சூது கவ்வும்
சூது கவ்வும்
Speculation Quotes
1. The best way to throw the dice is to throw them away .
பகடைக் காய்களைச் சிறந்த முறையில் வீசி எறிவது என்பது அவற்றை வெளியே வீசி எறிவதாகும் .
2. The most difficult task in speculation is not prediction but self-control . Successful trading is difficult and frustrating . You are the most important element in the equation for success - Linda Raschke
ஊக வணிகத்தில் கடினமான காரியம் முன் கணிப்பல்ல அது சுய கட்டுப்பாடு . வெற்றிகரமான வியாபாரம் என்பது கடினமானது மற்றும் விரக்தி விளைவிப்பது . வெற்றிக்கான இந்த சமன்பாட்டில் உங்கள் பங்கு மிக முக்கியமானதாகும் .
3. Speculation is only a word covering the making of money out of the manipulation of prices instead of supplying goods and services - Henry Ford
ஊக வணிகம் என்பது பொருட்களையோ அல்லது சேவைகளையோ உருவாக்காது பணத்தை மட்டும் உருவாக்குவதாகும் .
4. Intuitive powers played a central role in my scientific work , not wild speculation - Einstein
என்னுடைய விஞ்ஞான வேலைகளில் உள்ளுணர்வு ஒரு பிரதான இடத்தை வகிப்பதாக இருக்கிறதேயன்றி கட்டற்ற அனுமானங்கள் அல்ல .
5. There are two times in a man's life when he should not speculate : when he can't afford it and when he can - Mark Twain
ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் இரண்டு தருணங்களில் ஊக வணிக நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது . ஒன்று அவனால் இயலாத போது , மற்றொன்று அவனால் இயலும் போது .
6. Investing is an activity of forecasting the yield over the life of the asset and speculation is the activity of forecasting the psychology of the market - Keynes
முதலீடு என்பது ஒரு சொத்திலிருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தை அனுமானிப்பது . ஊக வணிகம் என்பது சந்தை உளவியலை அனுமானிப்பது .
7. An investment operation is one which , upon thorough analysis , promises safety of principal and an adequate return . Operations not meeting these requirements are speculative - Benjamin Graham
முதலீடு என்பது முதலுக்குப் பாதகமில்லாமலும் அதே சமயம் போதுமான வருமானத்தைக் கொடுப்பதாகவும் இருப்பது . இந்த இரண்டையும் நிறைவேற்றாதவை ஊக வணிகத்தின் பாற்பட்டவை .
8 . Speculation leads you the wrong way . It allows you to put your emotions first , whereas investment gets emotions out of the picture - John C Bogle
ஊக வணிகங்கள் உணர்ச்சியை முன்னிறுத்தி உங்களைத் தவறான திசையில் வழிநடத்திச் செல்லும் . முதலீடு என்பது உணர்ச்சிகளைக் களைந்த ஒன்றாகும் .
9. To be attached to mere speculation is to be directed by a dream - Humphry Devy
வெறும் ஊக வணிகங்களில் திளைப்பது கனவின் கட்டளையில் கட்டுண்டு கிடப்பது போன்றது .
10.Time puts an end to speculation in opinions , and confirms the laws of nature - Cicero
காலம் , ஊகத்தன்மைக்கு முடிவு கட்டுவதாகவும் இயற்கை விதிகளை உறுதி செய்வதாகவும் இருக்கும் .
Comments
Post a Comment