01-01-2033 இண்ட்ரஸ்டிங் டைம்ஸ் செய்திச் சிதறல்கள்
01-01-2033 இண்ட்ரஸ்டிங் டைம்ஸ் செய்திச் சிதறல்கள் News feed from Interesting Times dated 01-01-2033 Warren Buffett @103 and counting வாரனுக்கு வயது 103 ... வாரன் பஃபெட் உலகின் மூத்த முதலீட்டாளர் என்ற பெருமைக்கு உரியவராகி இருக்கிறார் . கூட்டு வட்டி back loaded என்ற அளவில் அதன் அருமை பெருமைகளை பின்னாட்களில் தான் உணர முடியும் . அந்த அடிப்படையில் கூட்டு வட்டியின் பிரம்மாண்டத்தை தன் வாழ்நாட்களிலேயே பார்த்த முதல் முதலீட்டாளர் என்ற பெருமையையும் பஃபெட் பெறுகிறார் . ITC bites the demerger bullet . ITC நிறுவனப் பிரிப்பு நீண்ட நெடுங்காலமாக நிலுவையில் இருந்த ITC நிறுவனப் பிரிப்புக்கான பூர்வாங்க வேலைகள் வரும் பிப்ரவரி தொடங்கி அக்டோபரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ITC நிறுவனப் பங்கு ஒன்றுக்கு ITC , ITC Hotels , ITC FMCG , ITC Holdings என்ற நான்கு நிறுவனப் பங்குகள் வழங்கப்படவுள்ளன . ESG கருத்தாக்கம் வலுப்பெற்று அதன் விளைவாக ITC பங்கு ஒற்றை இலக்க PE க்களில் தொடர்ந்து வர்த்தகமானதை ஒட்டி இந்த நிறுவனப் பிரிப்பு மேற்கொள்ளப்படுகிறது . Jockey stock skyrocket ஜாக்கி பங்கு விண்ணை...