இது வரையிலான வயது அதிகமாக இருக்கும் நாள். இன்று தான் உங்களின் எஞ்சிய வயதில் நீங்கள் இளமையாக  இருக்கும் நாள்.


10. The evening shadows are lengthening, but the morning is still in my heart.


மாலை நிழல் நீளமாகிறது. ஆனால் காலை இன்னும் என் இதயத்தில் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்