Posts

Showing posts with the label மன மாதிரிகள்

பாதுகாப்பு வரம்பு

பாதுகாப்பு வரம்பு Margin of safety  பத்து டன் எடையைத் தாங்கும் பாலத்தில் ஐந்து டன் எடையை மட்டும் கொண்டு செல்வது பாதுகாப்பு வரம்பு (margin of safety) என்று அழைக்கப்படுகிறது. இரயில் எட்டு மணிக்குப் புறப்படும் என்றால் ஏழரை மணிக்கே இரயில் நிலையம் சென்றடைந்து விடுவது பாதுகாப்பு வரம்பு.  பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க இது ஒரு முக்கியமான கல்யாண குணமாகப் பார்க்கப்படுகிறது.  நூறு ரூபாய் உள்ளார்ந்த மதிப்பு (intrinsic value) உள்ள பங்கை ஐம்பது ரூபாய்க்கு வாங்குவது பாதுகாப்பு வரம்பு. ஆக, பாதுகாப்பு வரம்பு என்பதைப் பின்வருமாறு வரையறுக்கலாம். பாதுகாப்பு வரம்பு = உள்ளார்ந்த மதிப்பு - சந்தை விலை பங்குச்சந்தையில் மனித உணர்ச்சிகளும் முட்டி மோதிக் கொள்வதால் பங்குகள் குறுகிய கால அளவில் அவற்றின் உள்ளார்ந்த மதிப்பை விடவும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வர்த்தகமாகும் வாய்ப்பு எப்போதும் உள்ளது.  பங்குகளின் 52 வாரக் குறைந்த விலைக்கும் அவற்றின் 52 வார அதிக விலைக்கும் ஆகப்பெரிய இடைவெளி இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்கான முழுமுதற்காரணம் முதலீட்டாளர்களின் உணர்ச்சிப்பெருக்கே அன்றி வேறென்...

கதை சொல்லல் மொழிகளும் அதற்கான கதைகளும்- 2

கதை சொல்லல் மொழிகளும் அதற்கான கதைகளும்- 2 6. If history were taught in the form of stories, it would never be forgotten- Rudyard Kipling வரலாறு கதைகளாகக் கற்பிக்கப்பட்டால், அது ஒருபோதும் மறக்கப்படாது. அலெக்ஸாண்டரின் கடைசி மூன்று ஆசைகள். மாவீரன் அலெக்ஸாண்டர் மரணப் படுக்கையில் இருந்தபோது, இப்பூவுலகிற்கு மிக முக்கியமான தத்துவங்களை உணர்த்துவதற்காகத் தன் படைத்தளபதிகளிடம் மூன்று இறுதி ஆசைகளைக் கூறினார். அவையாவன: முதல் ஆசை: தனது இறுதி ஊர்வலத்தில், சவப்பெட்டியை அந்த நாட்டின் ஆகச்சிறந்த மற்றும் முதன்மையான மருத்துவர்கள் மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். இதற்கான விளக்கம்: மரணம் என்ற ஒன்று வந்துவிட்டால், இந்த உலகத்தில் உள்ள எவ்வளவு பெரிய சிறந்த மருத்துவர்களாலும் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாது என்பதை மாந்தர் புரிந்து கொள்ள. இரண்டாம் ஆசை: சவப்பெட்டி கொண்டு செல்லப்படும் பாதை முழுவதும் தான் போரிட்டுக் கைப்பற்றிய தங்கம், வைரம் மற்றும் விலைமதிப்பற்ற செல்வங்களை வாரி இறைக்க வேண்டும்.  இதற்கான விளக்கம்: வாழ்நாள் முழுவதும் பேராசையோடு நாம் சேர்க்கும் எந்தவொரு செல்வமும், நாம் இறந்த பிறகு நம்மோடு வரப்போவதில...

கதை சொல்லல் மொழிகளும் அதற்கான கதைகளும்- 1

க தை சொல்லல் மொழிகளும் அதற்கான கதைகளும்- 1 1. Stories are memory aids, instruction manuals and moral compasses- Aleks Krotoski கதைகள் என்பவை நினைவாற்றலுக்கு உதவும் கருவிகள், வழிகாட்டும் கையேடுகள் மற்றும் அறநெறி சார்ந்த திசைகாட்டிகள் ஆகும்.   ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை? விவசாயி ஒருவனுக்கு சிறிய அளவிலான நிலம் மட்டுமே சொந்தமாக இருந்தது. கூடுதல் நிலம் கிடைக்கப்பெற்றால் யாருக்கும் அடிமை வாழ்க்கை வாழத் தேவையில்லை என்பதாக அவனது எண்ணப்போக்கு ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் ஒரு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கப்பெறுகிறது. போட்டி இது தான். அதாவது சூரியன் உதிப்பதில் தொடங்கி அவன் ஓடத் தொடங்கலாம். சூரியன் மறைவதற்குள் அவன் ஓடத் தொடங்கிய இடத்தை மீண்டும் அடைந்து விட வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ஓடிய நிலம் அனைத்தும் அவனுக்கே சொந்தம். விவசாயி, இந்தப் போட்டியில் கலந்து கொண்டு ஓடத் துவங்குகிறான். நண்பகல் நேரம். இப்போது திரும்பினால் தான் சரியாக இருக்கும் என்று அறிவு எச்சரித்தும் மனது கேட்கவில்லை. மதிய உணவு கூட உண்ணாமல், தாகம் தணிக்காமல் தொடர்ந்து அவன் ஓடிக்கொண்டே இருக்கிற...

கதை கேளு! கதை கேளு!

கதை கேளு! கதை கேளு! Story telling Quotes  1. Stories are memory aids, instruction manuals and moral compasses- Aleks Krotoski கதைகள் என்பவை நினைவாற்றலுக்கு உதவும் கருவிகள், வழிகாட்டும் கையேடுகள் மற்றும் அறநெறி சார்ந்த திசைகாட்டிகள் ஆகும். 2. Sometimes reality is too complex. Stories give it form- Jean Luc Godard சில சமயங்களில் யதார்த்தம் மிகவும் சிக்கலானது. கதைகள் அதற்கு ஒரு வடிவத்தை அளிக்கின்றன. 3. Authors do not choose a story to write, the story chooses us- Richard P. Denney எழுத்தாளர்கள் எழுதுவதற்கு ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பதில்லை; கதை தான் எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்கிறது. 4. To hell with facts! We need stories!- Ken Kese உண்மைகள் தொலைந்து போகட்டும்! நமக்குக் கதைகள் மட்டுமே தேவை!  5. Stories are a communal currency of humanity- Tahir Shah கதைகள் என்பவை மனிதகுலத்தின் பொதுவான நாணயங்கள். 6. If history were taught in the form of stories, it would never be forgotten- Rudyard Kipling வரலாறு கதைகளாகக் கற்பிக்கப்பட்டால், அது ஒருபோதும் மறக்கப்படாது. 7. The human species thinks in me...

எழுதுவது எப்படி?

எழுதுவது எப்படி? Writing is thinking in paper என்று William Zinsser சொன்னதுடன் எனக்கு முழு சம்மதம். எழுதுவது என்பது காகிதத்தில் சிந்திப்பது. அல்லது Google Notes ல் சிந்திப்பது. கூறியது கூறல் கூடாது. தேவையில்லாத வாசகங்கள் தேவையில்லாத இடங்களில் இடம் பெறக்கூடாது. ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செக்காவ் கூறியது மாதிரி, திரைப்படத்தில், துப்பாக்கி ஒன்றை சுவரில் மாட்டியிருப்பதாகக் காண்பித்தால் படம் முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்தே ஆக வேண்டும். வாசகங்களை அமைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 'கண்டேன் சீதையை' என்பதற்கும் 'சீதையைக் கண்டேன்' என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இராமன் சீதையைக் காணாமல் கண்ணீர் விட்டுக் கவலையே வடிவாய் இருக்கிறான். சீதையைத் தேடிச் சென்ற அனுமன் அசோகவனத்தில் சீதை இராவணனால் சிறை பிடிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதனை இராமனிடம் தெரிவிக்க வருகிறான். அனுமன், சீதையைக் கண்டேன் என்று சொல்லியிருக்கலாம். சீதையை முன்னிறுத்திச் சொல்லும் போது அனுமன் சீதையைக் கண்டானா இல்லையா என்பது தொக்கி நிற்கிறது. அந்தத் தொக்கம் ஒரு வினாடி தான் என்றாலும் இராமனுக்கு அந்தக் கஷ்ட...

திறமை வளையம்

திறமை வளையம் Circle of Competence  ஒருவருக்கு நன்கு தெரிந்த, புரிந்த நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்வதான கருத்தாக்கம் முதலீட்டின் திறமை வளையம் (circle of competence) என்பதாக அழைக்கப்படுகிறது. திறமை வளையம் என்பதான இந்தக் கருத்தாக்கம் வாரன் பஃபெட் பரிந்துரைத்த முதலீட்டு உத்திகளில் முக்கியமான ஒன்றாகும்.  நீங்கள் ஒரு மருத்துவராக இருக்கும் பட்சத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் குறித்த உள்ளார்ந்த புரிதல் உங்களுக்கு இருக்கும். அத்தகைய நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்வது உங்களுக்கான ஒரு திறமை வளையமாக இருக்கும்.  முதலீட்டாளர்களுக்கு நிதி மற்றும் அது சார்ந்த துறைகளில் கூடுதல் புரிதல் இயற்கையாகவே இருக்கும். எனது பங்குத்தொகுப்பில் நிதி மற்றும் நிதி சார் துறைகள் 20 சதவீத இடத்தைப் பிடித்திருப்பது நான் திறமை வளையத்திற்குள்ளாக செயல்படுவதற்கான மறைமுகமான ஆதாரமாகும். அதற்காக மருத்துவர்கள் அவர்கள் துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென்றோ முதலீட்டாளர்கள் நிதி சார்ந்த துறைகளில் மட்டும் இயங்க ...

தலைகீழ் விகிதங்கள் - 4

தலைகீழ் விகிதங்கள் - 4 தரமான நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் தேவையில்லை. எங்காவது கூகுள் நிறுவன விளம்பரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? சிறந்த கதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளும், தரமான பங்கு தன்னைத்தானே வாங்கிக் கொள்ளும் என்பது மாதிரி தரமான நிறுவனங்களுக்கும் விளம்பரங்கள் தேவையில்லை. ஆனால் எல்லா நிறுவனங்களுக்கும் விளம்பரங்களே தேவையில்லை என்று சொல்லி விடவும் முடியாது. சரி, விளம்பரங்களை எப்படி மலிவாக அதே சமயம் பயனாளர்களைச் சரியான முறையில் சென்று சேரும் படி கொடுப்பது? இந்த வகையில் கூகுள் நிறுவனம் ஓரளவு உதவிகரமாக இருக்கிறது. விளம்பரங்களை எப்படிக் கொடுக்கக்கூடாது மற்றும் எப்படிக் கொடுக்க வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். Greg McLemore என்பவர் pets.com என்கிற வளர்ப்புப் பிராணிகளுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் நிகழ்நிலையில் (online) விற்பனை செய்வதான நிறுவனம் ஒன்றைத் தொடங்குகிறார். 1998ல் அமெரிக்க வளர்ப்புப் பிராணிகள் (pet) துறையின் சந்தை மதிப்பு யுஎஸ் டாலர் 23 பில்லியன். பிரச்னை என்னவென்றால் petsmart.com மற்றும் petstore.com என்று புற்றீசல் மாதிரி நிறைய நிறுவனங்கள் இதே...

சுரங்கப் பார்வை

சுரங்கப் பார்வை Tunnel Vision சுரங்கப் பார்வை என்பது உங்கள் கண் முன்னால் தெரிவதை மட்டும் பார்ப்பது . Peripheral Vision என்று அழைக்கப்படும் அதற்கு மேலே , கீழே மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்சிகள் உங்கள் கண்களுக்குப் புலனாகாது . முன்னொரு காலத்தில் பூமி இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்பதான ஒரு பார்வை தான் இருந்தது . அப்புறம் சூரியன் தான் மையம் என்றும் பூமி உள்ளிட்ட கிரகங்கள் அதனைச் சுற்றி வருவதான ஒரு பார்வை . இப்போது milky way என்பதாக அழைக்கப்படும் நமது பால்வீதியில் (Galaxy) மட்டும் 200 பில்லியன் (200 வுடன் 9 பூஜ்யங்களைப் பெருக்கிக் கொள்ளவும்) ஏன் அதற்கும் மேலான சூரியனை ஒத்த நட்சத்திரங்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள் . அதே மாதிரி நம்முடைய பால்வீதியைப் போல் இரண்டு டிரில்லியன் (2 போட்டு 12 பூஜ்யங்கள்) ஏன் அதற்கும் மேலான வீதிகள் இருப்பதாக ஒரு கணக்கு . ஆக , இந்தப் பூமி பிரபஞ்சத்தின் மையம் இல்லை . இன்னும் சொல்லப்போனால் பிரபஞ்சத்திற்கு மையம் என்பதே கிடையாது . ஒரு மிகப்பெரிய மைதானத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் . உங்கள் கண்ணிற்கெட்டிய தூரம் வரை மைதானம் தான் . அப்போது நீங்கள் எங்கே நின...