Simon Sinek - சொ(பொ)ற்குவை
Simon Sinek - சொ(பொ)ற்குவை
1. Dream big , start small , but most of all , start .
பெரும் கனவுகளைக் காணுங்கள் . சிறியதாகத் தொடங்குங்கள் . அதனினும் முக்கியமாகத் தொடங்குங்கள் .
2. Working hard for something we don't care about is called stress . Working hard for something we love is called passion .
பிடிக்காத செயல்களின் பொருட்டுக் கடினமாக உழைப்பது மன அழுத்தம் என்று அழைக்கப்படும் . பிடித்த செயல்களின் பொருட்டுக் கடினமாக உழைப்பது பேரார்வம் என்று அழைக்கப்படும் .
3. The challenge of the unknown future is so much more exciting than the stories of the accomplished past .
தெரியாத எதிர்காலத்தின் சவால்கள் தெரிந்த இறந்த காலத்தின் கதைகளை விட பன்மடங்கு உற்சாகம் தருவதாக இருக்கின்றன .
4. When you're an optimist , life has a funny way of looking after you .
நீங்கள் நன்னம்பிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் , வாழ்க்கை , விசித்திரமான முறைகளில் உங்களுக்கு வழிகாட்டும் .
5. Greatness is not born from one success . It's born from persevering the countless failed attempts that preceded .
மகத்துவம் என்பது வெற்றியில் பிறக்கவில்லை . அது வெற்றியின் முன்னதான எண்ணிலடங்காத தோல்விகளில் பிறக்கிறது .
6. Focus on long term success . But be willing to make short term adjustments to get there .
நீண்ட கால வெற்றியில் கவனத்தைக் குவியுங்கள் . அந்த வெற்றியை அடைய குறுகிய கால சீரமைப்பையும் மேற்கொள்ளுங்கள் .
7. Success is when reality catches up to your imagination .
வெற்றி என்பது மெய்மை கற்பனையைச் சந்திக்கும் போது நிகழ்வது .
8. Companies don't do business with companies ; people do business with people .
நிறுவனங்கள் நிறுவனங்களுடன் வியாபாரம் செய்வதில்லை . மக்கள் மக்களுடன் வியாபாரம் செய்கிறார்கள் .
9. When people are financially invested , they want a return . When people are emotionally invested they want to contribute .
மக்கள் நிதி சார்ந்து முதலீடு செய்யும் போது வருமானத்தை எதிர்பார்க்கின்றனர் . அவர்கள் உணர்வு சார்ந்து முதலீடு செய்யும் போது வருமானத்தை அளிக்கின்றனர் .
10. The big picture doesn't come from distance alone ; it also comes from time .
முழுமை என்பது தூரத்தினால் மட்டும் வருவதில்லை . அது காலத்தினாலும் வரும் .
Comments
Post a Comment