Posts

Showing posts with the label ஊக வணிகம்

பெறுதிகள் ஏன் தேவை ?

பெறுதிகள் (Derivatives) ஏன் தேவை ? நண்பர் ஒருவரின் கேள்வி . Call option மற்றும் Put option போன்ற பெறுதிகள் (derivatives) கொத்துக் கொத்தாகக் கொல்லும் ஆயுதங்கள் (weapons of mass destruction) என்று பஃபெட் கூறுகிறார் . சமீபத்திய Sebi ஆய்வறிக்கை ஒன்று  பத்துக்கு ஒன்பது பெறுதி (F&O) வர்த்தகர்கள் நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர் என்று கூறுகிறது . எனில் அரசாங்கம் அவைகளைத் தடை செய்தால் என்ன ? நியாயமான கேள்வி . ஆனால் பெறுதிகளுக்கு ஒரு நியாயம் இருக்கிறது .  நீங்கள் பத்து இலட்சம் பெறுமானமுள்ள ஒரு பங்குத் தொகுப்பை (portfolio) வைத்திருப்பதாகக் கொள்ளலாம் . பங்குச்சந்தை உயர் அளவிலான PE க்களில் வர்த்தமாவதாகவும் கொள்ளலாம் . குறுகிய கால அளவில் பங்குச்சந்தைப் புள்ளிகள் குறையும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் . இந்த சூழ்நிலையில் நீங்கள் உங்கள் பங்குத் தொகுப்பின் மதிப்பைக் காக்கும் பொருட்டு put option எடுத்துக் கொள்ளலாம் . இது பொதுவாக short என்பதாக அழைக்கப்படுகிறது . இன்னொரு சூழ்நிலை . பங்குச்சந்தை தரை தட்டி விட்டது . இனி கீழே செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு . மேலே செல்வதற்கான வாய்ப்புகள் அதி...

விருப்பமில்லாத் திருப்பங்கள்

விருப்பமில்லாத் திருப்பங்கள் நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 100 ரூபாய் என்று கொள்ளலாம் . குறுகிய காலத்தில் அந்தப் பங்கின் விலை 110 ரூபாயை எட்டும் என்பதாக நீங்கள் கணிக்கிறீர்கள் . உங்கள் கையில் இப்போது 1000 ரூபாய் இருக்கிறது . பங்குகளாக வாங்கினால் உங்களால் 1000 ரூபாய்க்கு 10 பங்குகளை மட்டுமே வாங்க முடியும் . அதனையே call option முறையில் அழைப்பு நிலைப்பாடு (110 call) ஒன்றை எடுத்துக் கொண்டால் ஒரு அழைப்பு விருப்பம் 2 ரூபாய் என்ற கணக்கில் 1000 ரூபாய்க்கு 5 விருப்ப ஒப்பந்தங்களை (ஒவ்வொரு ஒப்பந்தமும் 100 அழைப்பு விருப்பங்களை உள்ளடக்கியது) வாங்கிக் கொள்ளலாம் . பங்கின் விலை நீங்கள் எதிர்பார்த்த மாதிரி 10 ரூபாய் உயர்ந்தால் ஒரு அழைப்புக்கு 110 - (100 + 2) = 8  என்ற கணக்கில் 500 அழைப்புகளுக்கு (5 விருப்ப ஒப்பந்தங்களுக்கு) 4000 ரூபாய் உங்களுக்குக் கிடைக்கும் . நீங்கள் 1000 ரூபாய்க்கு வாங்கிய விருப்பத் தேர்வு செலவைக் கழித்தால் உங்களுக்கான இலாபம் 3000 ரூபாய் . இதில் உராய்வுச் செலவுகள் கணக்கில் கொள்ளப்படவில்லை . பங்குகளாக வாங்கினால் உங்களுக்கான இலாபம் வெறும் 10 சதவீதம் மட்டுமே . அதே சமயம் பங்குகள் உய...

நிழற்சண்டை

நிழற்சண்டை பெறுதிகளுக்கு (Derivatives) விளக்கம் தேவை என்பதாக நண்பர் ஒருவர் கேட்டிருக்கிறார் . பெறுதிகளை விரிவாக விளக்கத் தொடங்கினால் அந்த விளக்கத்திற்குள் நாமே காணாமல் போய் விடுவோம் . எனவே அவைகளைக் குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம் . தெரியாத ஒன்றைத் தெரிந்த ஒன்றைக் கொண்டு புரிந்து கொண்டால் சுலபமாக இருக்கும் . அந்த அடிப்படையில் தெரியாத பெறுதிகளைத் தெரிந்த பங்குகளைக் கொண்டு புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் . பெறுதிகளின்  முக்கியமான இரண்டு வகைகளான Futures மற்றும் Options குறித்துக் கொஞ்சம் நெருங்கிச் சென்று ஆராயலாம் . பங்குகளுக்குத் தன்னளவில் மதிப்பு உண்டு . அவை பங்காதாயங்களை வழங்கும் . முதலீட்டுப் பெருக்கம் அடையும் . சந்தை விலையை விடக் குறைவான விலையில் அவை உரிமைப் பங்குகளை வழங்கும் . இலவசப் பங்குகளை அளிக்கும் . பங்குப் பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பு என்று பணப்பலன்கள் பலவற்றையும் அளிக்கும் .  பெறுதிகளுக்குத் தன்னளவில் மதிப்பு கிடையாது . பெறுதிகளுக்கு ஏன் பெறுதிகள் என்ற பெயர் என்றால் பெறுதிகள் தங்களது மதிப்பை மற்றவைகளிலிருந்து பெறுவதால் அவை பெறுதிகள் என்று அழைக்கப்படுகின்றன . ...

செய்முறை வர்த்தகம்

செய்முறை வர்த்தகம் Algo Trading செய்முறை வர்த்தகம் என்பது மனித உணர்வுகளைக் களைந்த , முன்பே தீர்மானிக்கப்பட்ட சில அளவுருக்களின் (parameters) அடிப்படையில் கணினி மூலமாகப் பங்கு வியாபாரத்தை மேற்கொள்வதான ஒரு வியாபார முறையாகும் . இந்த அளவுருக்கள் பங்குகளின் விலை சார்ந்தோ , எண்ணிக்கை சார்ந்தோ , பங்குகளை வாங்குவதற்கான நேரம் சார்ந்தோ எவ்விதம் வேண்டுமானாலும் இருக்கலாம் . 1987 ல் அமெரிக்கப் பங்குச்சந்தை ஒரு மாபெரும் சரிவைச் சந்தித்தமைக்கு இந்த செய்முறை வர்த்தகம் தான் காரணம் . பங்குச்சந்தையில் நாம் அன்றாடம் சந்திக்கும் stop loss ( நஷ்டம் தவிர்த்தல் - பங்கின் விலை நாம் வாங்கிய விலையை விட ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைந்ததும் விற்று விடுவது) மற்றும் target price ( இலாபத்தைப் பிடித்தல் - பங்கின் விலை நாம் வாங்கிய விலையை விட  ஒரு குறிப்பிட்ட சதவீதம் கூடியதும் விற்று விடுவது) போன்றவையும் இந்த செய்முறையின் பாற்பட்டது தான் . செய்முறை வர்த்தகத்தைப் புரிந்து கொள்ள பங்கு வர்த்தகத்தின் இந்த இரண்டு முக்கியக் கருவிகளான நஷ்டம் தவிர்த்தல் மற்றும் இலாபத்தைப் பிடித்தல் என்பதைக் கொஞ்சம் கிட்டே சென்று ஆராயலாம்...

சூது கவ்வும்

சூது கவ்வும் Speculation Quotes 1. The best way to throw the dice is to throw them away . பகடைக் காய்களைச் சிறந்த முறையில் வீசி எறிவது என்பது அவற்றை வெளியே வீசி எறிவதாகும் .  2. The most difficult task in speculation is not prediction but self-control . Successful trading is difficult and frustrating . You are the most important element in the equation for success - Linda Raschke ஊக வணிகத்தில் கடினமான காரியம் முன் கணிப்பல்ல அது சுய கட்டுப்பாடு . வெற்றிகரமான வியாபாரம் என்பது கடினமானது மற்றும் விரக்தி விளைவிப்பது . வெற்றிக்கான இந்த சமன்பாட்டில் உங்கள் பங்கு மிக முக்கியமானதாகும் . 3. Speculation is only a word covering the making of money out of the manipulation of prices instead of supplying goods and services - Henry Ford ஊக வணிகம் என்பது பொருட்களையோ அல்லது சேவைகளையோ உருவாக்காது பணத்தை மட்டும் உருவாக்குவதாகும் . 4. Intuitive powers played a central role in my scientific work , not wild speculation - Einstein என்னுடைய விஞ்ஞான வேலைகளில் உள்ளுணர்வு ஒரு பிரதான இடத்தை வகிப்பதாக இருக்கிறத...

பங்குச்சந்தை சூதாட்டக்களமா ?

பங்குச்சந்தை சூதாட்டக்களமா ? அல்ல , அது சொத்து உருவாக்கும் களம் . பங்குச்சந்தையில் பெரும்பான்மையான வர்த்தகங்கள் தின மற்றும் குறுகிய கால அளவுகளில் பங்குகளின் ஏற்ற இறக்கங்களைப் பணமாக்கம் செய்யும் விதமாக சூதாடும் ஒரு தன்மையுடன் இருப்பதென்னவோ உண்மை தான் . பெரும்பாலோனோர் இவ்வாறு செய்வதால் நாம் பங்குச்சந்தையை ஒரு சூதாட்டம் என்று ஒட்டு மொத்தமாகப் புறந்தள்ளக்கூடாது . பங்குச்சந்தையின் தலையாய பலன்களாக முதல் உருவாக்கம் (Capital Formation) மெய்நிகர் பணம் (Virtual Money) மற்றும் நீர்மை நிறைத்தன்மை (Liquidity) போன்றவற்றைக் குறிப்பிடலாம் . இவற்றைப் பார்ப்பதற்கு முன்னர் பொதுவாக வெவ்வேறு சந்தைகளில் நடைபெற்று வரும் சூதாட்டம் குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம் . வீடு மற்றும் நிலம் : பங்கு முதலீடுகளுடன் ஒப்பிடும் போது வீடு மற்றும் நில முதலீடுகள் நீண்ட கால அளவிலும் ஒரு நிலைத்தன்மையுடனும் இருப்பது கண்கூடு . பங்கு விலைகள் அன்றாடம் வெளியாவது மாதிரி வீடு மற்றும் நிலங்களின் விலைகள் தின அளவில் வெளி வருவதில்லை . யாராவது வீடு போன்ற சொத்துக்களை எப்போதாவது விற்கும் போது மட்டும் ஒரு ஆர்வம் என்ற அளவில் என்ன விலைக்குப் ...

குறுகிய வழி

குறுகிய வழி நண்பர் ஒருவர் ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஒரு சிலர்    தினசரி வணிகம்  ,  ரூபாய் பங்கு முதலீடுகள்  மற்றும் பெறுதிகள் (F & O) வாயிலாகத் தொடர்ச்சியாகப் பணம் ஈட்டிய வண்ணம் இருக்கிறார்களே, அதைக் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதாகக் கேட்டார்.  ஒரு சிலர் என்பதில் ஒரு திருத்தம். ரொம்பவும் அபூர்வமான மிக ஒரு சிலர். Richard Lustig என்பவர் 7 முறை லாட்டரியில் மிகப்பெரிய பரிசுகளை வென்றிருக்கிறார். Learn how to increase your chances of winning the lottery என்று புத்தகம் கூட எழுதியிருக்கிறார். இப்படி ஒரு சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். இது விதிவிலக்கான மிகவும் சிறுபான்மை. நாம் பெரும்பான்மையைத் தான் கணக்கில் கொள்ள வேண்டும்.  தினசரி வர்த்தகம் மூலமாகவோ அல்லது ரூபாய் பங்கு முதலீடு மற்றும் பெறுதிகள் மூலமாகவோ பணம் ஈட்டி உலகப் பணக்காரர்கள் வரிசையில் யாரும் இடம் பெறவில்லை. பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குதாரர் என்ற அடிப்படையில் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அதே மாதிரி மதிப்பு முதலீட்டின் மூலம...

மாயமான் வேட்டை

மாயமான் வேட்டை நண்பர் ஒருவரின் கேள்வி. காய்கறி வியாபாரம் செய்பவர் காலை 500 ரூபாய் உடன் சந்தைக்கு வருகிறார். காய்கறிகளைக் கொள்முதல் செய்கிறார். மாலைக்குள் தெருத்தெருவாகச் சுற்றிக் காய்கறிகளை விற்று விடுகிறார். அதில் ஒரு இலாபம் கிடைக்கப் பெறுகிறது. இது தான் அவருடைய தினசரி நடைமுறை. அல்லது தட்டச்சு அலுவலகம் ஒன்றைப் பாருங்கள். அங்கு ஆதாரமாக என்ன நடக்கிறது? காலையில் பூஜ்யத்தில் தொடங்கும் அந்த அலுவலகத்தில் மாலைக்குள் குறைந்த பட்சமாக 500 ரூபாய் சம்பாதிக்கலாம். இதே மாதிரி பங்குச்சந்தையில் ஏன் சம்பாதிக்க முடியாது? காலையில் பங்குகளை வாங்க வேண்டியது, மாலைக்குள் விற்று விட்டு ஏன் இலாபம் பார்க்க முடியாது? அல்லது பங்குத் தரகு நிறுவனங்கள் சொல்வது மாதிரி குறுகிய கால அளவில் இலக்கு விலை வைத்து ஏன் இலாபம் சம்பாதிக்கக் கூடாது? சுருக்கமாகச் சொல்வதென்றால் பங்குச்சந்தையில் ஏன் தினசரி மற்றும் குறுகிய கால வணிகம் செய்யக்கூடாது? ஏனென்றால் பங்குச்சந்தை தினசரி மற்றும் குறுகிய கால அளவுகளில் சீரற்ற நடை (random walk)  தான் பயிலும். அதுவும் தினசரி வணிகம் பூவா தலையா என்ற அடிப்படையில் தான் நகரும். தினசரி பத்து வர்த்...

ரூபாய் பங்கு முதலீடு

ரூபாய் பங்கு முதலீடு Rupee Stock Investing தமிழில் ரூபாய் பங்குகள் என்று அழைக்கப்படும் Rupee Stocks பற்றிய ஒரு பேச்சு வந்தது. என் நண்பர் ஒருவரின் 'ஒரு நாள்' நண்பர் இந்த ரூபாய் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலமாக தினம் இலட்சங்களில் சம்பாதிக்கிறாராம். உண்மை விவரிக்கப்படும் போதே பொய்யாகிறது என்ற பொன்மொழி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. முன்பெல்லாம் நண்பர் இந்த மாதிரி தகவல்களைக் கேட்டால் கொஞ்சம் சோர்வாகி விடுவார். நாம் எல்லாம் ஒன்றுக்கும் இலாயக்கில்லை ... இத்யாதி... இத்யாதி... இப்போது கொஞ்சம் பரவாயில்லை. இந்த நேரத்தில் ஒரு இரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். காதைக் கொஞ்சம் கிட்டே கொண்டு வாருங்கள். மேலும் இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்லி விடாதீர்கள். இந்த மாதிரி தின வர்த்தகம் மூலமாக ஒருவர் இலட்சங்களில் சம்பாதிப்பதாக நான் கேள்விப்பட்டால் எனக்கும் ஒரு விதமான மனச்சோர்வு வந்து விடும். பொறாமையினால் அல்ல, மாறாக நாம் செல்லும் பாதை சரியானது தானா என்பதான ஒரு கேள்வி எழுந்து விடும். உடனே நான் என்ன செய்வேன் என்றால் முதலீட்டாளர்களின் பைபிள் என்று அழைக்கப்படும் The Intelligent Investor ப...