01-01-2033 இண்ட்ரஸ்டிங் டைம்ஸ் செய்திச் சிதறல்கள்

01-01-2033 இண்ட்ரஸ்டிங் டைம்ஸ் செய்திச் சிதறல்கள் 

News feed from Interesting Times dated 01-01-2033


Warren Buffett @103 and counting
வாரனுக்கு வயது 103 ...

வாரன் பஃபெட் உலகின் மூத்த முதலீட்டாளர் என்ற பெருமைக்கு உரியவராகி இருக்கிறார் . கூட்டு வட்டி back loaded என்ற அளவில் அதன் அருமை பெருமைகளை பின்னாட்களில் தான் உணர முடியும் . அந்த அடிப்படையில் கூட்டு வட்டியின் பிரம்மாண்டத்தை தன் வாழ்நாட்களிலேயே பார்த்த முதல் முதலீட்டாளர் என்ற பெருமையையும் பஃபெட் பெறுகிறார் .


ITC bites the demerger bullet .
ITC நிறுவனப் பிரிப்பு

நீண்ட நெடுங்காலமாக நிலுவையில் இருந்த ITC நிறுவனப் பிரிப்புக்கான பூர்வாங்க வேலைகள் வரும் பிப்ரவரி தொடங்கி அக்டோபரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ITC நிறுவனப் பங்கு ஒன்றுக்கு ITC , ITC Hotels , ITC FMCG , ITC Holdings என்ற நான்கு நிறுவனப் பங்குகள் வழங்கப்படவுள்ளன . ESG கருத்தாக்கம் வலுப்பெற்று அதன் விளைவாக ITC பங்கு ஒற்றை இலக்க PE க்களில் தொடர்ந்து வர்த்தகமானதை ஒட்டி இந்த நிறுவனப் பிரிப்பு மேற்கொள்ளப்படுகிறது .


Jockey stock skyrocket
ஜாக்கி பங்கு விண்ணைத் தொட்டது

Page Industries நிறுவனப் பங்கு நேற்றைய அமர்வில் முதன்முறையாக Rs.100000/- என்ற விலையைத் தொட்டு வரலாற்று சாதனை படைத்தது . இந்தியப் பங்குச்சந்தையில் ஆறு இலக்கத்தில் வர்த்தகமாகும் முதல் பங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது . இருந்தும் முதலீட்டாளர்கள் இலாப நோக்கம் கருதி விற்றதால் பங்கின் விலை Rs. 95678 ல் நிலை பெற்றது . நிறுவனம் நாளது தேதி வரை இலவசப்பங்களிப்பு மற்றும் பங்குப் பிரிப்பு எதனையும் மேற்கொள்ளவில்லை . 2007 ஆம் ஆண்டின் IPO விலையான 395 ரூபாய் என்பதைக் கொண்டு கணக்கிட்டால் ஒரு இலட்சம் என்ற விலையில் ஜாக்கி பங்கு 253 மடங்காளர் (CAGR 24.78%)


MF NAV in 5 digits
பரஸ்பர நிதி NAV ஐந்து இலக்கங்களில்

பரஸ்பர நிதி வரலாற்றில் 5 இலக்க NAV ஐ முத்தமிடும் முதல் நிதி என்ற பெருமையை Nippon India Growth Fund (முந்தைய Reliance Growth Fund) தட்டிச் செல்கிறது . அதன் தொடக்க NAV ஆன 10 ரூபாயைக் கணக்கில் கொண்டால் நாளது தேதியில் அது 1000 மடங்காளர் (1000 bagger) கூட்டு வட்டியின் முதல் விதி அதனைத் தேவையின்றி இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கக்கூடாது என்பதாகும் . அந்த இடர்ப்பாடு பங்காதாய வடிவில் வந்தாலும் அதனைத் தவிர்த்தே ஆக வேண்டும் . பரஸ்பர நிதி பங்காதாயங்களை வாங்கி அதனை நீங்கள் செலவழித்து விட்டாலோ அல்லது வேறு முதலீடுகளின் மூலமாக அந்தப் பரஸ்பர நிதி தரும் வருமானங்களை விடக் குறைவான வருமானங்களைப் பெற்றாலோ உங்களுக்கான முதலீட்டு வருமானம் குறைந்து விடும் .


Piramal Pharma turns ex- split
பிரமல் பார்மா பங்குப் பிரிப்பு

பிரமல் பார்மா , ரூபாய் 10 முக மதிப்பைக் கொண்ட பங்குகளை 5 ரூபாய் என்று பிரித்துள்ளது . இந்த 5 ரூபாய் பங்குகள் நேற்றைய அமர்வில் 892 ரூபாய் என்ற விலையில் நிலை கொண்டன .


Tata Sons listing ?
டாடா சன்ஸ் பட்டியலிடப்படுகிறதா ?

டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடும் எண்ணம் எதுவுமில்லை என்று அதன் முதன்மை நிர்வாக அதிகாரி திரு. சந்திரசேகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் . டாடா சன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் டாடா அறக்கட்டளை வசம் உள்ளதால் அறம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த விஷயங்கள் (Ethical and cultural issues) பட்டியலிடுதலுக்கு ஆதரவாக இல்லை , மேலும் , டாடா சன்ஸ் நிறுவனம் ( பட்டியல் ) இலாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு ஒரு போதும் செயல்பட்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார் . நிறுவனம் சார்ந்து முடிவெடுக்கும் அதிகாரம் நிறுவனத்தைப் பட்டியலிடுவதன் மூலமாக நீர்த்தலுக்கு உள்ளாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதாக அவர் மேலும் கூறினார் . டாடா சன்ஸ் நிறுவனம் ஒருவேளை பட்டியலிடப்பட்டால் holding company discount ஐயும் மீறி மாபெரும் மதிப்புத் திறப்பு வாய்ப்பு உருவாகும் என்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது .


Lessons from Crpto Bubble
க்ரிப்டோ குமிழி பாடங்கள்

கடைசியில் அது நிகழ்ந்தே விட்டது . பிட்காயின் அதன் உண்மை மதிப்பான பூஜ்யம் என்ற அளவை நேற்று எட்டியது . இந்த மெய் நிகர் நாணயக் குமிழியிலிருந்து முதலீட்டாளர்கள் சில பாடங்களையாவது  கற்றுக் கொண்டிருப்பார்களா என்று பஃபெட்டிடம் கேட்ட போது அவரின் பதில் : குமிழிகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவென்றால் குமிழிகளிலிருந்து நாம் எதனையும் கற்றுக் கொள்வதில்லை .


Sensex value 103142


Forthcoming Bonus Issues
வரவிருக்கும் இலவசப் பங்களிப்புகள்

Emami 1:1 Bonus
50 வது ஆண்டு நிறைவு

Havells 1:2 Bonus
50 வது ஆண்டு நிறைவு

HUL 1:1 Bonus
100 வது ஆண்டு நிறைவு

Reliance 1:1 Bonus
60 வது ஆண்டு நிறைவு


Forthcoming Stock Splits
வரவிருக்கும் பங்குப் பிரிப்புகள்

Avenue Supermarts 10:1

Sundaram Finance 10:1

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14