Posts

Showing posts with the label காலம்

பணத்தின் நேர மதிப்பு

பணத்தின் நேர மதிப்பு Time value of money Waiting can make you older not richer . காத்திருத்தல் உங்களை வயதானவர் ஆக்குமேயன்றிப் பணக்காரர் ஆக்காது .             *                     *                  * இன்று கையில் கிடைக்கப்பெறும் பணத்தின் மதிப்பு , அதன் சம்பாதிக்கும் சக்தியால் , எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் பணத்தின் மதிப்பை விட எப்போதும் உயர்ந்தது . இந்த உயர் மதிப்பு பணத்தின் நேர மதிப்பு என்று அழைக்கப்படுகிறது .  இன்று உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கிடைப்பதாகக் கொள்ளலாம் . வங்கி சேமிப்புக்கணக்கில் அதனை வைத்திருந்தால் வருடத்திற்கு வட்டியாக 2.75 சதவீதம் (ரூ.2750) கிடைக்கும் . நிரந்தர வைப்பில் வைத்திருந்தால் 6.75 சதவீதம் (ரூ.6750) அதுவே பரஸ்பர நிதி முதலீடாக இருந்து , சந்தை காளைத்தனமாக இருந்தால் 15 சதவீதம் (ரூ.15000) பங்குகளாக வைத்திருந்தால் 20 சதவீதம் (ரூ.20000) இது தான் பணத்தின் நேர மதிப்பு . நீங்கள் முதலீடு செய்யும் முறையைப் பொற...

அரிய வளம்

அரிய வளம் (Scarce Resource) நான் ... அதைப்பற்றி அப்புறம் ...  நீங்கள் பிறந்த நாளிலிருந்து உங்களுக்கு ஒரு வங்கிக் கணக்கு துவங்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா ? அது மட்டுமல்ல , இந்தக் கணக்கில்  தினந்தோறும் 86400 ரூபாய் மதிப்புள்ள பணம் வரவு வைக்கப்படுகிறது.  நீங்கள் ஏழை பணக்காரன் என்பது முக்கியமில்லை. உங்கள் நிறம் கருப்பு சிவப்பு என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மதம் மொழி இனம் என்ற எந்தப் பாகுபாடும் காட்டப் படுவதில்லை. விடிந்து எழுந்தால் உங்கள் வங்கிக்கணக்கில் இந்தப் பணம் வரவு வைக்கப்பட்டு விடும். ஆனால் ஒரேயொரு சின்னப் பிரச்னை. இந்தப் பணத்தை அன்றன்றைய தினம் நீங்கள் செலவழித்து விட வேண்டும். நீங்கள் இந்தப் பணத்தைச் செலவழித்தாலும் சரி செலவழிக்காவிட்டாலும் சரி அன்றைய இரவில் இது பூஜ்யமாகி விடும்.  இந்தப் பணத்தைச் செலவழிக்காமல் வைத்திருந்து வட்டி வருமானங்களை எதிர்பார்க்க முடியாது. Overdraft வசதியெல்லாம் கிடையாது. இந்தப் பணம் கொஞ்சம் மர்மமானது. இந்தப் பணத்தைப் புரிந்து தெளிந்து பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் அடையப் பெறும் உயரங்கள் அளவிட முடியாத அளவுகளில் இருக்கும். இ...

காலம்

காலம் சின்ன வயதில் கால் பரீட்சை விடுமுறை என்பது ஒரு நீண்ட நெடிய காலமாகத் தோன்றும். அந்தப் பத்து நாள் விடுமுறை என் முன்னால் உட்கார்ந்து என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் காலம் இறக்கை கட்டிப் பறப்பதாகத் தோன்றுகிறது.  என் நண்பர் ஒருவர் எல்லாவற்றிக்கும் கிரிக்கெட்டை உதாரணம் காட்டிப் பேசுவார். அவருடைய பாஷையில் சொல்வதானால் ஓவர் கம்மியாக இருப்பதால் இவ்வாறு தோன்றுகிறதோ என்னவோ?  என்னுடன் பணி புரிந்து ஓய்வு பெற்ற சிலரின் பெரிய பிரச்னை இந்த நேரத்தைத் தள்ளுவது தான். பொழுதே போகவில்லை என்று புகார் சொல்லிய வண்ணம் இருப்பார்கள். ஏதாவது ஒரு துறையில் தீரா ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது பிழைப்பீர்கள். எனக்கு நேரம் போதாமை என்பது ஒரு பெரும் பிரச்னையாக இருக்கிறது. பங்குச்சந்தை குறித்துப் படிக்க வேண்டிய புத்தகங்கள் இன்னும் எண்ணற்றவை இருக்கின்றன. படித்த புத்தகங்களையே கொஞ்ச காலம் கழித்துத் திரும்பவும் படித்தால் புதுப்புது அர்த்தங்கள் தென்படும். தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் நம் பார்வை விசாலமடைகிறது. புதிய கோணங்கள் பார்க்கக் கிடைக்கிறது. வாரன் பஃபெட், வாழ்க்கைய...

காலத்தை வாங்க முடியுமா ?

காலத்தை வாங்க முடியுமா ? அமீபா போன்ற நுண்ணுயிரிகள் ஒற்றைப் பரிமாணம் கொண்டவை. ஒரு காகிதத்திற்கு இரட்டைப் பரிமாணங்கள். நீளம் மற்றும் அகலம். தடிமனைப் புறக்கணித்து விடலாம். நாம் முப்பரிமாண உலகில் வாழ்கிறோம். நீளம், அகலம் மற்றும் உயரம். நான்காவது பரிமாணம் என்பது  காலம்  . மூன்று பரிமாணவாசிகள் மூன்றாவது, இரண்டாவது மற்றும் ஒற்றைப் பரிமாணங்களை உணர வல்லவை. அதே மாதிரி இரண்டு பரிமாணவாசிகள் இரண்டு மற்றும் ஒற்றைப் பரிமாணங்களை உணரவல்லவை. அதாவது, நம் பரிமாணத்தையும், நமக்குக் கீழே உள்ள பரிமாணங்களையும் மட்டுமே நம்மால் உணர முடியும். இரண்டு பரிமாணக் காகித உலகில் சில உயிரினங்கள் வாழ்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு பென்சிலைக் கொண்டு அந்தக் காகிதத்தில் துளையிட்டால் அந்தக் காகித ஊரின் உயிரினங்களால் அந்தப் பென்சிலைப் பார்க்க முடியாது. மூன்றாவது பரிமாணமான பென்சிலின் உயரம் அவர்கள் அறிந்திராதது. அவர்களைப் பொறுத்தவரையில் அந்தக் காகித ஊரில் திடுதிப்பென்று ஒரு துளை விழுந்ததாக மட்டுமே உணர முடியும். நான்காம் பரிமாணமான காலம் என்ற ஒன்று இருப்பதை நம்மால் உணர முடியுமே தவிர அதில் நம்மால் முன் பின்னாகப் பயண...