Posts

Showing posts with the label பங்குக் கதைகள்

வணிக வடிவமைப்பு- 2

வணிக வடிவமைப்பு- 2 The Design of Business- 2 பொறுப்புத்துறப்பு: இந்தப் பதிவு இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனப் பங்கினை வாங்குவதற்கான பரிந்துரை அல்ல. The design of business (நிறுவனங்களின் வணிக வடிவமைப்பு) என்ற கருத்தாக்கத்தை விளக்கும் பொருட்டு ஒரு நிறுவனத்தை உதாரணமாகக் கொண்டு இது எழுதப்பட்டிருக்கிறது.              *                *                * Never invest in any idea you can't illustrate with a crayon- Peter Lynch  ஒரு வண்ணக்குச்சியைக் கொண்டு உங்கள் எண்ணக்கருக்களை விளக்க முடியாத எதிலும் முதலீடு செய்யாதீர்கள்.              *                *               * Federal Reserve: Plumber of the financial system               ...

மறைந்திருக்கும் உண்மைகள்

மறைந்திருக்கும் உண்மைகள் PE Multiple என்று கூறப்படும் விலை-வருவாய் விகிதம் பற்றி ஏற்கெனவே படித்திருக்கிறோம்.  நிறுவனப்பங்கு ஒன்றின் விலை, அது ஈட்டும் ஒரு பங்கு வருவாயின் எத்தனை மடங்குகளில் வர்த்தகமாகிறது என்ற விகிதமே விலை-வருவாய் விகிதம்.  அதற்கான சமன்பாடு: விலை-வருவாய் விகிதம்= பங்கின் விலை ÷ ஒரு பங்கு வருவாய் பங்கு ஒன்றின் விலை நமக்கு எதையும் தெரிவிப்பதில்லை.  பங்கு ஒன்றின் விலையைக் கொண்டு அது மலிவு அல்லது அதிகம் என்பதான எந்த ஒரு முடிவுக்கும் நாம் வரமுடியாது. பங்கு ஒன்றின் PE எவ்வளவு என்று பார்ப்பது தான் சரியான ஒரு பார்வையாக இருக்கும். ஒரு பங்கு 1000 ரூபாய் என்ற விலையில் மலிவாகவும் (PE 10) மற்றொரு பங்கு 100 ரூபாய் என்ற விலையில் விலை அதிகமாகவும் (PE 20) இருக்கும். மேலும், பங்குகளின் விலையைப் பார்க்கும் போது அதன் முக மதிப்பையும் (face value) கணக்கில் கொள்ள வேண்டும். Groww நிறுவனப்பங்கு ரூ.191.55 என்ற விலையில் வர்த்தகமாகிறது. அதன் விலை மலிவாக இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அது வெறும் தோற்றம் மட்டுமே. அதன் முக மதிப்பு ஒரு ரூபாயாகவும் அதன் PE, 56.34 என்ற உயர் அளவீட்டிலும் ...

கதைகளின் கதை- 2

கதைகளின் கதை - 2 Narrative Fallacy - 2 'வாரன் பஃபெட், Berkshire Hathaway என்கிற நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஒரு ஜவுளி நிறுவனமாகத் தொடங்கப்பட்டது, இன்று, பல்வேறு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வெற்றிகரமான ஒரு முதலீட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. அதன் சந்தை மதிப்பு 95.353 டிரில்லியன் அமெரிக்க டாலர். அது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பஃபெட், அதன் பங்குகள் மூலமாக உலகப் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்' Berkshire Hathaway நிறுவனத்தைக் குறித்து இவ்வாறு விளக்குவது narrative fallacy ன் பாற்பட்டது. எந்த ஒரு நிறுவனமும் இவ்வாறு நேர் கோட்டில் பயணித்திருக்காது. நாம் Berkshire Hathaway நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்து அதன் இன்று வரையிலான கதையை ஒரு பருந்துப் பார்வையாகப் பார்க்கலாம்.  பஃபெட், அவர் முதலீட்டாளர்களுக்கு வருடாவருடம் எழுதும் கடிதத்தில் அவருடைய தவறுகளை முதலில் பட்டியலிடுவது வழக்கம். அந்த வகையில் பஃபெட்டின் முக்கியமான சில தவறுகளை முதலில் பார்க்கலாம்.   Berkshire Hathaway ஜவுளி ஆலையை...

பங்காதாய வளர்ச்சி முதலீடு

பங்காதாய வளர்ச்சி முதலீடு Dividend Growth Investing  பங்குச்சாமி அந்த நிறுவனப்பங்குகளை 1990 களின் ஆரம்பத்தில் அதன் முதல் பொது வெளியீட்டில் வாங்கினார். ஒரு பங்கின் விலை நூறு ரூபாய் என்று நூறு பங்குகளை வாங்கியதாக ஞாபகம். நிறுவனப்பங்கு, சந்தையில் ஐம்பது சதவீத அதிக விலையில் பட்டியலிடப்பட்டது. பங்குச்சாமியின் பெயர் தான் பங்குச்சாமியே தவிர அவருக்குப் பங்குச்சந்தை நெளிவு சுளிவுகள் அவ்வளவாகத் தெரியாது. அவருடைய பங்குச்சந்தை நண்பர் சில நாட்கள் சென்று அவரைச் சந்தித்த போது அந்தப் பங்குகளை விற்று இலாபத்தைப் பிடித்தாயா என்பதாகக் கேட்டார். விற்கவில்லை என்று கூறியதும் ஒருமாதிரி ஙே என்பதாகப் பார்த்தார். நாங்களெல்லாம் அதன் பங்குகளைப் பத்து நாட்களில் விற்று சரிபாதி இலாபம் எடுத்து விட்டோம், இந்த இலாபத்திற்கு ஆண்டாண்டு வருமானம் (Annualised yield) எவ்வளவு தெரியுமா என்றும் கேட்டார். பங்குச்சாமியின் மனதில் பத்து நாட்களில் 50 சதவீதம் இலாபம் என்ற கணக்கில் ஆண்டு முழுவதும் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு எவ்வாறு கிட்டும் என்பதான ஒரு வினா எழுந்தது. இதற்கிடையில் நிறுவனம் அதன் முதல் பங்காதாயத்தை 1994 ஆம் ஆண்டு வழங்கிய...