கூட்டு விளைவு
கூட்டு விளைவு
The Compound Effect
1. The first rule of compound interest is to never interrupt it unnecessarily - Charlie Munger
கூட்டு வட்டியின் முதல் விதி அதனைத் தேவையின்றி இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கக்கூடாது என்பதாகும்.
2. My life has been the product of compound interest - Buffett
எனது வாழ்க்கை கூட்டு வட்டியால் ஆனது.
3. When it comes to compounding, percentage losses and gains are not equal . Avoid large losses - Frank Martin
கூட்டுப்பெருக்கத்தில் ஒவ்வொரு சதவீத இலாபமும் நஷ்டமும் சமம் அல்ல. எனவே பெரும் நஷ்டத்தைத் தவிருங்கள்.
4. Relatively small divergences in annual compounded returns over many years result in dramatic differences in terminal wealth - Nick Train
கூட்டுப்பெருக்கத்தின் சிறிய மாறுபாடுகள் கூட நாளடைவில் உங்கள் செல்வத்தின் இறுதி மதிப்பில் மாபெரும் மாற்றங்களை நிகழ்த்துவதாக இருக்கும்.
5. The compound effect is the principle of reaping huge rewards from a series of small, smart choices - Darren Hardy
கூட்டு விளைவு என்பது தொடர்ச்சியான சிறிய சிறந்த தேர்வுகளால் ஆகப்பெரிய ஆதாயங்களைப் பெறுவதான ஒரு வழிமுறையாகும்.
6. Understanding both the power of compound interest and the difficulty of getting it is the heart and soul of understanding a lot of things - Charlie Munger
கூட்டு வட்டியின் மகோன்னதத்தைப் புரிந்து கொள்வது மற்றும் அதனைப் தெளிந்து தேர்வது எவ்வளவு கடினமாக இருக்கிறதென்பதை அறிந்து கொள்வது பல விஷயங்களைப் புரிந்து கொள்வதன் அடிப்படையாக உள்ளது.
7. Compounding is backloaded. 99 percent of Buffett's wealth was earned after his 50th year of age.
கூட்டுப்பெருக்கம் முதலீட்டுக் காலத்தின் பின்னாட்களில் தான் பலன் தருவதாக இருக்கும். வாரன் பஃபெட்டின் 99 சதவீத செல்வ வளம் அவருடைய 50 வயதிற்குப் பின்னர் தான் உருவாக்கம் பெற்றது.
8. A modest rate of return can accumulate a fortune over time. You don't need to beat the market, do over leveraging, or pick the best stock to be rich - Naved Abdali
குறைந்த அளவிலான வருமான விகிதங்கள் கூட நாளடைவில் பெரும் செல்வ வளத்தை உருவாக்கும். அதற்காக நீங்கள் சந்தையை வெல்லத் தேவையில்லை, கடன் வாங்கி முதலீடு செய்யத் தேவையில்லை, தரமான பங்குகளை வாங்க வேண்டிய அவசியம் கூட ஏதுமில்லை.
9. There will be good years and there will be bad years but the compounding will continue on unabated - Pietros Maneos
நல்ல வருடங்கள் நகர்ந்து செல்லும், கெட்ட வருடங்கள் கடந்து செல்லும், கூட்டு விளைவு தொடர்ந்து செல்லும்.
10. Investing is not about a once in a life time opportunity. It is a life long journey of prudent investments that grow with time - Naved Abdali
முதலீடு என்பது வாழ்க்கையில் ஒரு முறை மட்டும் வருவதான வாய்ப்பு அல்ல. அது வாழ்க்கை முழுவதற்குமாக வளர்ந்து வரும் விவேகமான முதலீட்டு முடிவுகளின் ஒரு தொடர் பயணமாகும்.
Comments
Post a Comment