Posts

Showing posts with the label பணத்திற்கு அப்பால்

வாழ்க்கை பதில்கள்- 3

வாழ்க்கை பதில்கள்- 3 கேள்வி: பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியுமா? பதில்: பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியும். தேவைப்படுபவர்களுக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பணத்தைக் கொடுத்துப் பாருங்கள். கேள்வி: எல்லாக் காலத்திற்கும், எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துவதான அறிவுரை ஏதேனும் இருக்கிறதா? பதில்: இதுவும் கடந்து போகும்! கேள்வி: நெருப்பால் நெருப்பை அணைக்க முடியுமா? பதில்: முடியும். காடு ஒன்றில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பரவுகையில் நெருப்பு பரவி வரும் பகுதியை அடுத்து நெருப்பு வைத்து விடுவார்கள். அந்த நெருப்பு, நிலப்பரப்பை மரம் செடி கொடிகளின்றி வெறுமையாக்கி விடும். அதனைத் தாண்டி நெருப்பு பரவாது. கேள்வி: பணத்தைப் பணமாகப் பார்ப்பது எப்படி? பதில்: பணத்தை ஒரு கருவியாகப் பாருங்கள். சுத்தியல் ஒரு கருவி. அந்தக் கருவியை எப்போது பயன்படுத்துவீர்கள்? ஆணியை அடிக்க மற்றும் ஆணியை எடுக்கும் போது. அதே மாதிரி பணத்தையும் பாருங்கள். பணம் என்பது நிதி விடுதலை மற்றும் அதன் மூலமான நேர விடுதலைக்கான ஒரு கருவி. அவ்வளவு மட்டுமே. மற்றபடி கையில் எப்போதும் சுத்தியலை வைத்திருந்தால் எதைப் பார்த்தாலும் ஆணியாகவே தெரியும். கேள்வ...

பணத்திற்கு அப்பால்

பணத்திற்கு அப்பால் Beyond Money 1. Profit for a company is like oxygen for a person. If you don’t have enough of it, you are out of the game. But if you think your life is about breathing you're really missing something- Peter Drucker மாந்தர்களுக்கு ஆக்சிஜன் எவ்வளவு அத்தியாவசியமோ அதே மாதிரி நிறுவனங்கள் இலாபமீட்ட வேண்டியதும் அவசியம். தேவையான அளவில் அது கிடைக்காவிட்டால் ஆட்டம் முடிந்து விடும். ஆனால் உங்கள் வாழ்க்கையே மூச்சு விடுதலில் கவனம் கொண்டிருக்குமானால் நீங்கள் உண்மையிலேயே ஏதொவொன்றை இழப்பதாக அர்த்தம். 2. Chase the vision not the money. The money will end up following you- Tony Hsieh பணத்தை அல்ல தொலை நோக்கில் கவனம் கொள்ளுங்கள். பணம் தானாக வரும். 3. We don't make movies for money. We make money to make more movies- Walt Disney நாங்கள் பணம் ஈட்டுவதற்காக படம் எடுக்கவில்லை. மேலும் படம் எடுப்பதற்காகப் பணம் ஈட்டுகிறோம். 4. The person who starts simply with the idea of getting rich won't succeed. You must have a larger ambition- John D Rockefeller உங்களின் ஒரே இலட்சியம் பணக்காரர...

வாழ்க்கை பதில்கள் - 2

வாழ்க்கை பதில்கள் - 2 கேள்வி : பங்குச்சந்தை குறித்த வலைப்பூவில் ஏன் வாழ்க்கை பதில்கள் ? பதில் : சற்றே இளைப்பாறுதலின் பொருட்டு . கேள்வி : சிந்திப்பது எப்படி ? பதில் : ஒரு விஷயத்தைக் குறித்து சிந்திக்க வேண்டுமென்றால் அதனைக் குறித்து எழுதிப் பாருங்கள் .  கேள்வி : வாழ்க்கை , சமயங்களில் அலுப்பூட்டுவதாக இருக்கிறது ? பதில் : இரண்டு நாட்களாக கை விரலில் நகச் சுத்தி . அதற்கு முன்னால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருந்ததை இப்போது உணர முடிகிறது . கேள்வி : எனக்கு வயது 58 . இப்போது முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கலாமா ? பதில் : வயது என்பது வெறும் ஒரு எண் மட்டுமே . அரவிந்த் கண் மருத்துவமனையை டாக்டர் வெங்கடசாமி தொடங்கும் போது அவருடைய வயது 58 . HDFC ஐ H T Parekh தொடங்கும் போது அவருடைய வயது 66 . McDonalds நிறுவனத்தை Ray Kroc தொடங்கும் போது அவருடைய வயது 52 . கேள்வி : தவறே செய்யாமல் இருக்க முடியாதா ? பதில் : தவறு செய்யாதவர் எதுவும் செய்யாதவர் . நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்றால் ஏதோ ஒரு புதிய விஷயத்தைத் தொடங்குவதாக அர்த்தம் . அதே சமயம் செய்த தவறையே மீண்டும் செய்யாமல் புதிய தவறுகளைச் செய்யுங்கள் . தன்னைத் தானே ...

வாழ்க்கை பதில்கள் - 1

வாழ்க்கை பதில்கள் - 1 கேள்வி : வேலை-வாழ்க்கை சமநிலையை எப்படி அடைவது? பதில் : நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதனைப் பிடித்துச் செய்தால் அல்லது பிடித்த வேலையைச் செய்தால் இந்த வேலை-வாழ்க்கை சமநிலை என்பதே உங்களுக்குத் தேவைப்படாது. வேலையே உங்கள் வாழ்க்கையாகி விடும். கேள்வி : எல்லாவற்றையும் பொருளாதாரக் கண் கொண்டு தான் பார்க்க வேண்டுமா? பதில் : அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு பொருளாதாரம் இருக்கிறது. இளமையில் கருகருவென்று அடர்த்தியாக இருக்கும் முடி வயதானதன் பின்னர் நரைத்தும் கொட்டியும் விடுகிறது. இது ஏனென்றால் இளமையாக இருக்கும் போது எதிர் பாலினத்தைக் கவரும் பொருட்டு இயற்கை தன் பொருள் ஆதாரத்தை இந்த மாதிரியான அழகுபடுத்தும் செயல்களில் செலவிடுகிறது. வயதானதும் இத்தகைய தேவைகள் குறைகின்றன. இதயம் போன்ற பிற முக்கியத் தேவைகளுக்கு இந்த ஆதாரம் செலவிடப்படுகிறது. எல்லாவற்றுக்கும் பொருளாதாரம் தான் ஆதாரம். அதனைப் பணத்தை மட்டும் கொண்டு பார்க்காமல், அதனினும் மேலான ஒரு பார்வையைக் கொண்டு நோக்க வேண்டும். கேள்வி : மற்றவர்களைப் பார்த்து ஏதோ ஒரு வகையில் பொறாமைப்படுகிறேன். இதிலிருந்து எப்...

இலக்கு குறித்த சில எண்ணங்கள்

இலக்கு குறித்த சில எண்ணங்கள் பங்குகளுக்கு இலக்கு விலை வைத்து விற்பது நம் காலை நாமே வெட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் என்று பார்த்திருக்கிறோம் . முதலீட்டு வாழ்க்கையில் இலக்குகள் வைத்துக் கொள்ளலாமா , அப்படி வைத்துக் கொண்டால் அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை பல்வேறு கோணங்களில் இந்தப் பதிவில் பார்க்கலாம் . முதலீட்டு வாழ்க்கையில் இலக்குகள் வைத்துக் கொண்டு அதனை நோக்கிப் பயணப்படுதல் தவறில்லை . ஆனால் இலக்கை சீக்கிரமாக அடைகிறேன் பேர்வழி என்று இந்தப் பயணத்தை விரைவு படுத்தக் கூடாது . கூட்டு வட்டியை விரைவு படுத்தினால் முதலுக்கே மோசம் நேரலாம் . இலக்கை எட்டிய பின்னர் எக்காரணம் கொண்டும் புதிய இலக்குகளை நோக்கி ஓடக்கூடாது . ஒரு சின்ன சொந்த உதாரணம் மூலமாக இதனை விளக்குகிறேன் . ஒரு காலத்தில் பங்கு மற்றும் இதர முதலீடுகள் மூலமான பணப்பாய்ச்சல் (cash flow) மாதம் 5000 ரூபாய் கிடைத்தால் போதும் என்பதான ஒரு இலக்கு இருந்தது . அந்த இலக்கை எட்டிய பின்னர் வாரம் 5000 கிடைத்தால் தேவலை என்பதான ஒரு எண்ணப்போக்கு . அந்த இலக்கையும் எட்டிய பின்னர் இப்போது வாரம் 10000 கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுக...

ஞாபக சாபம் மறதி வரம்

ஞாபக சாபம் மறதி வரம் Zomato நிறுவன IPO விற்கு விண்ணப்பிக்க மறந்து விட்டதாக நண்பர் ஒருவர் வருத்தப்பட்டுக் கொண்டார் . 100 பங்குகளுக்கு விண்ணப்பம் செய்து அது கிடைக்கப் பெற்றிருந்தால் எவ்வளவு பட்டியல் இலாபம் (listing gain) கிடைக்கப் பெற்றிருக்கும் ? அது நஷ்டமாகி விட்டதாம் . நீங்கள் முதலீடு செய்யாத பங்குகளில் உங்களுக்கான நஷ்டம் பூஜ்யம் என்பதான பொன்மொழி ஞாபகத்திற்கு வந்தது . நான் சொல்ல வந்ததை மறந்து விட்டு எங்கோ சென்று விட்டேன் ! இந்த மறதி குறித்துக் கொஞ்சம் கிட்டே சென்று ஆராயலாம் . முதலீட்டாளர்களின் ஒட்டு மொத்த மறதி தான் அடுத்தடுத்த மீமிகைக் காளைச் சந்தைகளாக உருவெடுக்கிறது . ஒவ்வொரு மீமிகைக் காளைச் சந்தையும் வெடிக்கக் காத்துக் கொண்டிருப்பதான ஒரு நீர்க்குமிழி என்பதை முதலீட்டாளர்கள் மறந்ததால் தானே இத்தகைய சந்தைகள் உருவாகின்றன ? கரடிச் சந்தைகளும் இந்த மறதியினால் தான் பிறக்கின்றன . பன்மடங்காளர் பங்குகளின் பிறப்பிடம் கரடிச்சந்தைகள் என்பதனை முதலீட்டாளர்கள் மறந்ததால் தானே கரடிகள் அவ்வப்போது ஆட்டம் போடுகின்றன ? ஆனால் முதலீட்டாளர்களின் மறதியினால் இவ்வாறு காளைச் சந்தையும் கரடிச் சந்தையும் மாறி மாற...

என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல ?

என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல ? இந்தப் பதிவில் பணத்தைக் கொண்டு எதையெல்லாம் வாங்க முடியாது என்று கொஞ்சம் பார்க்கலாம். பணத்தால் நடத்தை, நேர்மை, மரியாதை, பண்பு நலன், பொது அறிவு, நம்பிக்கை, பொறுமை, ஒருமைப்பாடு மற்றும் அன்பு போன்றவைகளை வாங்க முடியாது. பணத்தால் மெத்தையை வாங்கலாம். தூக்கத்தை வாங்க முடியாது. கணினியை வாங்கலாம். மூளையை வாங்க முடியாது. உணவை வாங்கலாம். பசியார்வத்தை வாங்க முடியாது. அலங்காரத்தை வாங்கலாம். அழகை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம்.  ஆரோக்கியத்தை வாங்க முடியாது. ஆடம்பரத்தை வாங்கலாம். கலாச்சாரத்தை வாங்க முடியாது. கேளிக்கைகளில் ஈடுபடலாம். மகிழ்ச்சியை வாங்க முடியாது. தெரிந்தவர்களைப் பெறலாம். நண்பர்களைப் பெற முடியாது. கீழ்ப்படிதலைப் பெறலாம். விசுவாசத்தைப் பெற முடியாது. காமத்தைப் பெறலாம். காதலைப் பெற முடியாது. நீங்கள் பணக்காரர் ஆக உணர வேண்டுமென்று விரும்பினால் பணத்தால் வாங்க  முடியாத இத்தகைய விஷயங்களை எண்ணிப்பாருங்கள். பணம் என்பது வெறும் எண்கள் மட்டுமே. எண்களுக்கு முடிவே கிடையாது. பணத்தால் மகிழ்ச்சியை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் மகிழ்ச்சிக...