மனநிலையே மருந்து

மனநிலையே மருந்து

Attitude matters

1. Sometimes when you are in a dark place you think you have been buried , but you are actually planted - Christine Caine

எப்போதாவது இருட்டில் இருந்தால் நீங்கள் புதைக்கப்பட்டதாக எண்ண வேண்டாம் . உண்மையில் நீங்கள் விதைக்கப்பட்டிருக்கிறீர்கள் .

2. Nothing can dim the light which shines from within - Maya Angelou

உங்களுக்கு உள்ளிருந்தே ஒளிரும் வெளிச்சத்தை எதுவும் மங்கச் செய்ய முடியாது .

3. It is not what happen to you but how you react to it that matters - Epictetus

உங்களுக்கு என்ன நடந்தது என்பது பிரச்னையில்லை . அதற்கு நீங்கள் எவ்விதம் எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்பது மட்டுமே முக்கியமானது .

4. A man sees in the world what he carries in his heart - Goethe

ஒரு மனிதன் இதயத்தில் எதனை ஏந்திச் செல்கிறானோ அதனையே வெளி உலகிலும் பார்க்கிறான் .

5. We lost because we told ourselves we lost - Leo Tolstoy

நாம் இழக்கிறோம் , ஏனென்றால் நாம் இழப்பதாக நமக்கு நாமே சொல்லிக் கொள்வதால் .

6. I am not a product of my circumstances. I am a product of my decisions - Stephen Covey

நான் சூழ்நிலைகளால் ஆக்கப்படவில்லை . நான் எடுக்கும் முடிவுகளால் ஆக்கப் பட்டிருக்கிறேன் .

7. When you can't change the direction of the wind - adjust your sails - H Jackson Brown Jr

காற்றின் திசையை மாற்ற இயலவில்லை என்றால் பாய்மரத்தை சரிப்படுத்துங்கள் .

8. Attitude is Altitude - Nick Vujicic

மனநிலை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும் .

9.There is nothing either
good or bad but thinking makes it so - Shakespeare

நன்மை , தீமை என்று தனிப்பட்டு ஏதுமில்லை . நமது எண்ணங்கள் அவற்றை உருவாக்குகின்றன .

10.Better to be emotionally intelligent than intellectually Intelligent - Neil Strauss

அறிவு சார்ந்த கூர்மதியை விட உணர்வு சார்ந்த கூர்மதியே சிறந்தது .

11.Perpetual optimism is a force multiplier - Colin Powell

நிரந்தரமான நன்னம்பிக்கை ஒரு சிறந்த உந்து விசையாகும் .

12.The ideal attitude is to be physically loose and mentally tight - Arthur Ashe

உடல்ரீதியாக தளர்வாகவும் உளரீதியாக இறுக்கமாகவும் இருப்பதே சிறந்த மனநிலை .

13.Never regret a day in your life . Good days give happiness . Bad days give experience . Worst days give lessons . And best days give memories

வாழ்க்கையில் எந்த நாளைக் குறித்தும் மனக்குறை கொள்ள வேண்டாம் . இனிய நாட்கள் மனமகிழ்ச்சியைத் தருகின்றன . மோசமான நாட்கள் அனுபவங்களைத் தருகின்றன . மிக மோசமான நாட்கள் பாடங்களைத் தருகின்றன . மிக இனிய நாட்கள் நினைவுகளைத் தருகின்றன .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14