பணமாக்கம் பாவமல்ல
பணமாக்கம் பாவமல்ல பங்குச்சந்தையில் பணமாக்கம் (profit booking) செய்வது பாவமல்ல. முதலீடு செய்வதின் முக்கிய நோக்கமே பின்னாட்களின் பணத்தேவைக்காக ஒரு பணப்பாய்ச்சலை (cash flow) உருவாக்கிக் கொள்வது தான். ஆனால் பணமாக்கம் என்பதை ஒரு சடங்கு மாதிரி செய்யக்கூடாது. தேவைக்கு விற்பது என்பது வேறு. பங்கு இரண்டு மடங்கானதும் விற்று வைப்பது என்பது வேறு. இரண்டு மடங்கானதும் பங்குகளை விற்று விட்டால் நூறு மடங்காளர்களை எவ்விதம் கைப்பற்ற முடியும்? குறைந்த பட்சம் பத்தாண்டுகள் தேவைப்படாத பணத்தை மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்னரே ஒரு அவசரத்தேவை. வேறு வழியில்லாமல் பங்குகளைப் பணமாக்கம் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை. அப்போது என்ன செய்யலாம்? பங்குகளில் முதலீடு செய்வது ஒரு கலை. அவ்வாறு முதலீடு செய்த பங்குகளைப் பணமாக்கம் செய்வது மற்றுமொரு கலை. பணமாக்கம் செய்யும் போது உங்கள் பங்குத் தொகுப்பிலிருந்து அடிச் செங்கல்லை உருவுவது மாதிரியான செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பங்குத் தொகுப்பின் ஒருங்கமைவிற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் உங்கள் செயல்பாடு அமையவேண்டும். பங்குத்த...