பங்குச்சந்தை நகை அகராதி- 2
பங்குச்சந்தை நகை அகராதி- 2 Funny stock market dictionary- 2 (நகைச்சுவைக்காக மட்டும். யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை) 52 Week high stocks 52 வார உயர்வு என்று முதலீடு செய்யப்படாத பங்குகள்; தொடர்ந்து 52 வார உயர்வில் வர்த்தகமாகும் பங்குகள். 52 Week low stocks 52 வார குறைவு என்று முதலீடு செய்யப்படும் பங்குகள்; தொடர்ந்து 52 வார குறைவில் வர்த்தகமாகும் பங்குகள். Analyst பங்குகளை வாங்க (விற்க) உற்சாகப்படுத்துபவர்கள். Average down பணம் இருக்கும் வரை அல்லது பங்கு இருக்கும் வரை மேற்கொள்ளப்படும் முதலீடு. Banker காற்றிலிருந்து பணத்தை வரவழைப்பவர். Capitalism பொருளாதாரம் நன்கு செயல்படும் போது பாராட்டப்படுவது. Conservative விளிம்புக் கணக்கு (Margin Account) இல்லாதவர். Credit Rating companies நிறுவனங்கள் திவாலான பின்னர் தரவரிசையைத் தடாலடியாகக் குறைக்கும் நிறுவனங்கள். Currency Market 24 மணிநேர சூதாட்ட நிலையம். Depression பொருளாதார நிபுணர் வேலை இழந்தால் அதற்காக அவர் சொல்லும் காரணம். Index Funds இயலாமை என்பதன் உண்மையான வெளிப்பாடு. Inflation பணக்காரர் ஆவதற்கான சுலபமான வழிமுறை. IPO லாட்டரிச் சீட்டு...