பணத்திற்கு அப்பால்
பணத்திற்கு அப்பால்
Beyond Money
1. Profit for a company is like oxygen for a person. If you don’t have enough of it, you are out of the game. But if you think your life is about breathing you're really missing something- Peter Drucker
மாந்தர்களுக்கு ஆக்சிஜன் எவ்வளவு அத்தியாவசியமோ அதே மாதிரி நிறுவனங்கள் இலாபமீட்ட வேண்டியதும் அவசியம். தேவையான அளவில் அது கிடைக்காவிட்டால் ஆட்டம் முடிந்து விடும். ஆனால் உங்கள் வாழ்க்கையே மூச்சு விடுதலில் கவனம் கொண்டிருக்குமானால் நீங்கள் உண்மையிலேயே ஏதொவொன்றை இழப்பதாக அர்த்தம்.
2. Chase the vision not the money. The money will end up following you- Tony Hsieh
பணத்தை அல்ல தொலை நோக்கில் கவனம் கொள்ளுங்கள். பணம் தானாக வரும்.
3. We don't make movies for money. We make money to make more movies- Walt Disney
நாங்கள் பணம் ஈட்டுவதற்காக படம் எடுக்கவில்லை. மேலும் படம் எடுப்பதற்காகப் பணம் ஈட்டுகிறோம்.
4. The person who starts simply with the idea of getting rich won't succeed. You must have a larger ambition- John D Rockefeller
உங்களின் ஒரே இலட்சியம் பணக்காரர் ஆவது என்றால் நீங்கள் அதை ஒருபோதும் அடைய மாட்டீர்கள். அதனை விட மேம்பட்ட இலக்கு ஒன்றை நீங்கள் கைக்கொள்ள வேண்டும்.
5. One crore in the bank account is not the fantasy. The fantasy is the lifestyle of complete freedom it supposedly allows- Timothy Ferriss
வங்கிக் கணக்கில் ஒரு கோடி என்பது வெறும் வெற்றுக் கற்பனை அல்ல. அந்தக் கற்பனை அனுமதிக்கும் முழு சுதந்திர வாழ்க்கை முறையை அது சார்ந்துள்ளது.
6. The best way to make money in a business is not to think too much about making it- Henry Ford
ஒரு தொழிலில் பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி, அதைச் சம்பாதிப்பது பற்றி அதிகம் யோசிக்கக் கூடாது.
7. If you work just for money, you'll never make it, but if you love what you're doing, success will be yours- Ray Kroc
நீங்கள் பணத்திற்காக வேலை செய்தால், அதை ஒருபோதும் மனமுவந்து செய்ய மாட்டீர்கள், ஆனால் நீங்கள் செய்வதை மனமுவந்து செய்தால் வெற்றி உங்களுடையதாக இருக்கும்.
8. I have concentrated all along on building the finest retailing company that we possibly could. Period. Creating a huge personal fortune was never particularly a goal of mine- Sam Walton
எங்களால் முடிந்த மிகச்சிறந்த சில்லறை விற்பனை நிறுவனத்தை உருவாக்குவதில் தான் நான் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறேன். ஒரு பெரிய தனிப்பட்ட செல்வ வளத்தை உருவாக்குவது ஒருபோதும் என்னுடைய இலக்காக இருந்ததில்லை.
9. Buffett enjoys his wealth as a demonstration of his skill as an investor not for the material goods it brings.
பஃபெட் தனது செல்வத்தை, அது கொண்டு வரும் பொருட்களுக்காக அல்ல, மாறாக, ஒரு முதலீட்டாளராக தனது திறமையின் நிரூபணமாகவே அதனை அனுபவிக்கிறார்.
10. Happiness is not a mere possession of money; it lies in the joy of achievement, in the thrill of creative effort- Franklin Roosevelt
மகிழ்ச்சி என்பது வெறும் பணத்தின் உடைமையினால் மட்டும் கிடைக்கப்பெறுவதல்ல; அது சாதனையின் மகிழ்ச்சியிலும், ஆக்கப்பூர்வமான முயற்சியின் சிலிர்ப்பிலும் உள்ளது.
Comments
Post a Comment